டிவி
சன் டிவி சீரியலில் நடிக்க வரும் தேசிய விருதுபெற்ற இயக்குநர்… சின்னத்திரையில் கோட்டை கட்டுவாரா?
சன் டிவியில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கும் புது சீரியலான ‘மூன்று முடிச்சு' சீரியல் மூலம் பிரபல சினிமா இயக்குநர் சீரியல் நடிகராக சின்னத்திரைக்குள் நுழைகிறார்.
சன் டிவியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் மூன்று முடிச்சு. விஜய் டிவியின் ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் மூலம் புகழ்பெற்ற ஸ்வாதி கொன்டேவும், ஜீ தமிழ் சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த நியாஸும் இந்த சீரியல் மூலம் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.
குடிக்கு அடிமையான பல கோடி சொத்துக்கு சொந்தக்காரனான ரிச் கிட்டும், குடும்ப பாரத்தை சுமக்கும் கிராமத்துப்பெண்ணான புவர் கேர்ளும் ஒன்று சேரும் கதைதான் மூன்று முடிச்சு.
இந்த சீரியலில் ‘காதல் கோட்டை’ படம் மூலம் தேசிய விருதுவென்ற இயக்குநரான அகத்தியன் சின்னத்திரை நடிகராக அறிமுகமாகிறார். இந்த சீரியலின் ஹீரோவான நியாஸ் ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப் புது அர்த்தங்கள் சீரியலில் தேவயானியின் மகனாக நடித்திருந்தார். அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை படத்தின் கதாநாயகி தேவயானி என்பது குறிப்பிடத்தக்கது!
அகத்தியன் இந்த புதிய முயற்சியில் வெற்றி பெறுவாரா? சின்னத்திரையில் தனது தனித்துவமான நடிப்பால் கோட்டை கட்டுவாரா?