பிக் பாஸ் தமிழ் 8
பிக் பாஸ் தமிழ் 8

பிக் பாஸ் தமிழ் 8 : இந்த வார எலிமினேஷனில் 8 பேர்… வெளியேறும் ஆபத்தில் அருண், சத்யா?!

பிக் பாஸ் தமிழ் 8 சீசனின் மூன்றாவது வாரத்துக்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. இதில் 8 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
Published on

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ன் மூன்றாவது வாரத்துக்கான நாமினேஷன் நேற்று நடந்தது. இதில் தீபக்கும், தர்ஷாவும் நேரடி நாமினேஷனில் இடம்பிடித்திருக்கிறார்கள். 

6 பேர் செளந்தர்யாவை நாமினேட் செய்ய, 5 பேர் ஜாக்குலினை நாமினேட் செய்திருக்கிறார்கள். அன்ஷிதா, சத்யாவும் தலா 5 வாக்குகளோடு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். முத்துக்குமரன், சத்யா இருவரும் தலா 2 வாக்குகளோடு நாமினேட் ஆகியிருக்கிறார்கள்.

பிக் பாஸ் தமிழ் 8
பிக் பாஸ் தமிழ் 8

இதன்படி பவித்ரா, செளந்தர்யா, முத்துக்குமரன், ஜாக்குலின், அன்ஷிதா, அருண் பிரசாத், தர்ஷா, சத்யா என 8 பேரும் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே ஆண்கள் அணியில் இருந்து கடந்த இரண்டு வாரங்களாக ரவீந்தர், அர்னாவ் ஆகியோர் எலிமினேட் ஆகியிருக்கும் நிலையில் மூன்றாவது வாரமும் ஆண்களில் ஒருவதான் எலிமினேட் ஆவார்கள் எனத்தெரிகிறது. டேஞ்சர் ஸோனில் இருப்பது அருண் பிரசாத்தும், சத்யாவும். அநேகமாக சத்யாவே வெளியேற வாய்ப்பிருக்கிறது!

இதற்கிடையே இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரியாக ஆண் போட்டியாளர் ஒருவர் களமிறக்கப்பட இருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com