சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

‘சிறகடிக்க ஆசை’ இன்று : கிரிஷ் விஷயத்தில் ரோகிணி எடுக்கும் முடிவு… முத்துவிடம் கேள்விகள் கேட்ட மீனா!

விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (06-08-2024) எபிசோட் ஹைலைட்ஸ்!
Published on

ரோகிணிக்கு விழுந்த டோஸ்! 

விஜயா ‘’அந்த பொண்ணு எனக்கு குழந்தை இல்லைன்னு ஊரையே ஏமாத்தி இருக்கா… அதெல்லாம் வாழப்போனா அந்த குடும்பம் உருப்படுமா’’ என்று பேச மனோஜ் ‘’இந்த நேரம் அவ ஏமாத்தி வேற யாரையாவது கூட கல்யாணம் பண்ணி இருப்பா… எந்த கேனையன் ஏமாற போறானோ’’ என சொல்ல ரோகிணி இதெல்லாம் கேட்டு கண் கலங்குகிறாள். அண்ணாமலை ‘’பாவம் அந்த சின்னப் பையன்’’ என்று பேச ‘’அதற்குத்தான் நாங்கள் ஒரு முடிவெடுத்து இருக்கோம்’’ என்று சொல்ல அண்ணாமலை ‘’என்ன முடிவு’’ என்று கேட்க ‘’கிருஷ்ஷை நாங்க தத்தெடுக்கலாம்னு இருக்கோம்’’ என்று சொல்ல அதை கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறாள். வெளியில் நின்று இருந்த ரோகிணியும் இதைக் கேட்டு ஷாக் ஆகிறாள். ரவி ஸ்ருதி நல்ல முடிவு என்று சொல்ல மனோஜ் ‘’உங்களுக்கென்ன கல்யாணம் ஆகி ரொம்ப நாள் குழந்தை இல்லாமலா இருக்கீங்க? எதுக்கு அந்த பையனை தத்தெடுக்கணும்’’ என்று கேள்வி கேட்கிறான். 

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

நோ சொன்ன விஜயா!

‘’இது என்ன ஆசிரமா கண்டவங்கள தத்து எடுத்துக் கொண்டு வந்து வளர்க்கறதுக்கு? அந்த பையனோட அம்மாவே அவன் வேணாம்னு தூக்கிப்போட்டு போயிட்டா உங்களுக்கு என்ன’’ என்று கேள்வி கேட்க முத்து ‘’நாங்க அவனை தத்து எடுக்கத்தான் போறோம்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறான். பிறகு மீனா ‘’நாங்க நிறைய யோசிச்சு கோயிலுக்கு போய் சீட்டு போட்டு பார்த்தோம். அதுல வேண்டாம்னு தான் வந்துச்சு’’ என்று சொல்ல வர முத்து ‘’தத்தெடுக்கலாம்னு வந்தது’’ என மாற்றி சொல்கிறான். 

அண்ணாமலை ‘’நல்ல விஷயம்தான் உங்க மனசுக்கு சரின்னு படுறத செய்யுங்க’’ என்று சொல்ல விஜயா அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறாள். மனோஜ் ‘’அந்த பையன நீங்க இங்க கூட்டிட்டு வந்து வளர்த்தா அவன் ஏதாவது திருடிட்டு ஓடிட்டானா என்ன பண்றது’’ என்று கேட்க ‘’எல்லாரும் உன்னை மாதிரி இருக்க மாட்டாங்க’’ என்று முத்து பதிலடி கொடுக்கிறான். 

‘’ரவி ஒரு நாயை வளத்ததுக்கே இந்த வீட்ல அதெல்லாம் வளர்க்க கூடாதுனு சொல்லிட்டேன்… அப்படி இருக்கும்போது அந்தப் பையனை எப்படி நான் கூட்டிட்டு வர சம்மதிப்பேன்… அதெல்லாம் முடியாது’’ என்று விஜயா சொல்ல அண்ணாமலை ‘’நாயும் அந்த பையனும் ஒண்ணா ‘’என்று கேட்க ‘’எனக்கு ஒன்னுதான்’’ என்று பதில் சொல்கிறாள். 

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

ரோகிணியின் என்ட்ரி, விஜயாவின் பஞ்சாயத்து!

