சித்ரா- ஹேமந்த்
சித்ரா- ஹேமந்த்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா வழக்கு... கணவர் ஹேமந்த்தை விடுதலை செய்த நீதிமன்றம்!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் கைதான அவரது கணவர் ஹேமந்த் நிரபராதி எனச் சொல்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சித்ரா. இவர் ஹேமந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹேமந்த்தை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என சித்ராவின் நெருங்கிய நண்பர்கள் எச்சரித்ததாகவும் அப்போது சொல்லப்பட்டது.

சித்ரா- ஹேமந்த்
சித்ரா- ஹேமந்த்

சித்ராவின் தற்கொலைக்குக் காரணம் ஹேமந்த்தான் என சொல்லி அவரது பெற்றோர் பரபரப்பு புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் கடந்த 2020-ல் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி ஹேமந்துக்கு எதிராக போலீஸார் சரியான சாட்சிகளைக் கொடுக்கவில்லை என்று சொல்லி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். தீர்ப்பைக் கேட்டதும் ஹேமந்த் நீதிமன்றத்திலேயே கண்கலங்கி அழுததாக சொல்லப்படுகிறது!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com