‘பாக்கியலட்சுமி’ இன்று : அவமானத்தில் அழுது துடிக்கும் பாக்கியா… கோபிக்கு கிடைத்த ஷாக்!
திட்டி தீர்த்த ஈஸ்வரி!
வரும் வழி எல்லாம் ஈஸ்வரி பாக்கியாவை ‘’நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா’’ என்று இனியாவை திட்டிய படி வருகிறாள். ‘’இன்னும் அவ எவ்வளவு தான் தாங்குவா’’ என்று கோபப்படுகிறாள். பாக்கியா ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படியே உடைந்து போய் உட்கார்ந்திருக்கிறாள்.
போட்டியில் ஜெயித்த கோபி!
மறுபக்கம் செல்வி பனங்கொட்டா டிஷ்ஷை செய்து முடித்து அலங்காரம் செய்ய முடியாமல் தவிக்க இறுதியாக நடுவர்கள் இருவரது டிஷ்ஷையும் டேஸ்ட் செய்து கோபி தான் வெற்றியாளர் என அறிவிக்கின்றனர்.
திமிர் காட்டிய கோபி, செல்வி கொடுத்த ஷாக்!
போட்டியில் ஜெயித்த கோபி செல்வியிடம் ‘’என்ன எங்க போயிட்டாங்க ரெண்டு பேரும்? தோத்துப் போயிடுவோம்னு தெரிஞ்சு பயந்து ஓடிட்டாங்களா’’ என்று சொல்ல ‘’இல்ல அக்கா ஒரு அவசரமான வேலையா போயிடுச்சு’’ என்று சொல்ல ‘’அப்படி சொல்ல சொன்னாங்களா’’ என்று திமிரு காட்டுகிறான். ‘’இனியா பாப்பாவுக்கு ஏதோ பிரச்சனைன்னு ராதிகா மேடம் தான் போன் பண்ணி வர சொன்னாங்க.. அதனால தான் அக்கா கிளம்பி போயிடுச்சு’’ என்று சொல்ல ‘’இனியாவுக்கு பிரச்சனையா’’ என்று கோபி பதறுகிறான்.
இனியாவை ரவுண்டு கட்டி அடித்த ஈஸ்வரி!
இனியாவுடன் பாக்யா ஈஸ்வரி ஆகியோர் வீட்டுக்கு வர எழில் ‘’என்ன இனியா இதெல்லாம் ஃபிரண்ட்ஸ் எங்க கூப்பிட்டாலும் போயிடுவியா’’ என்று திட்டுகிறான். ஈஸ்வரி ‘’உனக்கு என்னடி அவ்வளவு திமிரு… உன்ன நம்பி அனுப்புனது எங்க தப்புதான்’’ என்று கோபப்படுகிறாள்.
‘’கோபி பாருக்கு போனதையே என்னால தாங்கிக்க முடியல பல நாள் அதை நெனச்சு அழுது இருக்கேன். வயசு பொண்ணு நீ என்னடானா பப்புக்கு போயிருக்க.. இதெல்லாம் உனக்கு தேவையா? அடுத்து எங்க போக போற? நீ ஏதாச்சும் கேட்டா பாக்கியா வேண்டாம்னு சொல்லுவா… ஆனா உனக்காக அவளை திட்டி உனக்கு சப்போர்ட் பண்ணி இருக்கோம். இதெல்லாம் யாருடைய தப்பு’’ என்று கேள்வி கேட்கிறாள்.
ராதிகாவின் வார்த்தையால் அழுத பாக்யா!
எதுவும் பேசாமல் அங்கிருந்து ரூமுக்கு வந்த பாக்கியா அப்படியே கீழே உட்கார்ந்து ராதிகா ‘’19 வயசு கூட ஆகல… உங்க பொண்ணு பப்புக்கு வந்து இருக்கா… வயசு பொண்ணு ஒழுக்கமா வளங்க’’ என்று அவமானப்படுத்தியதை நினைத்து நினைத்து கலங்கி அழுகிறாள்.
இனியாவுக்கு விழுந்த அடி!
செல்வி வீட்டுக்கு வந்து ஈஸ்வரியிடம் ‘’போட்டியில் தோற்று விட்டோம்’’ என்று சொல்கிறாள். பாக்கியா கீழ இறங்கி வர செல்வி ‘’அக்கா நாம தோத்துட்டோம்’’ என்று சொல்ல பாக்யா ‘’ஆமா செல்வி தோத்துப் போயிட்டேன் மொத்தமா தோத்து போயிட்டேன்’’ என்று தலையில் அடித்துக் கொண்டு படிக்கட்டில் உட்கார்ந்து அழ இனியா பக்கத்தில் உட்கார்ந்து ‘’தெரியாம பண்ணிட்டேன் சாரி மா’’ என்று மன்னிப்பு கேட்க ‘’எதுடி தெரியாம பண்ணது’’ என்று போட்டு அடி வெளுத்து எடுக்கிறாள்.
‘’ஒன்பதாவது படிக்கும்போது வீட்டுக்கு தெரியாம படத்துக்கு போய் பிரச்சனைல மாட்டிக்கிட்ட அதுக்கப்புறம் எத்தனை முறை உனக்காக ஸ்கூல்ல வந்து நின்னு இருக்கேன். ஒவ்வொரு முறையும் பிரெண்ட்ஸ் கூப்டாங்கன்னு இதே காரணத்தை தான் சொல்ற. அதிலிருந்து நீ ஒண்ணுமே கத்துக்கல.. உன் மண்டையில கொஞ்சமாவது மூளை இருக்கா இல்லையா’’ என்று கோபப்படுகிறாள்.
இனியா விஷயத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன?!