'வள்ளியின் வேலன்' இன்று : ரத்னவேலின் பதில் கடிதம்... எமோஷனல் ஆன வள்ளி!
லெட்டருடன் கிளம்பிய வேலன் :
வீட்டுக்கு வந்த வேலன் வள்ளி ரூமில் இருந்து எல்லா லெட்டர்களையும் எடுத்துக்கொண்டு கிளம்ப இதை பார்த்து வள்ளி ஷாக் ஆகிறாள். அப்பா தனக்காக எழுதியதை எப்படி எடுப்பது என புரியாமல் நிற்கிறாள். அதன் பிறகு வேலனுக்கு போன் செய்து லெட்டர் எல்லாம் எங்கே கொடுத்த என்று விசாரிக்க காந்தி நகரில் என்று சொன்னதும் வள்ளி கிளம்பி வருகிறாள்.
காத்திருந்த ஏமாற்றம்!
வள்ளி காந்திநகர் போஸ்ட் ஆபீஸ் வந்து ''அமைச்சருக்கு வந்த லெட்டர் எல்லாம் வேண்டும்'' என்று கேட்க போஸ்ட் ஆபீஸில் இருக்கும் ஆபிஸர் ''யாருமா நீ? அப்படி எல்லாம் கொடுக்க முடியாது'' என்று சொல்ல வள்ளி ''நான் அமைச்சரோட பொண்ணு'' என்ற உண்மையை உடைக்க ஆஃபீஸர் ''எல்லாத்தையும் இப்பதான் போஸ்ட் மேன் எடுத்துக்கிட்டு போனாரு'' என்று சொன்னதும் ஏமாற்றம் அடைகிறாள் வள்ளி.
போஸ்ட் மேனை மடக்கிய வள்ளி!
அடுத்து வள்ளி வேகவேகமாக ஆட்டோவில் வந்து போஸ்ட் மேனை வழி மறிக்கிறாள். அவரிடம் ''அமைச்சர் வீட்டில் இருந்து வந்த லெட்டர் எல்லாம் கொடுங்க எனக்கு வர வேண்டிய லெட்டர்ல அட்ரஸ் மாறி இருக்கு'' என்று கேட்கிறாள். போஸ்ட்மேன் லெட்டர்களை கொடுக்க வள்ளி தனக்கான லெட்டரை தேடி எடுக்கிறாள்.
லெட்டரை படித்து உருகிய வள்ளி!
அந்த லெட்டரில் ரத்னவேல் ''உனக்கு யாரும் இல்லன்னு சொல்லி கவலைப்படாதே நான் இருக்கேன்'' என்று உருக்கமாக எழுதியிருக்க வள்ளி ரத்தினவேலே தன் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவது போல நினைத்து ஆனந்தம் கொள்கிறாள்.
வேலனிடம் சிக்கிய வள்ளி!
பிறகு வள்ளி வீட்டுக்கு கிளம்ப ஆட்டோ ரிப்பேர் ஆகி வழியில் நிற்க அந்த வழியாக அமைச்சரின் கார் வர ''ஐயோ அப்பாவோட கார்'' என வள்ளி பதறுகிறாள். காரில் வேலன் மட்டும் இருக்க வள்ளியை பார்த்த அவன் ''மேடம் இங்க என்ன பண்றீங்க'' என்று கேட்கிறான். ''இங்க லெட்டர் சாமியார்னு ஒருத்தர் இருக்காரு அவர பார்த்தா அரியர் எல்லாம் கிளியர் ஆகிடும்னு சொன்னாங்க... அதுதான் பார்க்க வந்தேன்'' எனப் பொய் சொல்கிறாள். வேலன் ''போலி சாமியாரை எல்லாம் நம்பி வராதீங்க'' என அட்வைஸ் கொடுத்து அவளை அழைத்துச் சொல்கிறான்.
வள்ளி மற்றும் வேலன் என இருவரும் ஜோடியாக வீட்டுக்கு வருவதைப் பார்த்து ரஞ்சித் கடுப்பாக வேதநாயகி ''அவ காலேஜ் போகாமல் இருக்கிறதுதான் எனக்கு சந்தோஷம்'' எனச் சொல்கிறாள். பூஜை செய்யும் போது வள்ளி காலேஜ் போலயா என அவளை சீண்டுகிறாள்.