சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

'சிறகடிக்க ஆசை' இன்று : முத்து சத்யாவுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் மீனா… ஸ்ருதியின் ஃபெமினிசம்!

விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (19-08-2024) எபிசோட் ஹைலைட்ஸ்!
Published on

முத்து கொடுத்த அட்வைஸ்!

அதாவது இதுக்கு மேல பணம் தேவை என்றால் நல்ல ஆளா பார்த்து கடன் வாங்குங்க, இந்த மாதிரி திருட்டு பையன் கிட்ட எல்லாம் கடன் வாங்காதீங்க என்று சொல்லி முத்து அங்கிருந்து கிளம்ப சிட்டி, சத்தியா ஆகியோர் அங்கேயே நின்று இருக்க ‘’இன்னும் எதுக்குடா இங்கே போஸ் கொடுத்துட்டு நின்னுகிட்டு இருக்கீங்க கிளம்புங்க’’ என்று விரட்டி விடுகிறான். வெளியே வந்த முத்து சத்யாவை கூப்பிட்டு ‘’சீதா நல்லபடியா படிச்சு முடிச்சு வேலைக்கும் போயிட்டா… நீ ஏன்டா இப்படி இருக்க, இவனோட இப்படியே சேர்ந்து சுத்திகிட்டு இருந்தா பெரிய பிரச்சனைல தான் மாட்டிப்ப.. உன்னை கோர்த்து விட்டுட்டு அவன் தப்பிச்சிடுவான்’’ என்று அட்வைஸ் சொல்ல சத்யா ‘’உங்க வேலைய நீங்க பாருங்க… என் வேலையை நான் பாக்குறேன்’’ என்று பதிலடி கொடுக்க உன் வாழ்க்கை உன் கையில் என சொல்லிவிட்டு முத்து அங்கிருந்து கிளம்பி வருகிறான்.

சீதாவுக்கு கிஃப்ட் கொடுத்து உதவி கேட்ட ஸ்ருதி! 

அடுத்ததாக சீதா ஹாஸ்பிட்டலில் வேலை செய்து கொண்டிருக்க அங்கு வந்த ஸ்ருதி வேலை கிடைத்ததற்காக வாழ்த்து சொல்லி ‘’உனக்காக நான் ஒரு கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்’’ என்று சொல்லி வாட்ச்சை எடுத்து கொடுத்து அதை கட்டியும் விடுகிறாள். 

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

அதன் பிறகு ‘’எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்’’ என்று சொல்லி சரோகசி(வாடகைத்தாய்) மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக சொல்கிறாள். சீதா ‘’இது ரவிக்கு தெரியுமா? வீட்ல ஓகே சொல்லுவாங்களா’’ என்று கேட்க ‘’இதுல ரவி என்ன சொல்லணும்… இது என்னுடைய உடம்பு… நான் தான் முடிவெடுக்கணும்’’ என்று சொல்கிறாள். 

ஸ்ருதி போட்ட கண்டிஷன்!

இந்த surrogacy எவ்வளவு செலவாகும் என்பதெல்லாம் கேட்டு சொல்றியா என்று உதவி கேட்க சீதா சரி என சொல்கிறாள். மேலும் இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம் குறிப்பா மீனாவுக்கு சொல்ல வேண்டாம் என்று சொல்கிறாள். வீட்டுக்கு வந்த சத்யாவிடம் அவனது அம்மா ‘’கை இப்போ முழுசா சரியாயிடுச்சா’’ என்று கேட்க சத்யாவும் ‘’முழுசா சரியாகல… ஆனா இப்போ பரவால்ல’’ என்று சொல்கிறான். உனக்காக ‘’கோயில்ல கூழ் ஊத்தறதா வேண்டிக்கிட்டு இருக்கேன்… போய் புது துணி போட்டுட்டு ரெடியாகி வா’’ என்று சொல்ல ‘’சத்யா இதுக்கு எல்லாம் நான் எதுக்கு நீங்களே பாத்துக்கங்க’’ என்று சொல்ல ‘’உனக்காக வேண்டிக்கிட்டு இருக்கேன்… நீ இல்லாம எப்படி’’ என்று ரெடியாகி வரச் சொல்கிறாள். 

சத்யா ‘’முத்து வரக்கூடாது அவர் வந்தா நான் வரமாட்டேன்’’ என கண்டிஷன் போட்டு உள்ளே செல்கிறான். அதன் பிறகு மீனா வீட்டுக்கு வர அவளது அம்மா கூழ் ஊற்றும் விஷயம் குறித்து சொல்கிறாள். பிறகு ‘’சத்யாவுக்கு மூளை குழம்பிப்போச்சு போல மாப்பிள வரக்கூடாதுன்னு சொல்றான்’’ என்று சொல்ல சத்யா வெளியே வந்ததும் மீனா ‘’என்னடா உனக்கு அவ்ளோ கொழுப்பு ஏறிடுச்சா… திரும்பவும் கையை உடைச்சு விடணுமா’’ என்று கோபப்படுகிறாள். ‘’மாமாவ வரக்கூடாதுன்னு சொல்றியா’’ என்று கேட்க ‘’ஆமா அவர் வரக்கூடாது அவர் வந்தா நான் வரமாட்டேன். அவருக்கு தான் என்னை பார்த்தாலே பிடிக்காதுல. ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாரு தேவையில்லாத பிரச்சனைதான் வரும்’’ என்று சொல்லி ‘’அவர் வேணுமா நான் வேணுமானு முடிவு பண்ணிக்கோங்க’’ என்று கிளம்பி செல்கிறான். பிறகு மீனா ‘’அவர்கிட்ட பேசி பார்க்கிறேன்’’ என்று கிளம்பி வருகிறாள். 

