‘சிறகடிக்க ஆசை’ இன்று : கேசரியோடு கொண்டாடிய மீனா... சிக்கப்போகும் ரோகிணி!
கண்ணை மூடி கையெழுத்து போட்ட மனோஜ்!
பேங்க் ஆபிஸர் ‘’நீங்க இந்த கிரெடிட் கார்டை எங்க வேணா யூஸ் பண்ணலாம்… நீங்க யூஸ் பண்ண, யூஸ் பண்ண உங்களுக்கு டிஸ்கவுன்ட் கூட கிடைக்கும். நீங்க பத்தாம் தேதிக்குள்ள பணத்தை திருப்பி கட்டுனா போதும், வட்டி கூட கிடையாது. நீங்க மொத்தமா கட்டணும்னு அவசியம் இல்ல… இஎம்ஐ கூட கட்டலாம்’’ என்று சொல்கிறார். இதைக் கேட்டு எக்சைட் ஆகும் மனோஜ் ‘’இந்த கிரெடிட் கார்டு வாங்க நான் என்ன டாக்குமெண்ட் தரணும்’’ என்று கேட்க ‘’அவர் எதுவும் தர வேண்டாம்’’ என்று சொல்ல ரோகிணி ஒரு நிமிஷம் என்று மனோஜை தனியாக கூட்டிட்டு போய் ‘’அமவுன்ட் அதிகமா இருக்கு… இது நமக்கு அவசியமா’’ என்று கேட்கிறாள்.
‘’பேங்க்காரங்களே நம்மள தேடி வந்து கார்டு கொடுக்குறாங்கன்னா என்ன அர்த்தம்? நாம அடுத்த லெவலுக்கு முன்னேறிட்டோம். இந்த கிரெடிட் கார்டு வாங்கி சரியா யூஸ் பண்ணா சிபில் ஸ்கோரும் நல்லா இருக்கும்… நமக்கு நிறைய பேங்க்ல லோன் தருவாங்க’’ என்று சொல்கிறான். இதைத்தொடர்ந்து கண்ணை மூடிக்கொண்டு டாக்குமென்ட்டில் கையெழுத்து போடுகிறான்.
ஹாஸ்பிட்டலுக்கு வந்த ரோகிணி!
ரோகிணி தன்னுடைய தோழி வித்யாவுடன் டெஸ்ட் செய்து கொள்வதற்காக ஹாஸ்பிட்டலுக்கு வருகிறாள். இதே ஆஸ்பிட்டலுக்கு சீதா இண்டர்வியூ அட்டென்ட் செய்ய மீனாவுடன் வருகிறாள். ஆனால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருக்கின்றனர். ரோகிணி டாக்டரை பார்க்க உள்ளே சென்றுவிட வித்யா போன் பேச நகர்ந்து சென்று விட சீதா ரிசப்ஷனில் இன்டர்வியூக்கு வர சொல்லி இருந்ததாக விசாரிக்க செகண்ட் ரூமுக்குள் போக சொல்கிறனர். மீனா வெளியில் தனியாக காத்திருக்கிறாள்.
ரோகிணிக்கு டாக்டர் கொடுத்த அட்வைஸ்!
ரோகிணியைப் பரிசோதனை செய்த டாக்டர் ‘’முதல் பிரசவத்துல உங்களுக்கு ஏதாவது க்ரிட்டிக்கல் இஷ்யூஸ் இருந்ததா’’ என்று கேட்க ‘’அதெல்லாம் இல்ல டாக்டர் வலி வந்த மூணு மணி நேரத்தில் குழந்தை பிறந்துடுச்சு… நார்மல் டெலிவரிதான்’’ என்று சொல்கிறாள். ‘’ஆனா இந்த முறை தான் குழந்தை உருவாக லேட் ஆகுது’’ என்று சொல்ல ‘’அதுக்கு உங்களோட மென்ட்டல் ஹெல்த்கூட காரணமா இருக்கலாம்’’ என்று சொல்கிறார்.
