தப்பித்த ‘சுந்தரி’...முடித்துவிடப்படும் ‘வானத்தைப்போல'...சன் டிவியின் திடீர் மாற்றமும், பின்னணியும்!
சன் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ‘சுந்தரி' சீரியலை நிறுத்துவதாக இருந்த சன் டிவி நிர்வாகம் ‘சுந்தரி’க்கு பதில் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘வானத்தைப்போல' சீரியலை முடிவுக்கு கொண்டுவருகிறது.
‘சுந்தரி’க்கு இன்னும் மூன்று மாதம் நீட்டிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘தோழி' என்கிற பெயரில் புதிய சீரியலை அறிமுகப்படுத்த இருக்கும் சன் டிவி அந்த சீரியல் தயாராகும் வரை சுந்தரிக்கு டைம் கொடுத்திருக்கிறது.
இதற்கிடையே 7 மணிக்கு ஒளிபரப்புவதாக இருந்த ஸ்வாதி கொண்டே - நியாஸ் நடிக்கும் 'மூன்று முடிச்சு' சீரியலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாக்க இருக்கிறார்கள். 'மூன்று முடிச்சு' சீரியல் ஆகஸ்ட் 12 முதல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் டிவியின் ஒட்டுமொத்த ஜிஆர்பி குறைந்துவருவதும், விஜய் டிவியின் ஜிஆர்பி உயர்ந்துவருவதும்தான் இந்த அதிரடி மாற்றங்களுக்கு காரணம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த ‘மூன்று முடிச்சு' சீரியலை அங்கே களமிறக்குகிறது சன் டிவி.