TTF வாசன் & ஷாலின் ஜோயா…. விஜய் டிவி போடும் 'பிக் பாஸ்' கணக்கு!
பிக்பாஸ் சீசன் 8-க்கான கவுன்ட் டவுனைத் தொடங்கிவிட்டது விஜய் டிவி. செப்டம்பர் 22 அல்லது செப்டம்பர் 29-ம் தேதி பிக்பாஸைத்தொடங்க திட்டமிட்டிருக்கு விஜய் டிவி இன்னும் 100 நாட்களே இருப்பதால் அதற்கான டிஆர்பி பிளான்களை போட ஆரம்பித்துவிட்டது.
பிக்பாஸ் சீசன் 7 விஜய் டிவிக்கு பெரிய ஏமாற்றம். ‘’ரெண்டுல ஒன்னு பாக்கலாம்'’ என்கிற டேக்லைனோடு இரண்டு வீடு கான்செப்ட், 23 போட்டியாளர்கள் என தடபுடலாக ஆரம்பித்தாலும் கன்டென்ட் தரும் போட்டியாளர்கள் இல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் தத்தளித்தது பிக்பாஸ். இதனால் இந்தமுறை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவகையில் சர்ச்சைக்குரியவர்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் முதல் போட்டியாளர்களாக பைக் ஸ்டன்ட்டரும், சர்ச்சைகளில் சிக்குபவருமான டிடிஎஃப் வாசனிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறது விஜய் டிவி. இவருடைய காதலியான ஷாலின் ஜோயா ஏற்கெனவே குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறுவதால் அவர் மூலம் இருவரையும் ஜோடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் இறக்கதிட்டமிட்டுள்ளனர். இருவருக்குமான பேமெண்ட்டும் பல லட்சங்களில் பேசப்பட்டிருக்கிறதாம். டிடிஎஃப் வாசன் காதலிக்காகவே ஓகே சொல்லிவிடுவார் என்கிறார்கள்.
அதனால் பிக்பாஸ் 8 சீசனில் கமல்ஹாசனின் அரசியல் ஸ்டன்ட் நடக்கிறதோ இல்லையோ வாசனின் பைக் ஸ்டன்ட் நிச்சயம் நடக்கும்!