மாட்டப்போகும் ‘பார்லர் அம்மா’ ரோகிணி… உறுதியான முத்துவின் சந்தேகம்! ‘சிறகடிக்க ஆசை’ எபிசோட் ஹைலைட்ஸ்
வீட்டில் யாருக்கும் மலேசிய மாமா பற்றிய சத்தேகம் வரக்கூடாது என வீடியோ காலில் மாமாவை எல்லோரிடமும் பேசவைக்கிறாள் ரோகிணி
வித்யா நீ மாட்டிக்கப்போற எனச்சொல்ல, ‘’மாட்றதுக்கு முன்னாடி மனோஜ் எஸ்கேப் ஆகமுடியாதபடி ஒரு விஷயம் பண்ணப்போறேன்'’ எனத் தன்னுடைய பிளானை சொல்கிறாள் ரோகிணி.
மீனா மலேசிய மாமா துபாய்லதான் இருக்காரு எனச்சொல்ல, முத்துவோ ‘’எனக்கு இப்போதான் கன்ஃபர்ம் ஆகியிருக்கு'’ எனத் தன்னுடைய சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறான்.
காட்சி - 1 : முத்துவின் முடிவும் ரோகிணியின் புலம்பலும்!
முத்து மீனாவிடம் ‘’எனக்கு ஆரம்பத்துல இருந்தே அந்த மலேசியா மாமா மேல ஒரு சந்தேகம் இருந்துச்சு… நீ வேற இப்போ நேர்ல பார்த்ததா சொல்ற… அப்படினா உண்மை என்னன்னு கண்டுபிடிச்சிட வேண்டியதுதான்’’ என்று சொல்கிறான். மீனா எப்படி என்று கேட்க, ‘’அந்த மலேசியா மாமா ஊருக்கு வந்திருந்தப்போ எல்லாரோடவும் சேர்ந்து எடுத்துகிட்ட போட்டோ என்கிட்ட இருக்கு… அதை என் பிரண்ட்ஸுக்கு எல்லாருக்கும் அனுப்பி, அவரைத் தேடச்சொல்லப்போறேன்'’ என்று சொல்கிறான். இதை ஒட்டுக்கொண்டிருக்கும் ரோகிணி ‘’இந்த மீனா வேற போட்டு கொடுத்துட்டா… முத்து வேற போலீஸ் வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டான்'’ என புலம்புகிறாள்.
காட்சி - 2 : மலேசியா மாமாவின் வீடியோ கால்!
அடுத்த நாள் காலை வீட்டில் எல்லோரும் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது ரோகிணி வீடியோ காலில் பேசியபடி வெளியே வர விஜயா ‘’யாருமா’’ என்று கேட்க, ‘’மாமா போன் பண்ணி இருக்காரு ஆன்ட்டி’’ என்று சொல்கிறாள். பிறகு மாறி மாறி எல்லோரும் மலேசியா மாமாவிடம் பேசுகின்றனர். மனோஜ் பேசும்போது ‘’என்ன மாப்ள எப்படி இருக்கீங்க… பிசினஸ் எல்லாம் எப்படி போகுது… அவங்க அப்பா அனுப்புன பணம் வந்து சேர்ந்துச்சா? இன்னும் ஒரு மாசத்துல ஜெயில்ல இருந்து வெளியே வரதுக்கு வாய்ப்பு இருக்கு… இப்போ ஒரு அஞ்சு லட்ச ரூபா அனுப்பி இருக்கோம்… கூடிய சீக்கிரம் வந்து சேர்ந்துடும்’’ என்று சொல்கிறார்.
முத்துவின் கிடுகிப்பிடி கேள்வி!
மீனாவிடம் பேசும் மலேசிய மாமா ‘’சென்னைக்கு சீக்கிரம் வரணும் கடைசியா உங்களை எல்லாம் பார்த்ததோடு இன்னும் அந்த பக்கம் வரல’’ என்று சமாளிக்கிறார். அதைத்தொடர்ந்து முத்து பேசும்போது ‘’துபாய்ல எங்க இருக்கீங்க… என் ஃப்ரெண்ட் அங்க தான் கார் ஓட்டுறான். உங்களப் பார்க்க வருவான்… அட்ரஸ் சொல்லுங்க’’ என்று கேட்கிறான். உடனே ரோகினி ‘’போனை வாங்குங்க… அவருக்கு நிறைய வேலை இருக்கும்’’ என மனோஜிடம் சொல்ல முத்துவிடமிருந்து போனை பிடுங்குகிறான் மனோஜ்.
