'வள்ளியின் வேலன்' இன்று : ஐயாவுக்காக வரிந்து கட்டிய வேலன், வள்ளி வைத்த வேட்டு!
அசால்ட் செய்த வள்ளி!
வள்ளியை வம்பு இழுக்க சொல்லி ரஞ்சித் பணம் கொடுத்து விட்டு சென்றதைத் தொடர்ந்து சரத் தன்னுடைய நண்பர்களிடம் ''நாம கொடுக்கிற பிரச்சனைல அவ காலேஜை விட்டே ஓடணும்'' எனச் சொல்கிறான்.
அதைத் தொடர்ந்து வள்ளி கல்லூரிக்குள் நுழைய சரத் மற்றும் அவனது நண்பர்கள் வள்ளியிடம் வம்பிழுக்கின்றனர். ஆனால் வள்ளி எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்க ஆனந்தி கோபப்பட வள்ளி ''நாம படிக்க வந்திருக்கோம்'' என்று சொல்லி அமைதியாக்கி அழைத்து சென்று விடுகிறாள்.
ரத்னவேல் செய்த உதவி!
இன்னொரு பக்கம் ரத்னவேல் துணை முதல்வர் தேர்வு நடக்கும் இடத்துக்கு வருகிறார். அப்போது அங்கு ஒரு குழந்தையின் படிப்பு செலவுக்காக உதவ எதிரணியினர் அதைப் பார்த்து எல்லாம் நாடகம் என்பது போல பேசுகின்றனர்.
வரிந்து கட்டிய வேலன்!
ரத்னவேலின் உதவி பற்றி தவறாக பேசியதும் உள்ளே நுழைந்த வேலன் ''என்னோட ஐயா வெறும் பேரும் புகழுக்காக இப்படி பண்றவரு கிடையாது'' என பதிலடி கொடுக்கிறான். அதன் பிறகு கட்சி துணை முதல்வரை தேர்வு செய்யும் வேலைகள் தொடங்குகின்றன.
வள்ளி வைத்த செக் மேட்!
கிளாஸ் ரூமில் ஷரத் வள்ளி மீது ராக்கெட் விட அதை ப்ரொஃபசர் பார்த்து வள்ளி மற்றும் சரத்தை கூப்பிட்டு கண்டிக்கிறார். சரத் வள்ளிதான் முதலில் தன் மீது ராக்கெட் விட்டதாக பழி போடுகிறான். வள்ளி அவன் சொல்வது பொய், ''இதுவரைக்கும் நடந்த கிளாஸை கவனிச்சிட்டுத்தான் இருந்தேன்... கேள்வி கேளுங்க என்னால பதில் சொல்ல முடியும்'' என்று சொல்ல ப்ரொஃபசர் கேள்வி கேட்க வள்ளி பதில் சொல்லி உண்மையை நிரூபிக்க சரத் வெளியே துரத்தப்படுகிறான்.
ரஞ்சித் கொடுத்த அடுத்த ஐடியா!
பிறகு சரத் ரஞ்சித்துக்கு போன் போட்டு ''அவளை ஒண்ணுமே பண்ண முடியல'' என்று சொன்னதும் ரஞ்சித் ''அவ அப்பாவ பத்தி பேசு கண்டிப்பா கோபப்படுவா'' என்று ஐடியா கொடுக்கிறான். அடுத்து நடக்கப்போவது என்ன? வள்ளி செய்யப் போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.