'வள்ளியின் வேலன்' இன்று : அம்மா வாங்கிய சத்தியம்... பரிதவிக்கும் வேலன்... நடந்தது என்ன?
சட்டையை பிடித்த வேலன்!
ரஞ்சித் தனது அப்பாவை அடித்ததை அறிந்து வேலன் அவனது சட்டையை பிடிக்க, ரத்னவேல் ரஞ்சித்துக்காக மன்னிப்பு கேட்கிறார். வேலனின் அப்பாவை ரத்னவேல் மணமேடைக்கு அழைத்துச் சென்று அவரது கையால் தாலி எடுத்து கொடுத்து கல்யாணத்தை நடத்தி வைக்கிறார். கல்யாணம் முடிந்து ரஞ்சனி வேலனுக்கு மறைமுகமாக நன்றி சொல்கிறாள்.
பேச்சியம்மா வாங்கிய சத்தியம்!
அடுத்த நாள் காலையில் வேலன் பரபரப்பாக வேலைக்கு கிளம்ப அவனது அம்மா ''இனிமே நீ அங்க வேலைக்கு போக வேண்டாம்'' என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். வேலன் ''ஏன்'' என்று காரணம் கேட்க ''உன் அப்பாவையே அடிச்சவங்க கிட்ட நீ வேலைக்கு போகணுமா'' என்று கேட்டு ''நீ இனிமே அந்த வேலைக்கு போகக்கூடாது'' என சத்தியம் வாங்கிக் கொள்ள வேலன் செய்வதறியாது தவிக்கிறான்.
வேலனை காணாமல் தவிக்கும் ரத்தினவேல்!
வீட்டில் வேலனை காணாமல் தவிக்கும் ரத்னவேல் ஏன் இன்னும் வரல என்று போன் போட சொல்ல வேதநாயகி வேலனுக்கு போன் செய்ய போனை எடுக்கும் பேச்சியம்மா ''இனிமே என் புள்ள உங்க வீட்டுக்கு வேலைக்கு வரமாட்டான்'' என்று சொல்லி போனை வைத்து விடுகிறாள்.
வேதநாயகி போடும் கணக்கு!
ரத்னவேல் பாண்டியனிடம் ''வேலன் இனிமே வேலைக்கு வரமாட்டானாம்... அவங்க அம்மா ரொம்ப கறாரா சொல்லிட்டா... இனிமே அவனை நம்பாத... ரஞ்சித்தை உன் கூடவே வச்சுக்க... நீ சொல்ற எல்லா வேலையும் அவள் செய்து முடிப்பான்'' என்று சொல்ல ரத்னவேல் எதையும் காதில் வாங்காமல் கிளம்பி செல்கிறார்.
வள்ளி சொன்ன வார்த்தை!
வேதநாயகி பேசுவதை கேட்ட அம்மு ஓடிப்போய் வள்ளியிடம் ''வேலன் இனிமே இந்த வீட்டுக்கு வரவே மாட்டானாம். அத்தை சொல்லிக்கிட்டு இருந்தது'' என்று நடந்த விஷயத்தை சொல்ல வள்ளி ''உனக்கு அவனுக்கும் அப்பாவுக்கும் இருக்க பாசத்தை பத்தி தெரியல... அவனால வராமலாம் இருக்க முடியாது... கண்டிப்பா வருவான்'' என்று சொல்கிறாள்.
கெஞ்சும் வேலன்!
இங்கே வேலன் அம்மாவிடம் ''ஒரே ஒரு முறை ஐயாவை பாத்துட்டு வந்துடுறேன்... ஐயா கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்'' என கெஞ்சியபடி இருக்கிறான். வேலனின் கோரிக்கையை ஏற்பாரா பேச்சியம்மா? ரத்னவேல் செய்யப் போவது என்ன'' என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.