‘’நீங்க எதையாவது யோசிச்சு கவலைப்படுறீங்களா’’ என்று கேட்க ‘’ரோகிணி வீட்ல சில பிரச்சனை’’ என்று சொல்ல ‘’டாக்டர் அதைப்பத்தி எல்லாம் யோசிக்காதீங்க… மைண்டை ரிலாக்ஸா வச்சுக்கோங்க… உங்களுக்கு குழந்தை பிறக்க நிறைய வாய்ப்பிருக்கு’’ என்று சொல்லி சில மருந்து மாத்திரையை எழுதி தருவதாகவும் அதுவரை வெளிய வெயிட் பண்ணுங்க எனவும் சொல்கிறார்.ரோகிணி வெளியே வர சீதா பக்கத்தில் இருக்கும் ரூமுக்குள் சென்று விட காத்துக் கொண்டிருக்கும் மீனாவுக்கு ஒரு போன் கால் வர அவளும் அங்கிருந்து நகர்ந்து வருகிறாள். மீனாவுக்கு போன் காலில் மாலை கட்டும் ஆர்டர் வந்திருப்பதாக பூ கட்டும் அக்கா ஒருவர் வர சொல்லி கூப்பிடுகிறார்.
மீண்டும் மிஸ் ஆன சந்திப்பு!
சீதா இன்டர்வியூ முடித்து வெளியே வர ரோகிணி டாக்டரை பார்க்க ரூமுக்குள் செல்ல மீண்டும் இவர்களின் சந்திப்பு மிஸ் ஆகிறது. அதன் பிறகு மீனாவிடம் வந்து ‘’HR உடன் இன்னொரு இன்டர்வியூ இருக்கு, வெயிட் பண்ண சொல்லி இருக்காங்க’’ என்று சொல்ல மீனா மாலை ஆர்டர் குறித்து சொல்ல சீதா ‘’நீ போ அக்கா நான் பாத்துக்குறேன்’’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள்.
ரோகிணியைப் பார்த்த சீதா!
ரோகிணி மற்றும் வித்யா என இருவரும் வெளியே வந்து ரிசெப்ஷனில் பணம் கட்டும்போது சீதா இவர்களை பார்த்துவிட்டு பேசுவதற்காக எழுந்து கொள்ள அதற்குள் ஒருவர் வந்து ‘’செகண்ட் ஃப்ளோர் போங்க ஹெச் ஆர் உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு’’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
சீதாவுக்கு கிடைத்த வேலை!
சீதாவுக்கு வேலை கிடைத்து விட மீனாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்கிறாள். மீனாவும் சந்தோஷப்படுகிறாள். அதன் பிறகு ஹாஸ்பிட்டலில் ரோகிணியை பார்த்த விஷயத்தை சொல்ல ‘’அது குழந்தை பெத்துக்கிறதுக்கான ஹாஸ்பிட்டல் தானே… அங்கே எதுக்கு ரோகிணி வந்தாங்க’’ என்று மீனா கேள்வி கேட்டு பிறகு ‘’ஒரு வேலை கர்ப்பமாகி இருப்பாங்களோ’’ என நினைக்க சீதா ‘’இருக்கலாம்’’ என்று சொல்ல மீனா ‘’ரெண்டு நல்ல விஷயம் நடந்திருக்கு’’ என சந்தோஷப்படுகிறாள்.
கேசரியை வைத்து கொளுத்தி போட்ட மீனா!
வீட்டுக்கு வந்த மீனா சமையலுடன் சேர்த்து கேசரியையும் செய்ய முத்து ‘’எதுக்கு கேசரி… சீதாவுக்கு வேலை கிடைச்சதுக்கா’’ என்று கேட்க ‘’அதுக்கு மட்டுமில்லை… இன்னொரு விஷயம் இருக்கு… நீங்க போங்க… நான் எல்லாருக்கும் சேர்த்து சொல்றேன்’’ என்று அனுப்பி வைக்கிறாள்.
பிறகு எல்லோருக்கும் கேசரி கொடுக்க ‘’எதுக்கு கேசரி செஞ்ச'’ என்று விஜயா கேட்க ‘’சீதாவுக்கு வேலை கிடைச்சிருக்குல அதனாலதான்’’ என்று அண்ணாமலை சொல்ல ‘’யாருக்கோ வேலை கிடைச்சதுக்கு எதுக்கு என் வீட்டு சக்கரைய காலி பண்ணனும்’’ என்று கேட்க ‘’சீதாவுக்காக மட்டும் இல்ல ரோகிணிக்காகவும் தான் செஞ்சேன்'’ என்று சொல்ல அனைவரும் புரியாமல் ஷாக்காகின்றனர்.
ரோகிணிக்கு மட்டும் கேசரி கசக்கப்போகுது!