‘’நான் ஒரு இடியட்…'' - ‘பாக்கியலட்சுமி’ சீரியலை திட்டித் தீர்க்கும் கோபி என்கிற சதிஷ்!
விஜய் டிவியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘பாக்கியலட்சுமி’. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது 1000 எபிசோடுகளைக் கடந்து கதை இல்லாமல் கண்டமேனிக்கு நகர்ந்து வருவதாக அதன் ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.
யுடியூபில் வெளியாகும் ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோக்களில் எல்லாம் ‘’எப்போது எண்டு கார்டு போடுவீர்கள்'’ என்கிற கமென்ட்டுகள்தான் அதிகம் தென்படுகின்றன. இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் கோபி என்ற கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் சதீஷ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் ‘’கோபி சொல்ற மாதிரி உண்மையாவே நான் ஒரு இடியட். நல்லா நடிச்சா மட்டும் போதும் கதையில்லனாலும் ஆக்டிங் வெச்சி நகர்த்தி கொண்டு போய்டலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, கதையில்லை, நல்ல டயலாக் இல்லை, ஸ்க்ரீன் பிளே இல்லைனா, எவ்ளோ பெரிய ஹீரோவா இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. பெரிய ஹீரோக்களுக்கே அப்படினா நான் ரொம்ப சின்ன, ரொம்ப டம்மி ஹீரோ. எனக்கு எப்படி சரியாவரும். நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு எல்லாம் புரியும்னு நினைக்கிறேன்’’ என அந்த வீடியோவில் பேசியுள்ளார் சதீஷ்.
கோபி பேசியதை பார்த்து ரசிகர்கள் ‘’ஆமாம்… உண்மையாவே ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரொம்ப போர் அடிக்குது’’ என கமென்ட் செய்து வருகின்றனர். மேலும் ‘’இந்த சீரியலை பார்ப்பதே உங்க ஒருத்தரோட நடிப்புக்காக தான்’’ என சதீஷ்குமாரையும் ஏத்திவிட்டு வருகின்றனர்.