‘சிறகடிக்க ஆசை’ இன்று : அமர்க்களப்படுத்திய முத்து - மீனா… ரோகிணி, மனோஜை சந்தேகப்படும் விஜயா!
பல்பு வாங்கிய விஜயா!
முத்துவும் மீனாவும் வெற்றிபெற்றது தெரிந்து விஜயா அதிர்ச்சி அடைகிறாள். பிறகு முத்து ஆட்டம் பாட்டம் என சந்தோஷமாக கொண்டாட அதை பார்த்து அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். மீனாவின் அம்மா ‘’உங்கள இப்படி பார்க்க சந்தோஷமா இருக்கு’’ என்று வாழ்த்து சொல்ல சீதா, அக்கம் பக்கத்தினர் என எல்லோரும் ‘’மிகச்சிறந்த ஜோடினு ஊருக்கு தெரியும்… இப்போ உலகத்துக்கே தெரிஞ்சிருக்கு'’ என்று சொல்கின்றனர்.
கூட சேர்ந்து ஆட்டம் போட்ட ரவி மற்றும் ஸ்ருதி!
முத்து மற்றும் மீனா டான்ஸ் ஆடுவதை பார்த்து இந்த பக்கம் ஸ்ருதி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க ரவி அமைதியாக ‘’இரு அம்மா பாத்தா திட்டுவாங்க’’ என்று சைகையில் சொல்கிறான். விஜயா அண்ணாமலையிடம் ‘’என்னங்க இது இப்படி அலப்பறை பண்ணிக்கிட்டு இருக்காங்க’’ என்று கேட்க ‘’அவங்க ஜெயிச்சுட்டு வந்த சந்தோஷத்துல இருக்காங்க… இதுல என்ன இருக்கு’’ என்று பல்பு கொடுக்கிறார். அதன் பிறகு சுருதி விஜயாவை தள்ளிவிட்டு ரவியை அழைத்துச் சென்று வெஸ்டர்ன் வாசிக்க தெரியுமா என்று கேட்டு வாசிக்க சொல்லி ரவியுடன் சேர்ந்து டான்ஸ் ஆட ரவி மற்றும் ஸ்ருதி ஆடுவதை பார்த்து முத்து மற்றும் மீனா இருவரும் டான்ஸ் ஆடுகின்றனர். இதைப் பார்த்து மனோஜ், ரோகிணி, விஜயா என மூவரும் கடுப்பாகின்றனர்.
ஆரத்தி எடுக்க வைத்த அண்ணாமலை!
ஆட்டம் பாட்டம் போட்டு முடிந்ததும் விஜயா மேலே கிளம்ப முயற்சி செய்ய அண்ணாமலை ‘’எங்க போற… இரு ஆரத்தி எடுக்க தானே வந்த’’ என்று ஆரத்தி எடுக்க சொல்கிறார். விஜயா ஸ்ருதியை கூப்பிட்டு ஆரத்தி எடுக்க சொல்ல ‘’நீங்க எடுத்தாதான் நல்லா இருக்கும்’’ என்று சொல்லி மீனாவின் அம்மாவை கூப்பிட அண்ணாமலை ‘’வா மா’’ என்று சொல்ல பிறகு மீனாவின் அம்மா, விஜயா மற்றும் ஸ்ருதி என மூவரும் சேர்ந்து ஆரத்தி எடுக்கின்றனர்.
விஜயாவிடம் வாங்கி கட்டிய மனோஜ்!
மனோஜ் விஜயா ரோகிணி என மூவரும் ஒன்றாக உட்காந்து காபி குடிக்கும்போது ‘’நீங்க ரெண்டு பேரும் படிச்சவங்கதானே… ஜெயிச்சு இருக்கலாம்ல’’ என்று திட்டுகிறாள். இன்னொரு பக்கம் முத்து மற்றும் மீனா என இருவரும் வென்றதைப் பற்றி சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இதைக் கேட்டு இவங்க அளப்பறை தாங்க முடியல என்று புலம்புகின்றனர். மனோஜ் ‘’அங்க இருந்தவங்க எல்லாம் சரியா கேள்வி கேட்கல… இவங்க பேசுறது கேட்டு பரிதாபப்பட்டு சிறந்த ஜோடினு பரிசு கொடுத்துட்டாங்க'’ என்று சொல்கிறான். விஜயா ‘’ஆடத் தெரியாதவன் தெரு கோணல்னு சொன்னானாம் அந்த மாதிரி இருக்கு நீ பேசுறது’’ என்று திட்டுகிறாள்.
