TRP Rating : நான்காவது இடத்துக்குப் போன 'சிங்கப் பெண்ணே'…'சிறகடிக்க ஆசை'க்கு என்ன இடம்?!
கடந்த வாரம் 9.42 டிஆர்பி-யில் இருந்த சிறகடிக்க ஆசை இந்த வாரம் 9.95 ரேட்டிங் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு முதலிடம் பிடித்த ‘சிங்கப் பெண்ணே’ இந்த வாரம் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 8.05 TRP புள்ளிகளுடன் ‘பாக்கியலட்சுமி’ இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதற்கு அடுத்ததாக 7.94 புள்ளிகளுடன் ‘கயல்’ மூன்றாம் இடத்தில் உள்ளது. ‘சிங்கப்பெண்ணே’ சீரியல் 7.84 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது சன் டிவியில் சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது. காரணம் 9 மணி ஸ்லாட் சன் டிவிக்கு மிக முக்கியமானது. இந்த ஸ்லாட்டில் ரேட்டிங் குறைவது சன் டிவிக்கான வருமானம் வரை பாதிக்கும் என்பதால் ‘சிங்கப்பெண்ணே’ ரேட்டிங் குறைவது சன் டிவிக்குப் பிரச்சனையை உண்டாக்கியிருக்கிறது.
சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மருமகள்’ 7.25 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து சன் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியலான ‘மூன்று முடிச்சு’ சீரியலும், விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சின்ன மருமகள்’ சீரியலும் 7.20டிஆர்பி புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் 7.01 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தையும், சன் டிவியின் ‘மல்லி’ 6.75 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளன. சன் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சுந்தரி’ 6.47 புள்ளிகளுடன் டாப் 10 சீரியல்கள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ் சீரியல் உலகில் போட்டி நாளுக்கு நாள் கடுமையாகிக் கொண்டே போகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என மூன்று பெரிய சேனல்களும் போட்டிபோட்டுக்கொண்டு புதிய சீரியல்களை களமிறக்கிக்கொண்டே இருக்கின்றன. விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதால் மற்ற சேனல்கள் அந்த இடத்தைப் பிடிக்க கடுமையாகப் போராடி வருகின்றன.