தீபா - நேத்ரன் குடும்பத்தினர்
தீபா - நேத்ரன் குடும்பத்தினர்

பிரபல டிவி நடிகர் நேத்ரனுக்கு புற்றுநோய்… மகள் அபிநயா வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள்!

''மக்கள் என் அப்பாவுக்காக பிரார்த்தனை செய்வார்கள், பாசிட்டிவிட்டியைத் தருவார்கள் என்கிற எண்ணத்தில் இதைப்பகிர்கிறேன்.'' - அபிநயா நேத்ரன்
Published on

சின்னத்திரையில் மிகவும் புகழ்பெற்ற ஜோடி தீபா - நேத்ரன். இருவருமே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா, தொலைக்காட்சி மெகா தொடர்களில் நடித்துவருகிறார்கள். இருவருமே நல்ல டான்சர்கள். இவர்களுக்கு அபிநயா, அஞ்சனா என இரண்டு மகள்கள். அபிநயா ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியான ‘கனா காணும் காலங்கள்’ சீரிஸில் நடித்திருந்தார். அஞ்சனா கல்லூரியில் படித்துவருகிறார்.

தீபா, நேத்ரன் இருவருமே தொலைக்காட்சி தொடர்களில் இன்னமும் தொடர்ந்து பிசியாக நடித்துவரும் நிலையில் நேத்ரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது மூத்தமகள் இன்ஸ்டாகிராம் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்.  நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தீபா - நேத்ரன் குடும்பத்தினர்
தீபா - நேத்ரன் குடும்பத்தினர்

‘’சமூக ஊடகங்களில் இதைப் பற்றி பகிரலாமா, கூடாதா எனப்பலகட்ட யோசனைகள். உடல் நலப் பிரச்சினையை பொதுவில் பகிர்வதற்காக மக்கள் என்னை எப்படி ஜட்ஜ் செய்வார்களோ என்று பலமுறை யோசித்தேன். என் அப்பாவும்கூட இதை வெளியே சொல்ல விரும்பவில்லை, ஆனால், மக்கள் என் அப்பாவுக்காக பிரார்த்தனை செய்வார்கள், பாசிட்டிவிட்டியை பரப்புவார்கள் என்கிற எண்ணத்தில் இதைப்பகிர்கிறேன். அப்பா இப்போது கொஞ்சம் உடல்நலம் தேறி வருகிறார். ஆனால் இன்னும் ஐசியுவில்தான் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வருவார் என்று நம்புகிறேன். நீங்கள் பழையபடி வலிமையுடன் திரும்பி வருவீர்கள் என்று எனக்குத் தெரியும் அப்பா’’ என்று எழுதியிருக்கிறார் அபிநயா நேத்ரன். 

நேத்ரனுக்குப் புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது கல்லீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. 

நேத்ரன் மீண்டெழ நம்பிக்கையோடு பிரார்திப்போம்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com