பரிசுத்தொகை விஷயத்தில் முத்து எடுத்த முடிவு!
பரிசுத்தொகை விஷயத்தில் முத்து மற்றும் மீனா அதை அண்ணாமலையிடம் கொடுப்பதாக முடிவு எடுக்க அண்ணாமலை ‘’அத எதுக்கு என்கிட்ட கொடுக்குறீங்க… அதை ரூம் கட்ட வச்சுக்கோங்க’’ என்று சொல்கிறார். முத்து ‘’ஒரே நாள்ல ஒரு லட்ச ரூபா சம்பாதிச்சுருக்கேன்… அதை உங்ககிட்ட கொடுத்து உங்க முகத்துல சந்தோஷத்தை பார்க்கணும்’’ என்று சொல்ல ‘’நீங்க சொன்னதே எனக்கு சந்தோஷம்தான்’’ என்று அண்ணாமலை சொல்கிறார்.
மனோஜ் ‘’இவங்க மாசத்துக்கு ரெண்டு சண்டை போட்டுப்பாங்க… அப்படி இருக்கும் போது இவங்க எப்படி சிறந்த ஜோடியாக முடியும்?’’ என்று கேள்வி கேட்கிறான். ‘’எனக்கும் ரோகிணிக்கும் இதுவரைக்கும் சண்டையே வந்தது கிடையாது. அந்த அளவுக்கு நாங்க அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்குறோம்’’ என்று சொல்ல முத்து ‘’நடுவர்கள் ஒரு விஷயத்தை சொன்னாங்க… புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டையே வரல அப்படின்னா அவங்க ரெண்டு பேரும் ஏதோ ஒரு ரகசியத்தை மறைச்சிட்டு இருக்காங்கனு அர்த்தம்’’ என சொன்னதாக சொல்கிறான்.
குற்ற உணர்ச்சியில் ஓடிய ரோகிணி!
முத்து, மீனா இப்படி சொன்னதும் ரோகிணி குற்ற உணர்ச்சியில் கிச்சனுக்கு சென்று கண் கலங்குகிறாள். விஜயா அங்கு வர ரோகிணி தண்ணீர் குடிப்பது போல ஆக்டிங் செய்கிறாள். ‘’என்னம்மா இப்படி சொல்றாங்க ‘’என்று கேட்க ‘’அவங்க மோஸ்ட்லி இங்கிலீஷ்ல தான் பேசனாங்க… இவங்களுக்கு ஒண்ணுமே புரிஞ்சு இருக்காது ஏதோ உளறிட்டு இருக்காங்க’’ என்று சொல்லி சமாளிக்கிறாள். விஜயா இதே விஷயத்தை மனோஜிடம் கேட்க ‘’அவன் அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது’’ என்று சொல்கிறான். ஒரு வேலை இவங்களுக்குள்ளவும் ஏதோ ரகசியம் இருக்குமோ என்று விஜயா சந்தேகப்படுகிறாள்.
அப்செட்டில் ரோகிணி, மனோஜ் சொன்ன ஆறுதல்!
அடுத்து ரோகிணி ரூமுக்குள் அப்செட்டில் இருக்க மனோஜ் அங்கு வந்து ‘’ஜெயிச்சாதான் நாம சிறந்த ஜோடியா நாம எப்பவும் சிறந்த ஜோடி தான்... நீ எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்’’ என்று கையைப் பிடித்து ரொமான்டிக்காக பேச ரோகிணி சந்தோஷப்படுகிறாள்.