'வள்ளியின் வேலன்' இன்று : வேலன் கொடுத்த ஐடியா... வள்ளியின் ஆசையை நிறைவேற்றிய ரத்னவேல்!
வேலனுக்கு மோதிரம் போட்ட ரேணுகா!
பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த வேலனை தனியாக அழைத்துச் சென்ற ரேணுகா அவனுக்கு மோதிரம் போட்டுவிட வேலன் ''நான் தானே உங்களுக்கு கிஃப்ட் தரணும்... நீங்க எதுக்கு கொடுக்குறீங்க'' என்று கேள்வி கேட்க ரேணுகா அது அப்படித்தான் என சமாளிக்கிறாள்.
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வள்ளி!
அம்மு பெரியப்பா கல்யாணத்துக்காக எல்லாருக்கும் புது துணி எடுத்து இருப்பதாக சொல்ல வள்ளி தனக்கும் அப்பா துணி எடுத்திருப்பார் என்று ஆசையுடன் காத்திருக்கிறாள். பிறகு எல்லாரையும் கூப்பிட்ட ரத்னவேல் அவரவர்களுக்கு எடுத்த துணிகளை எடுத்துக் கொடுக்கிறார்.
எதிர்பார்த்து ஏமாந்த வள்ளி :
வீட்டில் உள்ள எல்லோருக்கும் துணிகளை எடுத்துக் கொடுத்த பிறகு வேலனுக்கும் அவனது குடும்பத்திற்கும் எடுத்த துணிகளை ரத்னவேல் கொடுக்க கடைசியாக ஒரே ஒரு பேக் மட்டும் இருப்பதை பார்த்து வள்ளி தனக்கான துணி தான் என எதிர்பார்த்து காத்திருக்க அதை எடுத்து வேலைக்காரிக்கு கொடுத்து வள்ளியை நோகடிக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.
வேலனை கோர்த்து விட்ட மாமா!
வேலன் ரத்னவேல் ஐயா கொடுத்ததாக எல்லோருக்கும் துணி எடுத்து வந்து கொடுக்க வேணியின் புருஷன் வேணிக்கு கொடுத்த புடவையை எடுத்து ரேணுகாவிடம் கொடுத்து வேலன் உனக்காக வாங்கிட்டு வந்ததாக பொய் சொல்கிறான்.
வேலன் கொடுத்த ஐடியா!
ரத்னவேல் கொடுத்த ஏமாற்றத்தால் வள்ளி வருத்தத்தோடு அமர்ந்திருக்க வேலன் ''உங்களுக்கு உங்க அப்பா துணி எடுத்து கொடுக்கணுமா... நான் சொல்ற மாதிரி பண்ணுங்க'' என ஐடியா கொடுக்கிறான். அதற்கேற்றார் போல வள்ளி கல்யாணத்திற்கு பழைய உடையில் பரிதாபமாக வந்திருக்க எல்லோரும் அவளைப் பார்த்து மினிஸ்டர் பொண்ணா இப்படி இருக்க என கேள்வி எழுப்புகின்றனர்.
வள்ளியின் வழிக்கு வந்த ரத்னவேல்!
இதனால் அவமானப்படும் ரத்னவேல் அங்கிருந்து கிளம்பிச் செல்ல ஒரு கடையில் வண்டியை நிறுத்தி வேலனிடம் வள்ளிக்கு புது துணி எடுக்க சொல்லி கை காட்டுகிறார். இதையடுத்து வேலன் கடைக்கு சென்று வள்ளிக்காக துணி எடுத்து வருகிறான். இந்த நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.