டிவி
பிக் பாஸ் வருகை… நேரம் மாறும் விஜய் டிவி சீரியல்கள்… இனி இந்த சீரியலை இரவில் பார்க்க முடியாது?!
விஜய் டிவியில் வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் பிக்பாஸ் ஒளிபரப்பாக இருக்கிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் பிக்பாஸ் வார நாட்களில் தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி ஒளிபரப்பாக இருக்கிறது.
எப்போதும் பிக்பாஸ் ஒளிபரப்பாகும் மூன்றரை மாத காலமும் 9.30 மணி மற்றும் 10 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு 9.30 மணிக்கு வெற்றிகரமாக 6 டிஆர்பிக்கு மேல் கொடுத்துக்கொண்டிருக்கும் ‘சின்ன மருமகள்' சீரியலின் நேரம் மாறுகிறது.
நமக்கு கிடைத்திருக்கும் பிரத்யேக தகவல்படி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நீ நான் காதல்’ மாலை 6 மணிக்கும், தற்போது 7 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் மகாநதி அக்டோபர் 7 முதல் இரவு 6.30 மணிக்கும், ஆஹா கல்யாணம் இரவு 7 மணிக்கும், சின்ன மருமகள் இரவு 7.30 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிறது.
‘பனிவிழும் மலர்வனம்' என்கிற விஜய் டிவியின் 6 மணி சீரியல் இனி மதியம் ஒளிபரப்பாக இருக்கிறது. நேரம் மாறினாலும், சீரியல்கள் அதே உற்சாகத்துடன் தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை