பிக் பாஸ் தமிழ் 8 : விஜய் சேதுபதியால் காப்பாற்றப்பட்ட சாச்சனா... சுனிதா EVICTED!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் இந்த வாரம் நிகழ்ந்த எவிக்ஷன் ரசிகர்களுக்கு ஒரு பரபரப்பான அனுபவமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதியின் வார இறுதி எபிசோடுகள் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக எவிக்ஷன் முறையில் நடக்கும் திருப்பங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளன. இந்த வாரத்தில், அனைவரும் விஜய் சேதுபதி சாச்சனாவை வெளியேற்றுவார் என எதிர்பார்த்த நிலையில், சுனிதா கோகோயை வெளியேற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்துள்ள எவிக்ஷனில் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு புதிய சர்ப்ரைஸ்களை கொடுத்து வருகிறார். கடந்த வாரம், 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு மூலம் புதிய போட்டியாளர்களாக வீட்டுக்குள் நுழைந்ததுடன், எவிக்ஷன் இல்லை எனவும் அறிவித்தார் விசே. ஆனால், இந்த வாரம் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், டபுள் எவிக்ஷன் இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. இருப்பினும், டபுள் எவிக்ஷன் இல்லை என்பதும் ஒரு சர்ப்ரைஸாக அமைந்தது.
சாச்சனாவும் சுனிதாவும் வெளியில் செல்வதற்கான வீடியோக்கள் தயாராக இருந்தது. சாச்சனாவே வெளியேறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைந்த வாக்குகளின் காரணமாக சுனிதா கோகோய் வெளியேற்றப்பட்டார். இந்த முடிவு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுனிதாவை விட சாச்சனாவுக்கு குறைந்த ஆதரவு என்று சொல்லப்படும் நிலையில், விஜய் சேதுபதி எடுத்த முடிவு பலரின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துள்ளது.