'வள்ளியின் வேலன்' இன்று : தன்மானமா, பதவியா... வள்ளியால் வந்த சிக்கலால் ரத்னவேல் எடுத்த முடிவு!
சந்தோஷத்தில் வேதநாயகி!
வள்ளி ஆட்டோவில் வந்து கொண்டிருக்க இங்கே ரஞ்சித் வேதநாயகியிடம் வள்ளி வீடியோவை போட்டு காட்டி 'வள்ளிக்கும் சிக்கல் மாமாவோட பதவிக்கும் சிக்கல்' என்று சொல்ல அதை கேட்டு வேதநாயகி சந்தோஷப்படுகிறாள்.
பதறிய குடும்பம்!
இதே நேரத்தில் இன்னொரு பக்கம் முத்து வீடியோவை பார்த்து விட்டு பதறியடித்து ஓடி வந்து விஷயத்தை சொல்ல வேதநாயகி எதுவும் தெரியாதது போல் பதறி ரத்னவேலுக்கு போன் போடச் சொல்கிறாள். முத்து ரத்னவேலுக்கு போன் போட அவர் போனை எடுக்கவில்லை. வேலனுக்கு போன் போட அவனும் போனை எடுக்காததால் குடும்பத்தினர் பதற்றம் அடைகின்றனர்.
வேதநாயகி போடும் டிராமா!
அதன் பிறகு ரத்னவேல் வீட்டுக்கு வர வேதநாயகி "தம்பி என்னப்பா ஆச்சு? இந்த வள்ளி ஏன் இப்படி பண்ணா?" என்று கேள்வி கேட்க ரத்னவேல் அமைதியாக நிற்கிறார். பிறகு பதவி என்னாச்சு என்று கேட்க ரத்னவேல் பதவி வேண்டாம் என்று சொல்லி விட்டதாக ஷாக் கொடுக்கிறார்.
பதவியை தூக்கி எறிந்த ரத்னவேல்!
ஃபிளாஷ்கட்டில் முதல்வர் மீடியாவை கூட்டி உன் பொண்ணை அந்த பையன் கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு, நீயும் மன்னிப்பு கேளு என்று சொல்ல "பதவியை விட தன்மானம் தான் முக்கியம்'' என்று சொல்லி பதவி வேண்டாம் எனச் சொல்லி விட்டு வந்தது தெரிய வருகிறது.
வள்ளியை திட்டிய வேலன்!
அடுத்து வள்ளி வீட்டிற்கு வர எல்லோரும் ரவுண்ட் கட்டி திட்டுகின்றனர். வேதநாயகி வள்ளியை திட்டி ரத்னவேலை ஏற்றி விட முயற்சி செய்ய இடையில் புகுந்த வேலன் வள்ளியை ''நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல... ஐயாவோட பொண்ணா இருக்கவே சும்மா இருக்கேன்'' என்று திட்டி விட அவள் கண்ணீருடன் மேலே செல்கிறாள்.
அடுத்து என்ன?
அடுத்து நடக்க போவது என்ன? வேலன் வள்ளியை திட்டியதற்கான காரணம் என்ன? ரத்னவேல் தன்மானம் காப்பாற்றப்படுமா?