'வள்ளியின் வேலன்' இன்று : ரத்னவேலை பிரிய முடிவெடுத்த வேலன்... வேதநாயகி சதியால் நடந்தது என்ன?
பொங்கல் வைத்த வள்ளி!
போன் கால் மூலமாக வேலன் பொங்கல் வைப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்க வள்ளி அதை அப்படியே ஃபாலோ செய்து பொங்கல் வைத்துக் கொண்டிருக்க இதை கவனித்த வேதநாயகி காதில் இருந்து ஏர் பட்ஸை எடுத்து விட வேலன் சைகையில் சொல்லித் தர வள்ளி பொங்கல் வைத்து முடிக்கிறாள்.
வேலனை விரட்ட வேதநாயகியின் சதி!
வேதநாயகி பூசாரியை தனியாக சந்தித்து சாமி வந்து குறி சொல்லுவது போல ''வேலனால் பெரிய ஆபத்து இருக்கு... அவனை உங்ககிட்ட இருந்து தள்ளியே வையுங்க என சொல்லணும்'' என்று சொல்கிறாள். அதேபோல் பூசாரியும் சாமி வந்து ஆடி குறி சொல்வது போல நடிக்கிறார். ரத்னவேல் ஊர்காரர்களிடம் பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த வேதநாயகி ''வாப்பா தம்பி சாமி குறி சொல்லுது'' என்று சொல்லி அழைத்துச் செல்கிறாள்.
சாமியார் கொடுத்த அதிர்ச்சி!
ரத்னவேல் அங்கு வந்ததும் குறி சொல்லும் சாமியார் ''இந்த வேலனால உனக்கு பெரிய ஆபத்து இருக்கு அவனை உன்கிட்ட இருந்து தள்ளியே வை. இல்லைனா உனக்கு பெரிய பிரச்னை வரும்'' என்று சொல்லி எச்சரிக்கை கொடுக்க வேதநாயகி ''வேலன் இல்லாம தம்பியால் எப்படி இருக்க முடியும்'' என்று கேட்க ''சொன்னத மட்டும் செய்யுங்க'' என அதட்டுகிறார் சாமியார்.
அதன் பிறகு வேதநாயகி சாமியாரை தனியாக கூப்பிட்டு பணத்தை கொடுக்க அவர் ''நான் சொன்னதெல்லாம் உண்மை... அந்த ஆத்தாவே என் மேல வந்து சொன்னது இதுதான். வேலனால் ஐயாவுக்கு ஆபத்து இருக்கு'' என்று சொல்ல வேதநாயகி சந்தோஷப்படுகிறாள். அந்த சாமியே நமக்கு ஏத்த மாதிரி தான் பிளான் போடுது என சொல்கிறாள்.
வேலன் எடுத்த முடிவு!
சாமியார் சொன்னதை கேட்டு வேலன் ''என்னால உங்களுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது... நான் உங்களை விட்டு போயிடுறேன்'' என்று கண்கலங்கி பேச ரத்னவேல் ''என்னடா பேசுற'' என்று அடிக்கக் கை ஓங்குகிறார். ''கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன? நான் தான் உன் சாமினு சொன்னல... உன் சாமி சொல்றேன் நீ எங்கேயும் போகக்கூடாது'' என்று சொல்லி வேலனை கட்டி அணைத்துக் கொள்கிறார்.
அடுத்து நடக்கப்போவது என்ன? வேலனால் வரப்போகும் ஆபத்து என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்.