'வள்ளியின் வேலன்' இன்று : ஷாக் கொடுத்த ரத்னவேல்... அவனமானப்பட்ட வேதநாயகி.!
வேதநாயகியின் கணக்கு!
வேலன் வேலைக்கு வர மாட்டான் என்பதால் ரஞ்சித்தை ரத்னவேலுடன் சேர்த்து விட கணக்கு போடுகிறாள் வேதநாயகி. இங்கே வேலன் வீட்டில் வெறுப்பாக உட்கார்ந்திருக்க ரேணுகா அப்பாவை அழைத்து வந்து பிஸ்னஸை பார்த்துக் கொள்ளச் சொல்கிறாள். ஆனால், வேலன் ''என்னால ரத்னவேல் ஐயாவை விட்டுட்டு வர முடியாது'' எனச் சொல்கிறான்.
பிறகு வள்ளி இன்று முதல் விடுதலை என்று ஸ்டேட்டஸ் வைக்க அதை வேலன் பார்க்க அதன் பிறகு வள்ளி போன் செய்ய வேலனின் அம்மா பேச்சி போனை எடுக்க ''வேலன் வேலைக்கு வராததே நல்லது தான்... அவன் ரெஸ்ட் எடுக்கட்டும். இங்கே அத்தை நாலு, அஞ்சு பேரை கூப்பிட்டு வேலைக்கு ஆள் எடுத்துட்டு இருக்காங்க'' என்று சொல்லி போனை வைக்கிறாள்.
விசிட் அடித்த ரத்னவேல்!
ரத்னவேல் வேலன் வீட்டிற்கு வர எல்லாரும் ஷாக் ஆகின்றனர். உள்ளே வந்த அவர் ''நான் இன்னும் சாப்பிடவே இல்ல... சாப்பாடு ரெடி பண்ணுங்க'' என்று சொல்ல வேலனின் குடும்பத்தினர் சமையல் செய்து பரிமாற சாப்பிட்டு முடித்த அவர் ''என் அப்பத்தா கையால் சாப்பிட்ட மாதிரி இருக்கு'' என்று சொல்கிறார்.
மனம் மாறிய பேச்சியம்மா!
அடுத்து ரத்னவேல் எதுவும் சொல்லாமல் கிளம்ப வேலன் அம்மாவை பார்க்க அவள் ''போய்ட்டு வா'' என்று கண் காட்ட வேலன் சந்தோஷமாக கிளம்பிச் செல்கிறான். மறுபக்கம் வேதநாயகி கட்சிக்காரர்கள் சிலரை கூப்பிட்டு ''இனிமே ரஞ்சித் தான் எல்லா வேலையையும் பார்க்க போறான். அவனுக்கு எல்லாத்தையும் சொல்லி கொடுங்க'' என்று சொல்கிறாள்.
அவமானப்பட்ட வேதநாயகி!
இந்த சமயத்தில் வீட்டிற்கு வரும் ரத்னவேல் கட்சிக்காரர்களை பார்த்து ''இங்கே என்ன பண்றீங்க'' என்று கேட்க ''ரஞ்சித் ஐயா தான் இனிமே எல்லா வேலையும் பார்க்க போறதா சொன்னாங்க... வேதநாயகி அம்மா அவருக்கு எல்லாத்தையும் சொல்லி கொடுக்க சொன்னாங்க'' என்று சொல்ல ரத்னவேல் ''இவனா'' என்று சிரிக்கிறார்.
வேலனுக்கு பாராட்டு!
''இவன் தான் வேலன்... என்னோட வேலன்... இவன்தான் எனக்கு எல்லாமே'' என்று வேலனை பாராட்டி ரஞ்சித்தை அவமானப்படுத்த வேதநாயகியும் ரஞ்சித்தும் கடுப்பாகின்றனர்.