'வள்ளியின் வேலன்' இன்று : வள்ளியை மகள் என சொன்ன ரத்னவேல்... வேலன் கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்!
வேலன் கொடுத்த ஆதாரம்!
ரத்னவேல் வீட்டின் முன்பு மீடியாக்கள் கூடியிருக்க அவர் நீங்க கேட்கிற எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்கிறேன் என சொல்லி வேலனிடம் ''வேலா அதை கொடு'' என்கிறார். பிறகு வேலன் வீடியோ ஒன்றை போட்டு காட்ட அதில் சரத் ரத்னவேலை பற்றி தப்பாக பேசி வள்ளியிடம் வம்பு இழுக்க அதன் பிறகு வள்ளி கோபப்பட்டு அடித்தது தெரிய வருகிறது.
ரத்னவேல் சொன்ன வார்த்தை!
இதைத் தொடர்ந்து வள்ளியின் மீது எந்த தவறும் இல்லை என தெரியவர ரத்னவேல் ''பார்த்தீங்களா... என் பொண்ணு மேல எந்த தப்பும் கிடையாது. எல்லா தப்பும் இந்த பையன் மேலதான்'' என்கிறார். முதல்முறையாக ரத்னவேல் தன்னை மகள் என சொன்னதை நினைத்து வள்ளி பூரிப்படைகிறாள். ''இது போன்று பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுபவர்கள், ராகிங் செய்பவர்கள் யாரையும் இந்த அரசாங்கம் சும்மா விடாது... அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்'' என்று சொல்கிறார் ரத்னவேல். ''பெண்களுக்காக முதல்வர் நிறைய திட்டங்களை கொண்டு வந்திருக்காரு. அது மக்களாகிய உங்களுக்கே தெரியும்'' என்கிறார். பிறகு வள்ளி கண்ணீருடன் நிற்க ரத்னவேல் கர்சீப்பை எடுத்துக் கொடுத்துவிட்டு நகர்ந்து செல்கிறார்.
உச்சகட்ட கோபத்தில் வேதநாயகி!
ரஞ்சித் நடந்ததை பார்த்து அப்செட்டில் இருக்க வேதநாயகி உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாள். ''இப்போ ரத்னவேல் மேல பெண்களுக்கு ஒரு பெரிய மரியாதையே வந்திருக்கும். சமுதாயத்துல அவனுக்கு பலம் அதிகமாகி இருக்கும்'' என்று கோபப்படுகிறாள். ''எல்லாத்தையும் பண்ணிட்டு அவனை எதுக்கு இந்த ஊருக்குள்ளவே வச்சிருந்த'' என ரஞ்சித்தை பிடித்து திட்டுகிறாள். ரஞ்சித் ''வேலன் இப்படி பண்ணுவானு தெரியாது... என் ப்ளான் மொத்தத்தையும் கெடுத்து விட்டுட்டான்'' என்று கோபப்படுகிறான்.
ஆனந்தக் கண்ணீரில் வள்ளி!
வள்ளி ரூமுக்குள் உட்கார்ந்து அப்பா தன்னை இரண்டு முறை என் மகள் என சொன்னதை நினைத்து ஆனந்த கண்ணீர் விட வேலன் அங்கு வந்து சமாதானம் பேச முயற்சி செய்ய வள்ளி அவனிடம் கோபப்படுகிறாள். ''நீ என்னை திட்டுனதுனால என் மனசு எவ்வளவு காயப்பட்டுச்சு தெரியுமா? நான் மன்னிக்கிற மாதிரி ஏதாவது பண்ணு'' என சொல்ல வேலன் அங்கிருந்து கிளம்பி வருகிறான்.
வேலன் கொடுத்த சர்ப்ரைஸ்!
அடுத்த நாள் காலையில் வள்ளி தூங்கி எழுந்து வெளியே வர 'ரத்னவேல் அய்யாவின் மகள் சிங்க பெண்ணே' என்ற பெயரில் வள்ளிக்கு பெரிய பேனர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து வள்ளி சந்தோஷப்படுகிறாள். ரத்னவேலும் இதை பார்த்து ''வேலா என்னடா இது யாருடைய வேலை'' என கேட்க ''நம்ம தொண்டர்கள் வேலைதாங்கய்யா'' என சமாளிக்கிறான். அதன் பிறகு வள்ளி சந்தோஷத்துடன் வந்து அந்த பேனருடன் போட்டோ எடுத்துக் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.