வெளியேறிய மதுமிதா... 'எதிர் நீச்சல் 2' சீரியலின் கதாநாயகியாக மாறிய ஜீ தமிழ் நடிகை!
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சீரியல் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் நடிகர் மாரிமுத்து ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒரு வகையான கல்ட் ஃபாலோயிங்கை உருவாக்கினார். ஆனால் மாரிமுத்துவின் திடீர் மறைவுக்குப் பிறகு, அந்த சீரியல் அதன் வசீகரத்தை இழந்து, ரேட்டிங்கில் பின்தங்கியது. இதனால் எதிர்நீச்சல் சீரியல் திடீரென நிறைவுக்கு வந்தது.
இதை தயாரித்து இயக்கிய திருச்செல்வத்தை விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் தங்கள் சேனலுக்கு தூக்க திட்டமிட்ட, சன் டிவி சட்டென யு-டர்ன் போட்டது. திருச்செல்வத்தை மீண்டும் அணுகிய சன் டிவி நிர்வாகம் ‘எதிர் நீச்சல் - 2’ செய்யச்சொல்லி கேட்க, வேலைகள் விறுவிறுவென தொடங்கிவிட்டது.
ஆதி குணசேகரன் கேரெக்டரில் கடைசியாக நடித்த வேல ராமமூர்த்திக்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையே ஹீரோயினாக ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா ‘எதிர் நீச்சல் 2’ சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், ‘எதிர் நீச்சல் 2’ சீரியலில் நாயகியாக ஜீ தமிழ் சீரியல் நடிகை நடிக்கவிருக்கிறார். ‘ஜீ தமிழ்' சேனலில் ஒளிபரப்பான ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் நாயகியாக நடித்த விஜே பார்வதி தான் ‘எதிர் நீச்சல் 2’-வின் கதாநாயகி.
அதீத எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ‘எதிர் நீச்சல் 2’ சீரியலின் கதைக்களம், புதிய நடிகர்கள் மற்றும் அதன் காட்சிகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ‘எதிர் நீச்சல்’ தனது முதல் சீசனில் எவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றதோ, அதே போல புதிய சீசனும் சன் டிவியில் மக்கள் மனதில் இடம்பிடிக்குமா என பொருத்திருந்து பார்ப்போம்.