சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

‘சிறகடிக்க ஆசை’ இன்று : கிரிஷ்ஷை தத்தெடுக்க முடிவெடுத்த முத்து, மீனா… கடுப்பாகும் ரோகிணி!

விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (03-08-2024) எபிசோட் ஹைலைட்ஸ்!
Published on

அதிர்ச்சி கொடுத்த ரோகிணியின் அம்மா! 

‘’என் பொண்ணு தான் கிரிஷ்ஷோட அம்மா அவளுக்கு 19 வயசு இருக்கும்போது வயசான ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டேன். கிரிஷ் பிறந்த கொஞ்ச நாள்ல அவர் உடம்பு முடியாம இறந்து போயிட்டாரு. அவ வாழ்க்கையையே அழிச்சிட்டேன்னு அவளுக்கு என் மேல கோபம். அதனால அவ இங்க சரியா வர்றது கிடையாது. நானும் அவளுக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை அமைச்சுக்கட்டும்னு விட்டுட்டேன்’’ என்றும் சொல்கிறார். 

அதிர்ச்சியான முத்து, மீனா!

ரோகிணி அம்மா சொன்ன கதையைக் கேட்டு முத்துவும் மீனாவும் அதிர்ச்சி அடைகின்றனர். ‘’என்னதான் இருந்தாலும் நீங்க இப்படி பண்ணி இருக்கக்கூடாது மா… அவங்களுக்கு அவ்வளவு சின்ன வயசு, எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க’’ என்று மீனா சொல்ல ‘’எனக்கு அப்போ வேற வழி தெரியல’’ என்று சொல்கிறார். ‘’தப்பு பண்ணது நீங்களும் அந்த மாப்பிள்ளையும்தான்… இதுல கிரிஷ் எதுக்கு பாதிக்கப்படணும்? நீங்க உங்க பொண்ணுக்கு போன் பண்ணுங்க நான் பேசணும்’’ என்று முத்து சொல்ல ‘’இல்ல முத்து அவ இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறிட்டு வரா… கூடிய சீக்கிரம் கிரிஷ்ஷை அவ கூடவே கூட்டிட்டு போய் வச்சுப்பா. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு’’ என்று சொல்கிறாள். 

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

அம்மாவின் பாசத்தை பற்றி சொல்லிய முத்து! 

‘’அம்மா இருந்தும் அந்த பாசம் கிடைக்காதது சுத்தி கடல் தண்ணி இருந்தும் தாகத்துல தவிக்கும்போது ஒரு சொட்டு தண்ணீர் குடிக்க முடியாது… அந்த மாதிரி தான்’’ என்று முத்து தனது வாழ்க்கையை ஒப்பிட்டு வருத்தப்படுகிறான். ‘’க்ரிஷ் ரொம்ப பாவம்’’ என புலம்புகிறான்.

ஏக்கத்துடன் கேக் வெட்டிய க்ரிஷ்! 

அதன் பிறகு முத்து, மீனா கிரிஷ்ஷை கூட்டிச்சென்று கேக் வெட்டுகின்றனர். க்ரிஷ் அம்மா பக்கத்தில் இல்லாத ஏக்கத்துடன் கேக் வெட்டுகிறான். ரோகிணி முத்து மீனா இருப்பதால் அப்செட் ஆகி அங்கிருந்து வெளியே வந்து விடுகிறாள். தனியாக வெளியே வந்த ரோகிணியின் அம்மா அவளுக்கு போன் போட்டு ‘’எங்க இருக்க’’ என்று கேட்க ‘’நடு ரோட்டில் நிக்கிறேன். நீ பண்ண வேலைக்கு நிஜமாவே நான் ரோட்லதான் நிக்கணும் போல. முதல்ல அவங்களை வீட்டை விட்டு வெளியே துரத்து… அதுக்கப்புறம் நான் வரேன்’’ என்று போனை வைத்து விடுகிறாள். அதன் பிறகு முத்து, மீனா வீட்டுக்கு கிளம்பி வருகின்றனர். 

கண்டிஷன் போட்ட ரோகிணி!

முத்து மீனா கிளம்பி சென்றதும் ரோகிணி வீட்டுக்கு வர க்ரிஷ் அம்மா என்று கூப்பிட்டு சென்று கேக் ஊட்டி விடுகிறான். ‘’நீ இல்லாமையே கேக் கட் பண்ணிட்டேன் சாரி’’ என்று சொல்ல ரோகிணி ‘’பரவால்ல கிரிஷ்’’ என்று சொல்லி அவனை வெளியே விளையாட அனுப்புகிறாள். 

