விஜய் சேதுபதி கொடுத்த அதிர்ச்சி... முதல் நாளிலேயே எவிக்ஷன்... யார் அந்த போட்டியாளர்?!
பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி நேற்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை இந்தமுறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். முதல் நாள் நிகழ்ச்சியை பெரிய ஷாக்கிங் சர்ப்ரைஸோடு முடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
மொத்தம் 9 ஆண்கள், 9 பெண்கள் என கேர்ள்ஸ் வெர்சஸ் பாய்ஸ் என்கிற கான்செப்ட்படி ஆட்டம் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் நாளில் எல்லோரும் வீட்டுக்குள் போய் செட்டில் ஆனதும் பேசிய விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் இறுதியில் ''நான் சொல்லப்போற ஆட்டம் என்னன்னா… அடுத்த 24 மணி நேரத்துல ஒருத்தர் எலிமினேட் ஆகப்போறாங்க… அது உங்கள்ல யார்னுறதப் பத்தி பெருசா யோசிக்காம, புலம்பாம நிம்மதியா படுத்து தூங்குங்க… அடுத்த வாரம் உங்களை மீட் பண்றேன்'’ எனச் சொன்னார்.
இதனால் முதல் நாளிலேயே பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பு எகிறியிருக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சி எடிட் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் நாளிலேயே எலிமினேட் செய்யப்பட்டிருப்பவர் இளம் போட்டியாளராக களமிறக்கப்பட்ட சச்சனா என உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் உலாவருகிறது. சச்சனா ‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது எலிமினேஷனா அல்லது சீக்ரெட் ரூமில் இருந்து மீண்டும் உள்ளே வருவார்களா என்பது வரும் வாரம் தெரிந்துவிடும்.