அதைத்தொடர்ந்து ரோகிணி கண்ணை துடைத்துக் கொண்டு எதுவும் தெரியாது போல வீட்டுக்குள் நுழைந்து ‘’என்ன ஆன்ட்டி எல்லாரும் ஒண்ணா நின்னு பேசிட்டு இருக்கீங்க… என்ன விஷயம்’’ என்று கேட்க விஜயா ‘’வா மா ரோகிணி… இந்த வீட்டோட மூத்த மருமக நீதான் இந்த அநியாயத்தை நீயே கேளு… நீயே உன்னுடைய முடிவை சொல்லு’’ என்று கிரிஷை முத்து மீனா தத்தெடுக்கப் போவதாக சொன்ன விஷயத்தை சொல்கிறாள். முத்து ‘’நாங்க கிரிஷை தத்தெடுக்கத்தான் போறோம்’’ என்று உறுதியாகச் சொல்கிறான். இதனால் விஜயா வாக்குவாதம் செய்ய மீனா ‘’இதுக்குத்தான் கடவுள் வேண்டாம்னு சொன்னாரு போல’’ என்று கோயிலில் நடந்த விஷயத்தை உளற அண்ணாமலை ‘’தத்தெடுக்கலாம்னு வந்ததா சொன்னிங்க’’ என்று கேட்க முத்து ‘’நான்தான் வீட்ல எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு பார்க்க மாத்தி சொன்னேன்’’ என்று சொல்கிறான். 

அண்ணாமலை எடுத்த முடிவு! 

‘’நீ சொல்லுப்பா எனக்கு உன்னுடைய முடிவு மட்டும்தான் முக்கியம்’’ என்று சொல்ல அண்ணாமலை அமைதியாகவே இருக்க விஜயா ‘’என்னங்க நீங்க அந்த பையனை இங்க கூட்டிட்டு வர சம்மதம் சொல்றீங்களா?’’ என்று கேட்கிறாள். ‘’அந்த பையன் இந்த வீட்டுக்கு வரணும்னு இருந்தா வரட்டும். கடவுள் அதைத்தான் முடிவு பண்ணி இருந்தா அதை யாராலும் தடுக்க முடியாது. நல்ல விஷயம் பண்ணனும்னு யோசிக்கிறாங்க பண்ணட்டும் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்’’ என்று சொல்கிறார். 

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை


‘’கிரிஷ்ஷோட பாட்டி ஓகே சொன்னா நாங்க அவனை தத்தெடுக்கத்தான் போறோம்’’ என்கிறான் முத்து. ‘’நீங்க சம்பாதிக்கிறது உங்க ரெண்டு பேருக்கே பத்தாது… இதுல அவன் வேறயா’’ என்று மனோஜ் கேக்க ‘’அத நாங்க பாத்துக்கிறோம்’’ என்று முத்து பதிலடி கொடுக்கிறான். 

ரோகிணி போட்ட கண்டிஷன்! 

வீட்டில் நடந்த விஷயத்தால் அப்செட்டான ரோகிணி அவளது அம்மாவுக்கு போன் போட்டு ‘’நீ பண்ண விஷயம் இன்னைக்கு எங்க வந்து நின்னு இருக்குனு தெரியுமா’’ என்று கோபப்பட ‘’அதான் எல்லாத்தையும் இங்கேயே பேசிட்டு போயிட்டியே’’ என்று சொல்கிறாள் அம்மா. ‘’மீனா கூட போன் பண்ணி இருந்தா… ஆனா நான் போன் எடுக்கல’’ என்று சொல்ல ‘’அவங்க எதுக்கு போன் பண்ணி இருந்தாங்க தெரியுமா? கிரிஷ்ஷை தத்தெடுக்க போறாங்களாம்’’ என்று சொல்ல ரோகிணி அம்மா அதிர்ச்சி அடைகிறாள். ‘’சரி கிரிஷ் அங்க இருந்தா உன் கூடவே இருக்க மாதிரி இருக்கும்ல’’ என்று அம்மா கேட்க, ரோகிணி கோபப்பட ‘’சரி அவங்க போன் பண்ணா போன் எடுக்கல... நேர்ல வந்து கேட்டா முடியாதுன்னு சொல்லிடுறேன் போதுமா’’ என்று சொல்கிறாள். ‘’நேர்ல வந்தா முகத்துல அடிச்ச மாதிரி பேசி அனுப்பு’’ என்று ரோகிணி கண்டிஷன் போடுகிறாள்.

தத்தெடுப்பை தள்ளிப் போட்ட மீனா!

மீனா திரும்பத் திரும்ப ரோகிணி அம்மாவுக்கு போன் செய்ய அவர் போனை எடுக்காத நிலையில் மீனா முத்துவிடம் ‘’உடனே க்ரிஷ்ஷை இங்க கூட்டிட்டு வந்துட முடியாது அவனும் படிச்சிட்டு இருக்கான்… அவனுக்கு ஸ்கூல் முடியணும்’’ என்று சொல்கிறாள். ‘’அதுவும் இல்லாம கிரிஷ்ஷை இங்க கூட்டிட்டு வந்தா அவங்க பாட்டி தனியா இருப்பாங்க’’ என்று சொல்ல முத்து ‘’அவங்களை நம்ம பாட்டி வீட்டுல தங்க வச்சிடலாம்’’ என்று சொல்கிறான். உடனே மீனா ‘’எல்லாத்தையும் நாம நெனச்சா மாதிரி எல்லாம் செய்ய முடியாது… அவங்களுக்கு வீடு இருக்கு… அவங்க ஊர்ல அவங்க இருக்காங்க’’ என்று சொல்கிறாள். ‘’கொஞ்ச நாள் போகட்டும்… நாம அடிக்கடி போய் கிருஷ்ஷை பாத்துட்டு வரலாம். அவனுக்கு தேவையானதையெல்லாம் செஞ்சு கொடுக்கலாம். அவனுக்கும் நம்ம கூட வர்றது பிடிக்கணும்ல’’ என்று சொல்கிறாள். பிறகு முத்து ‘’என் அருமை பொண்டாட்டி நான் அவனை இங்க கூட்டிட்டு வந்தா போதும்னு மட்டும் தான் யோசிச்சேன்… ஆனா நீ அவனை சுத்தி அடுத்து என்ன நடக்கும்னு எல்லாத்தையும் யோசிச்சிருக்க’’ என்று பாராட்டுகிறான். 

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

ரோகிணி போடும் திட்டம்!

 ரோகிணி தனது தோழி வித்யாவை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்லி ‘’அம்மாவையும் கிரிஷ்ஷையும் சென்னைக்கு கூட்டிட்டு வந்துடப் போறேன். கிருஷ்ஷை இங்கேயே ஒரு நல்ல ஸ்கூல்ல சேர்த்துடலாம். எனக்கும் மனோஜுக்கும் ஒரு குழந்தை பிறக்கணும்… அப்பதான் எங்களுக்குள்ள என்ன பிரச்சனை வந்தாலும் அந்த குழந்தைக்காக என்னை மன்னிச்சிடுவான்’’ என்று தனது திட்டத்தை சொல்கிறாள். ‘’கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிடுச்சு இன்னும் குழந்தை பிறக்கல டாக்டர் கிட்ட போய் பாக்கணும்’’ என்று முடிவு எடுக்கிறாள். 

சீதாவின் போன் கால் அழுத முத்து, மீனா!

சீதா மீனாவுக்கு போன் போட்டு ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகி இருப்பதாகச் சொல்ல மீனா சந்தோஷத்தில் கண் கலங்குகிறாள். ‘’அப்பாவோட கனவை நீ நிறைவேத்திட்ட’’ என்று சொல்ல சீதாவும் கண் கலங்குகிறாள். பிறகு முத்து அங்கு வர ‘’எதுக்கு அழுதுக்கிட்டு இருக்க’’ என்று கேட்க அவனிடம் போனை கொடுக்க சீதா ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகி விட்டதாக விஷயத்தை சொல்ல முத்துவும் கண் கலங்குகிறான். பிறகு சீதா ‘’அக்காவை கூட்டிட்டு வீட்டுக்கு வர்றீங்களா’’ என்று கேட்க ‘’மாமா மாலையோட வரேன்’’ என்று சொல்லி போனை வைக்க மீனா முத்து மீது சாய்ந்து கொண்டு ஆனந்த கண்ணீர் வடிக்கிறாள்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com