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

அதன் பிறகு அம்மாவிடம் ‘’நீ எதுக்கு அவங்க கிட்ட விஷயத்தை சொன்ன? முத்துவுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தா கூட துருவித் துருவி உண்மையை கண்டுபிடிச்சிடுவாம்மா’’ என்று கோபப்படுகிறாள். ‘’அவங்களும் ஒவ்வொரு முறையும் போன் பண்ணி குடுனு கேட்டுக்கிட்டே இருக்காங்க. நானும் எவ்வளவு நாள் தான் சமாளிச்சுட்டு இருக்கிறது. இப்படி சொன்னாதான் அவங்க அத பத்தி கேட்காம இருப்பாங்க. நீ மொத்தமா உண்மையை சொல்லிட்டா இன்னும் பிரச்சனை குறையும்’’ என்று சொல்ல ரோகிணி ‘’எனக்கு எப்போ சொல்லணும்னு தெரியும்… நீ அமைதியா இரு’’ என்று திட்டுகிறாள். ‘’இன்னொரு முறை அவங்க இங்க வரக்கூடாது வந்தா நீ முகத்தில் அடிச்ச மாதிரி பேசு… அதுக்கப்புறம் அவங்களாகவே வர்றதை நிறுத்திடுவாங்க’’ என்று சொல்லி கிளம்பி வருகிறாள். 

கிரிஷ்ஷை தத்தெடுக்க முடிவெடுத்த முத்து, மீனா!

கிரிஷ் வாழ்க்கையைப் பற்றி அறிந்த முத்து மீனா இருவரும் வருத்தத்தில் பேசாமல் அமைதியாகவே வர மீனா ‘’என்ன எதுவும் பேசாம இருக்கீங்க’’ என்று கேட்க முத்து ‘’நீயும்தான் பேசாம இருக்க’’ என்று சொல்கிறான். ‘’கிரிஷ்ஷை நெனச்சா எனக்கு கவலையா இருக்கு’’ என்று மீனா சொல்ல முத்து ‘’நானும் அத பத்தி தான் யோசிச்சிட்டு வரேன்… அவனோட அம்மாவும் என் அம்மாவும் போல தான்’’ என்று முத்து சொல்கிறான். ‘’எனக்காவது அப்பானு ஒருத்தர் இருக்காரு… ஆனா அவனுக்கு அது கூட இல்லை’’ என்று வருத்தப்படுகிறான். 

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை

முத்து நான் ஒன்னு யோசிச்சு வச்சிருக்கேன்’’ என்று சொல்ல மீனாவும் ‘’எனக்கு ஒண்ணு தோணுது’’ என்று சொல்கிறாள். முத்து ‘’என்னன்னு முதல்ல நீ சொல்லு’’ என்று சொன்னதும் மீனா ‘’கிரிஷ்ஷை நாம ஏன் தத்தெடுக்க கூடாது’’ என்று கேட்டதும் சடர்ன் பிரேக் போடுகிறான் முத்து. 

மீனா ‘’நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா’’ என்று கேட்க ‘’நானும் இதையேதான் யோசிச்சேன். நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கிறோம்… என் அருமை பொண்டாட்டி’’ என்று சொல்கிறான். 

‘’இருந்தாலும் வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லி சம்மதம் வாங்கிய பிறகு தான் கிரிஷ்ஷை தத்தெடுக்கணும்’’ என்று சொல்கிறாள்.

கோயிலில் சீட்டு போட்ட மீனா!

மீனா முத்துவை கோயிலுக்கு வண்டியை விடச் சொல்கிறாள். கோயிலுக்கு வந்ததும் ‘’கடவுள் என்ன நினைக்கிறார்னு தெரிஞ்சிக்கலாம்’’ என்று சொல்லி தத்தெடுக்கலாம், வேண்டாம் என சீட்டு எழுதி போட்டு சாமி பாதத்தில் வைத்து ஒரு சீட்டெடுத்து தர சொல்ல ஐயரும் ஒரு சீட்டெடுத்து வந்து கொடுக்கிறார். அதைப் பிரித்துப் பார்க்க ‘’வேண்டாம்’’ என்று வருவதைப் பார்த்து மீனா அப்செட் ஆகிறாள். முத்து ‘’சாமி இதெல்லாமா பண்ணிக்கிட்டு இருக்கும்? நமக்கு சரின்னு பட்டா நல்ல விஷயம் எதுவா இருந்தாலும் உடனே பண்ணிடனும்’’ என்று சொல்கிறான். ஆனால் மீனா ‘’வேணா கடவுள் வேற எதையோ நினைக்கிறாரு’’ என்று சொல்ல முத்து ‘’எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் நீ வா’’ என்று அழைத்துச் செல்கிறான்.

கிரிஷ், ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியவரப்போகும் நேரம் நெருங்குது!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com