டிவி
‘அருவி' ஜோவிதா லிவிங்ஸ்டன் இப்போது ஜீ தமிழில்… புதிய சீரியல் விரைவில் ஆரம்பம்!
சன் டிவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோவிதா லிவிங்ஸ்டன் தற்போது ஜீ தமிழின் புதிய சீரியலில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த சீரியலின் ப்ரோமோ விரைவில் வெளியாகயிருக்கிறது.
சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ‘அருவி' சீரியலின் கதாநாயகியாக நடித்தவர் ஜோவிதா. சினிமா நடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகளான ஜோவிதா, முதன்முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ சீரியல் மூலம் தொலைக்காட்சி நடிகையானார்.
793 எபிசோடுகள் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஒளிபரப்பான ‘அருவி’ சீரியலில் கதாநாயகியாக நடித்து தனது திறமையை நிரூபித்திருந்தார் ஜோவிதா.
இந்நிலையில் ஜீ தமிழில் விரைவில் ஆரம்பமாகயிருக்கும் மதிய நேர சீரியலில் ஹீரோயினாக மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் ஜோவிதா.
ஜோவிதா நடித்திருக்கும் புதிய சீரியலின் ஷூட்டிங் தற்போது நடைபெற்றுவருகிறது. விரைவில் இந்த சீரியலுக்கான ப்ரோமோவை வெளியிட இருக்கிறது ஜீ தமிழ்!