சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

Siragadikka Aasai : மனோஜை சுற்றி வளைக்கும் முத்து... எஸ்கேப் ஆகும் விஜயா... நகை உண்மை வெளிவருமா?

‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இன்றைய (11-07-2024) எபிசோட் ஹைலைட்ஸ்!
Published on
Summary

ஸ்ருதி மூலம் கஸ்டமர் கேரில் இருந்து பேசுவதுபோல மனோஜிடம் பேசி உண்மையைக் கறக்கும் முத்துவின் டெக்னிக் தோல்வியில் முடிகிறது.

அடுத்ததாக அம்மாவின் விஜயாவின் தோழியான பார்வதியிடம் பேச்சு விஷயத்தை வாங்கலாம் என முத்துவும் மீனாவும் முடிவெடுக்கிறார்கள்.

பார்வதியின் வீட்டில் என்ன நடக்கிறது?!

மடக்கும் ஸ்ருதி!

போனில் நகைக்கடையில் இருந்து பேசுவதுபோல மனோஜிடம் பேசும் ஸ்ருதி ''உங்களுக்காக ஸ்பெஷல் டிஸ்கவுன்ட் இருக்கு... நீங்க எப்ப வேணாலும் கடைக்கு வரலாம்'' என்றவள் ''சார் இதுக்கு முன்னாடி நீங்க வாங்கிட்டு போன நகை எப்படி இருக்கு ஃபீட்பேக் சொல்ல முடியுமா... எங்க கடையில வாங்குற நகையை கவரிங்னு சொல்லவே முடியாது... தங்க நகை மாதிரியே இருக்கும் அதை பார்த்து உங்க வீட்ல என்ன சொன்னாங்க'' என்று கேள்வி கேட்கிறாள். ஸ்ருதி துருவி துருவி கேள்வி கேட்பதை பார்த்து உஷாரான மனோஜ் ''நான் எதுவும் நகை வாங்கல'' என்று எஸ்கேப் ஆகிறான்.

கடுப்பான முத்து!

மனோஜ் எஸ்கேப் ஆனதைப் பார்த்து முத்து கோபப்பட, ''ரவி இந்த பிரச்சனையை இப்படியே விட்டுடலாம்'' என்று சொல்ல முத்து ''அவன் நகையை பத்தி கேட்டதும் கொஞ்ச நேரம் அமைதி ஆனான்... அதுல இருந்தே தெரியலையா அவன் தான் இந்த வேலையை பார்த்து இருக்கான்னு'' என ரவிக்கு புரியவைக்கிறான் முத்து.

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

முத்துவுக்கு உதித்த திடீர் ஐடியா!

முத்துவுக்கு திடீரென ஐடியா ஒன்று தோன்ற மீனாவுக்கு போன் போட்டு ''அம்மா எது பண்ணாலும் ஒருத்தவங்களுக்கு தெரியாம இருக்காது... அவங்கதான் பார்வதி அத்தை... அவங்ககிட்ட பேசிப் பார்த்தா உண்மை தெரிய வாய்ப்பிருக்கு'' என்று சொல்ல மீனா ''அவங்க கிட்ட நேரடியா எப்படி கேட்கிறது'' என்கிறாள். முத்து ''நேரடியா கேட்கக்கூடாது... போட்டுத்தான் வாங்கணும்... நீ அவங்க வீட்டுக்கு வந்துடு நானும் வரேன்'' என்று சொல்லி போனை வைக்கிறான்.

வெளவெளத்துப் போன விஜயா!

மனோஜ் வீட்டுக்கு வந்து விஜயாவை ரூமுக்கு அழைத்துச் சென்று ''அம்மா, எனக்கு ஒரு போன் வந்துச்சு... நகை வாங்கினீங்களே எப்படி இருக்கு... ஃபீட்பேக் சொல்லுங்கன்னு கேட்டாங்க'' என்று சொல்ல விஜயா ''கவரிங் நகைக்கு கூடவா இப்படி எல்லாம் கேட்பாங்க'' என்று கேள்வி கேட்கிறாள்.

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

மனோஜ் ''கவரிங் நகைக்கு இப்படியெல்லாம் கேட்க மாட்டாங்க'' என்று சொல்ல, விஜயா ''அப்போ அந்த முத்துதான் பேசி இருப்பான்'' என்று சொல்கிறாள். மனோஜ் ''இல்ல லேடி குரல்ல பேசினாங்க'' என்று சொல்ல ''அப்ப மீனாவா இருக்கும்'' என்று சொன்னதும் ''இங்கிலீஷ்ல பேசினாங்க'' என்று சொல்கிறான். ''அப்போ யாரையோ வெச்சு பேச வச்சிருக்காங்க'' என்பதை புரிந்து கொள்கிறாள். விஜயா மனோஜிடம் ''முத்துவுக்கு விஷயம் தெரியறதுக்குள்ள தங்க நகையை மாத்தி வைக்கணும்... பணத்துக்கு ஏற்பாடு பண்ணு'' என்று சொல்ல மனோஜ் ''பிசினஸ் சரியா போகல... என்னமா பண்றது'' என்று கேட்க ''என்னமோ பண்ணு... ஆனா, பணத்தை ரெடி பண்ணு'' என்று சொல்கிறாள்.