காட்சி - 3 : உறுதியான முத்துவின் சந்தேகம்!
போன் பேசி முடித்ததும் ரூமுக்கு வந்த மீனா முத்துவிடம் ‘’நாமதான் ஏதோ தப்பா நினைச்சுட்டு இருக்கோம்… அவரு மலேசியாவுல தான் இருக்காரு’’ என்று சொல்ல முத்துவோ ‘’எனக்கு இப்போதான் சந்தேகமே கன்ஃபர்ம் ஆகியிருக்கு. இவ்வளவு நாளா போன் பேசாத மாமா அவரை நீ பார்த்ததா பார்லர் அம்மா கிட்ட சொன்னதும் போன் பண்ணி இருக்காருன்னா என்ன அர்த்தம்… இதுல ஏதோ வில்லங்கம் இருக்கு… கூடிய சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன்’’ என்று சொல்கிறான்.
காட்சி - 4 : பிரவுன் மணி என்கிற மலேசிய மாமாவின் எச்சரிக்கை!
வித்யாவை பார்க்க வரும் ரோகிணி ‘’வீட்ல எல்லாரும் நம்பிட்டாங்க’’ என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்க அங்கு வரும் பிரவுன் மணி என்கிற மலேசிய மாமா ‘’என்ன பாப்பா… நீ சொன்ன மாதிரியே பேசிட்டேனா’’ என்று கேட்கிறார். ரோகிணி ‘’ரொம்ப தேங்க்ஸ்’’ என்று சொல்ல ‘’ஒரே ஒரு சின்ன அறிவுரை… ஆட்டுக்கு என்ன தான் தீனி போட்டு வளத்தாலும் அது ஒரு நாள் பிரியாணியாதான் ஆகும்... அதே மாதிரிதான் நீ சொல்ற பொய் எல்லாம் ஒரு நாள் உடையத்தான் செய்யும்… அப்போ நீ எதுவும் பண்ண முடியாது. சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன்’’ என்று ரோகிணியை எச்சரித்துவிட்டு கிளம்பி செல்கிறான். உடனே வித்யா ‘’என்னடி இந்த ஆள் வேற இப்படி சொல்லிட்டு போறான்… கூடிய சீக்கிரம் நீ மாட்டிடுவ போலயே’’ என்று சொல்ல ரோகிணி ‘’அதுக்குள்ள மனோஜை முழுசா என்னுடைய கன்ட்ரோலுக்குள்ள கொண்டு வரணும்’’ என்று சொல்கிறாள். ஆல்ரெடி நீ சொல்றத கேட்டுட்டுத்தானே இருக்காரு என்று வித்யா கேட்க ‘’மனோஜ் என்னை விட்டுட்டு போக முடியாத மாதிரி எங்களுக்குள்ள ஒரு புது உறவு வரணும்… ஒரு குழந்தையை பெத்துக்கணும்’’ என்று சொல்ல வித்யா ‘’ஓ இரண்டாவது குழந்தைக்கு ரெடியாகிட்டியா’’ என்று கலாய்க்கிறாள்.
காட்சி - 5 : ஸ்ருதி ரவிக்கு வைக்கும் டெஸ்ட்!
ஸ்ருதி போனில் வீடியோ ஒன்றை பார்த்துவிட்டு ரவியிடம் ‘’ஒருத்தர் பொண்டாட்டிய தூக்கிட்டு மூணு கிலோமீட்டர் நடந்திருக்காரு… நீ என்னை அதே மாதிரி தூக்கிட்டு இந்த ஹால்ல மூணு ரவுண்டு வா’’ என்று சொல்கிறாள். ‘’அப்பதான் உனக்கு என் மேல லவ் இருக்குன்னு அர்த்தம்’’ என்று அடம் பிடிக்க ரவி வேறு வழி இல்லாமல் ஸ்ருதியைத் தூக்கிக்கொண்டு நடக்க முத்து, மீனா இதை பார்த்து சிரித்தபடி ‘’என்னடா பல குரல் கீழ விழுந்து விழுந்துடுச்சா என்று முத்து ரவியிடம் கேட்க ‘’இல்லடா ஒரு வீடியோவை பார்த்துவிட்டு அதே மாதிரி தூக்கி நடக்க சொல்றா’’ என்று புலம்புகிறான்.
அப்போ நாளைக்கு எபிசோட்ல மீனாவைத் தூக்கிட்டு முத்து சுத்தப்போறாரு… அதானப்பா ஸ்கிரிப்ட்டு!