TRP ரேட்டிங்
TRP ரேட்டிங்

சட்டென சரிந்த விஜய் டிவி… சத்தம் இல்லாமல் சாதித்த ஜீ தமிழ்… TRP-யில் முதலிடம் பிடித்த சன் டிவி?

ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியாகும் டிவி சேனல்களுக்கான ரிப்போர்ட் கார்டான டிஆர்பி ரேட்டிங் சுதந்திர தின விடுமுறையால் இன்று வெளியாகியிருக்கிறது. யாருமே எதிர்பாரத வகையில் இந்த வார ரேட்டிங்கில் பல அதிரிபுதிரி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
Published on

தொலைக்காட்சி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் இன்று வெளியானது. தொடர்ந்து கடந்த பல மாதங்களாக விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் சன் டிவியின் ‘சிங்கப் பெண்ணே’ சிறகடிக்க ஆசையை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. 

கடந்த சில மாதங்களாக டாப் 10 லிஸ்ட்டில் விஜய் டிவியின் ஐந்து சீரியல்களும், சன் டிவியின் 5 சீரியல்களும் மாறி மாறி போட்டிபோட்டுவந்த நிலையில் இந்தவாரம் விஜய் டிவியை மொத்தமாகப் பின்னுக்குத்தள்ளி சன் டிவியின் 7 சீரியல்கள் டாப் 10-ல் இடம்பெற்றிருக்கின்றன. சேனல்களுக்கான கிராஸ் ரேட்டிங் பாயின்ட்டிலும்(GRP) விஜய் டிவி சடசடவென சரிந்திருக்கிறது. கடந்த வாரம் 827ஜிஆர்பி புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த சன் டிவி இந்த வாரம் 6 ஜிஆர்பி புள்ளிகள் ஏறி 833 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இதன் மொத்த ஷேர் 39.5 சதவிகிதம். 

சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே

ஆனால், இரண்டாவது இடத்தில் இருக்கும் விஜய் டிவியோ கடந்த வாரம் 669 ஜிஆர்பி புள்ளிகளுடன் இருந்த நிலையில் இந்த வாரம் யாருமே எதிர்பாராத வகையில 115 புள்ளிகள் தடாலடியாகக் குறைந்து 554 புள்ளிகளே பெற்றிருக்கிறது. அதோடு இதன் ஷேரும் 30.4 சதவிகிதத்தில் இருந்து 26.3 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் இடையிலான ஜிஆர்பி போட்டியில் சத்தம் இல்லாமல் இந்த வாரம் சாதித்திருக்கிறது ஜீ தமிழ். ரூரல் எனச்சொல்லப்படும் கிராமப்பகுதிகளுக்கான டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியை மூன்றாவது இடத்துக்குத்தள்ளி இரண்டாம் இடம்பிடித்திருக்கிறது. ரூரல் மார்க்கெட்டில் விஜய் டிவியின் GRP 372. ஆனால், ஜீ தமிழோ 385 ஜிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ‘சிங்கப்பெண்ணே’ 9 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியதில் இருந்து இறங்கு முகத்திலேயே இருந்தது. ஆனால், இந்த வாரம் சட்டென முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது. ‘சிறகடிக்க ஆசை’ இந்த வாரம் முதல் இடத்தை மட்டும் அல்ல மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதுதான் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட். பல சர்ப்ரைஸ்களைக் கொடுத்திருக்கும் இந்த வார டிஆர்பி லிஸ்ட்டில் டாப் 10 இடத்தைப் பிடித்திருக்கும் சீரியல்கள் என்னென்ன எனப் பார்ப்போம்!

  1. சிங்கப்பெண்ணே - 8.38 TRP

  2. கயல் - 7.83 TRP

  3. சிறகடிக்க ஆசை - 7.75 TRP

  4. மல்லி - 7.03 TRP

  5. மருமகள் - 6.84 TRP

  6. வானத்தைப்போல - 6.82 TRP

  7. சுந்தரி - 6.73 TRP

  8. பாக்கியலட்சுமி - 6.26 TRP

  9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - 5.93  TRP

  10. இராமாயணம் - 5.15 TRP

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com