விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

''வாழைக்காய் பஜ்ஜி மாதிரி வழவழ'', ''எப்ப எந்த கார்டு''… கமல்ஹாசனைக் கிண்டல் அடிக்கிறதா பிக் பாஸ்?

பிக் பாஸ் தமிழின் 8-வது சீசனை, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு சீசனும் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன், இந்த சீசனில் இருந்து விலகியதால், இந்த மாற்றம் வெற்றிகரமானதாக இருக்குமா என்கிற கேள்வியும், சந்தேகமும் எழுந்திருக்கிறது!
Published on

விஜய் டிவியில் ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கடந்த 2017 முதல் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த ஆண்டு தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். 

கமல்ஹாசன் விலகியதில் சம்பளப் பிரச்சனை, கடந்த சீசனில் கமல்ஹாசன் கலந்துகொண்ட சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளுக்கே ரேட்டிங் குறைந்தது எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனாலும், கமல்ஹாசன் நாகரிகமாக தனக்கு சினிமா வேலைகள் இருப்பதாகச் சொல்லி விலகிவிட்டார். இந்நிலையில்தான் நடிகர் விஜய் சேதுபதியை இந்தாண்டு பிக்பாஸ் தொகுப்பாளராக அறிவித்தது விஜய் டிவி.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதிதான் பிக்பாஸ் தொகுப்பாளர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இன்று முழுமையான ப்ரோமோ வெளியானது. இதில் டிரெஸ் கடைக்காரர் முதல், டிரைவர், வாக்கிங் போகும் தாத்தாஸ், காய்கறி விற்கும் அம்மா, கடற்கரையில் கால்பந்து விளையாடும் சிறுவன், பேருந்து பயணிகள், கடற்கரையில் பஜ்ஜி விற்கும் அக்கா எனப் பலரும் விஜய் சேதுபதி பிக்பாஸ் தொகுப்பாளராக என்ன செய்யவேண்டும் என கருத்துகள் சொல்ல, கடைசியில் தனது மேக்அப் மேனிடம் விஜய் சேதுபதி ''உன்கிட்ட எதுவும் கருத்து இருக்கா'' எனக் கேட்டுவிட்டு கடைசியில் அவர் பேசுவதாக ப்ரோமோ கன்டென்ட்டை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், இதில் கமல்ஹாசனைக் கிண்டல் அடிக்கும் வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

‘’அங்கிள்… தப்பா விளையாடுனா எப்ப எந்த கார்டு கொடுக்கணும்னு தெரியும்ல… தெரியலைன்னா என்ன பார்த்து கத்துக்கோங்க’’ என்பதும், ‘’இந்த இளகுன மனசுலாம் 12பி-ல ஓகே… ஆனா, பிபி-ல வேணாம்’’,  ‘’தம்பி ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசுவாங்க…வாழக்காய் பஜ்ஜி மாதிரி வழவழன்னு இருக்காம… மொளகா பஜ்ஜி மாதிரி சும்மா சுருக்குனு கேக்கணும்’’ என்பதுபோன்ற வசனங்கள் கடந்த சீசனில் பிரதீப்புக்கு கமல்ஹாசன் கொடுத்த ரெட் கார்டு, அர்ச்சனா, பூர்ணிமாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் செயல்பட்டார் என்கிற குற்றச்சாட்டு, தேவையில்லாமல் கமல்ஹாசன் வளவளவெனப் பேசுகிறார் என்கிற விமர்சனம் என எல்லாவற்றயும் இந்த ப்ரோமோவில் விஜய் டிவியே சொல்வது மிகவும் தவறாக இருக்கிறது.

கடந்த 7 சீசன்களாக பிக்பாஸின் முகமாக இருந்தவர் கமல்ஹாசன். அவரால்தான் பிக்பாஸுக்கு இத்தனை பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்படிப்பட்டவரை இப்போது சேனலே ப்ரோமோ என்கிற பெயரில் கிண்டல் அடித்திருப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்'’ என்கிறார்கள் கமல்ஹாசன் ரசிகர்கள். 

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com