விக்ரமன்
விக்ரமன்

‘அறம்’ பேசிய பிக் பாஸ் விக்ரமன் திருமணம்… உறவுப்பெண் பிரீத்தியை மணந்தார்!

பிக் பாஸ் சீசன் 6 மூலம் புகழ்பெற்றவர் விக்ரமன். முன்னாள் சீரியல் நடிகரும், நிகழ்ச்சித்தொகுப்பாளரும் விசிக பிரமுகருமான விக்ரமன் பிக் பாஸில் கலந்துகொண்டார்.
Published on

‘’அறம் வெல்லும்’’ என பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து முழங்கிக்கொண்டிருந்த விக்ரம்தான் கிட்டத்தட்ட அந்த சீசனின் வெற்றியாளராகஅறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முடிவுகள் மாறியது. அதிக வாக்குகள் அடிப்படையில் அசீம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனே அசீமின் வெற்றியில் உடன்பாடு இல்லாததுபோல பேசினார். விக்ரமுக்கு பெருத்த ஆதரவு பிக் பாஸுக்குப் பிறகும் இருந்தது.

ஆனால், திடீரென விக்ரமன் மீது கிருபா முனுசாமி என்பவர் திருமண ஆசைகாட்டி பணம் பறித்தாக குற்றம்ச்சாட்ட அவர்மீதான பிம்பம் உடைந்தது. இதற்கிடையே அமைதிகாத்த விக்ரமன் தற்போது உறவுப்பெண்ணான பிரீத்தி என்பவை திருமணம் செய்திருக்கிறார்.

விக்ரமன்
விக்ரமன்

இவர்களது திருமணம் நேற்று கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஷெரட்டன் ரெசார்ட்டில் நடைபெற்றது. தனது திருமண புகைப்படைத்தை அன்பும் அறமும் என்கிற தலைப்பில் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார் விக்ரமன்.

தற்போது அரசியலைவிட்டு கொஞ்சம் ஒதுங்கியிருக்கும் விக்ரமன் விரைவில் சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com