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

முத்து கொடுத்த அதிர்ச்சி!

முத்து கார்த்திக் கார் வாடகை கொடுத்ததாக சொல்லி பணத்தை எடுத்து வந்து மீனாவிடம் கொடுக்கிறான். பிறகு சவாரிக்கு கிளம்புவதாக சொல்லி முத்து கிளம்ப மீனா ‘’ஒரு நிமிஷம்’’ என்று நிறுத்தி ‘’இன்றைக்கு சத்யாவுக்கு பிறந்தநாள்… அம்மா எல்லாரையும் வச்சு பொன்னியம்மனுக்கு கூழ் ஊத்தப் போறாங்க… என்னையும் கூப்பிட்டு இருக்காங்க’’ என்று சொன்னதும் முத்து ‘’உன்ன மட்டுமா இல்ல என்னையுமா’’ என்று முத்து கேள்வி கேட்கிறான். மீனா தயக்கத்தோடு நிற்க ‘’உன் தம்பி நான் வரக்கூடாதுன்னு சொன்னான் அதானே’’ என்று முத்து கேட்க மீனா ‘’அவன் அப்படி எல்லாம் சொல்லல’’ என்று சொல்ல முத்து ‘’பொய் சொல்லாத மீனா’’ என்று சொல்கிறான். 

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

‘’உங்க அம்மாவும் நான் வரக்கூடாதுன்னு சொன்னாங்களா’’ என்று முத்து கேட்க ‘’அம்மா எதுக்கு அப்படி எல்லாம் சொல்ல போறாங்க’’ என்று மீனா சொல்ல ‘’அப்போ உன் தம்பி சொன்னான் அதானே’’ என்று முத்து மடக்குகிறான். பிறகு சத்யா சிட்டியோடு சேர்ந்து சுத்துவதை பற்றி கோபமாக பேசிவிட்டு ‘’புருஷனுக்கு மரியாதை இல்லாத இடத்துக்கு பொண்டாட்டியும் போகக்கூடாது… நீயும் போகாத’’ என்று கண்டிஷன் போட்டு ‘’நான் சொன்னதை கேட்பேனு நம்புறேன்’’ என்று சொல்லி கிளம்பி செல்கிறான். 

சத்யா சொன்ன வார்த்தை! 

அடுத்ததாக கோயிலில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து மீனாவுக்காக அவளது குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது. மீனா வீட்டில் வருத்தமாக உட்கார்ந்திருக்க அவளது அம்மா போன் போட்டு ‘’எங்கடி இருக்க’’ என்று கேட்க ‘’மீனா வீட்ல தான் இருக்கேன் கொஞ்சம் வேலை இருக்கு வர முடியுமான்னு தெரியல நீங்களே பண்ணிடுங்க’’ என்று சொல்கிறாள். ‘’எல்லாரும் சேர்ந்து கூழ் ஊற்றுவதாக தான் வேண்டிக்கிட்டேன்’’ என்று சொல்லி ‘’சத்யா வேற அக்கா எங்கன்னு கேட்டுகிட்டே இருக்கான்… நீயே பேசு’’ என்று போனை கொடுக்கிறாள். மீனா சத்யாவிடமும் ‘’இங்க வேலை இருக்கு மாமா வேற’’ என்று இழுக்க ‘’என்ன அவர் போக கூடாதுன்னு சொல்லிட்டாரா? என் பிறந்தநாளுக்கு போக கூடாதுன்னு சொல்றதுக்கு அவர் யாரு? நீ வந்தா தான் இது எல்லாம் நடக்கும் இல்லைனா எல்லாத்தையும் நிறுத்திட்டு போயிட்டே இருப்பேன்’’ என்று போனை கட் பண்ணி விடுகிறான்.  

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

மீனாவை தூண்டிவிட்ட ஸ்ருதி! 

இதனால் மீனா வருத்தமாக உட்கார்ந்திருக்க ஸ்ருதி ‘’என்ன மீனா டல்லா இருக்கீங்க’’ என்று கேட்க ‘’இன்னைக்கு சத்யாவுக்கு பிறந்தநாள் அம்மா கோயிலில் கூழ் ஊத்துறதா வேண்டிக்கிட்டு இருக்காங்க… ஆனா அவர் போக கூடாதுன்னு சொல்லிட்டாரு என்று சொன்னதும் ஸ்ருதி நீங்க போகக்கூடாதுன்னு அவர் எப்படி சொல்லலாம்? நீங்க என்ன அவர்கிட்ட வேலையா செய்றீங்க? பர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்க? நீங்க போயிட்டு வாங்க’’ என்று தூண்டி விடுகிறாள்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com