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

பார்வதியிடம் போட்டு வாங்கும் முத்து, மீனா!

பார்வதி வீட்டுக்கு வந்த முத்து, மீனா ''ஒரு பழக்கடைக்காரரோடு சவாரிக்கு போயிருந்தேன்... நிறைய பழம் கொடுத்தாங்க‌‌... உங்களுக்கு கொஞ்சம் எடுத்துட்டு வந்தேன்'' என்று சொல்லிக் கொடுத்து பேச்சை ஆரம்பிக்கின்றனர். ''பாட்டியோட பிறந்தநாள் விழாவுக்கு வந்தீங்களே... சாப்பிட்டு போனீங்களா சரியா பேச முடியல'' என்று கேட்க ''அதெல்லாம் நல்லா சாப்பிட்டு தான் வந்தேன். மீனா நல்லா கவனிச்சா'' என்று சொல்கிறாள் பார்வதி.

அடுத்ததாக ''பாட்டிக்கு தான் ரெட்டவடை செயின் போடணும்னு ஆசைப்பட்டேன்... ஆனா, அதை செய்ய முடியல... மீனாவோட நகையை விக்கலாம்னு கடைக்கு போனோம்'' என்று சொல்ல, உடனே பார்வதி ''அதான் கவரிங் நகையாச்சே'' என்று உளற ''அது உங்களுக்கு எப்படி தெரியும்'' என்று கேள்வி கேட்க ''விஜயா சொன்னா'' என்று சமாளிக்கிறாள் பார்வதி.

''அந்த நகை எப்படி மாறுச்சுன்னு ஏதாவது சொன்னாங்களா'' என்று கேட்க பார்வதி ''மீனா வீட்ல மாறி இருக்கணும்னு சொன்னா'', உடனே முத்து பாட்டியோட நகை எப்படி மாறுச்சு என்று கேட்க ''ஊர்ல மாத்தி கொடுத்து இருப்பாங்கனு சொன்னா'' என்று விஜயா சொன்னதை அப்படியே சொல்கிறாள்.

''அது எப்படி அத்தை ரெண்டு நகையும் ஒரே நேரத்துல மாறும்... நடந்தது என்னனு அம்மாவுக்கு தான் தெரியும்'' என்று சொல்ல ''ஆமாமா விஜயாவுக்கு தெரியும்'' என்று பார்வதி உளறி விடுகிறாள். முத்து பாவமாக பேசி உண்மையை கறக்க முயற்சி செய்ய பார்வதியும் ''அது வந்து விஜயா, மனோஜ்'' என உண்மையை சொல்ல வரும்போது விஜயா ஓடிவந்து பார்வதி என தடுத்து நிறுத்தி விடுகிறாள்.

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

மீண்டும் தோல்வியில் முடிவடைந்த முத்து பிளான்!

உள்ளே வந்த விஜயா ''இங்கே நீங்க என்ன பண்றீங்க'' என்று கேட்க முத்து ''ஏன் நாங்க எல்லாம் இங்க வரக்கூடாதா'' என்று திருப்பி கேள்வி கேட்க மீனா ''பழம் கொடுத்துட்டு போறதுக்காக வந்தோம்'' எனச் சமாளிக்கிறாள். பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பி வந்து விடுகின்றனர்.

அப்செட்டில் முத்து, வழியனுப்பிய மீனா!

பிறகு பார்வதி ''நல்ல வேலை நீ வந்துட்ட... ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தாக்கூட நான் உண்மையை சொல்லி இருப்பேன்'' என்று சொல்ல விஜயா ''இனிமே கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்'' என்று முடிவெடுக்கிறாள். முத்து இருந்த ஒரு பிளானும் சொதப்பிடுச்சு என்று அப்செட்டில் இருக்க செல்வம் போன் பண்ணி ''ஃபிரிட்ஜ் வாங்க கடைக்கு கூப்பிட முத்து நான் வரலடா என்று சொல்ல மீனா போயிட்டு வாங்க'' என்று அனுப்பி வைக்கிறாள்.

கடையில் கிடைக்குமா க்ளூ?!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com