'வள்ளியின் வேலன்' இன்று : கோபமான ரத்னவேல்.. கொஞ்ச நேரம் கூட நீடிக்காத வள்ளியின் சந்தோஷம்!
வள்ளிக்கு துணி வாங்கிய ரத்னவேல்!
வள்ளியால் கோயிலில் இருந்து ரத்னவேல் கோபமாக கிளம்பி செல்ல கார் ஒரு துணிக்கடையின் முன்பு ஆஃப் ஆகிவிடுகிறது. இதைத்தொடர்ந்து ரத்னவேல் ஒரு பிங்க் கலர் தாவணியை பார்த்து அதை வாங்கி வரும்படி வேலனிடம் சொல்கிறார்.
கோர்த்து விட்ட வேலன்!
கார் வீட்டுக்குள் வந்து நின்றதும் வேலன் துணியை அப்படியே ரத்னவேல் பக்கத்தில் வைத்துவிட்டு வேலைக்காரர்களை வேலை வாங்குவது போல நைசாக நழுவிக்கொள்ள ரத்னவேல் அந்த துணியை எடுத்துக் கொண்டு உள்ளே வருகிறார்.
சந்தோஷத்தில் வள்ளி!
ரத்னவேல் ''இந்தா புடி'' என வள்ளியின் முகத்தை பார்க்காமல் பையை நீட்ட வள்ளி அதை சந்தோஷத்துடன் வாங்கிக் கொள்கிறாள். பிறகு அப்பா எடுத்து கொடுத்த துணியை போட்டுக் கொண்டு வீட்டில் எல்லோரிடமும் காட்டி சந்தோஷப்படுகிறாள். வேலனுக்கு நன்றி சொன்ன வள்ளி ''எல்லோருக்கும் நான்தான் ஜூஸ் கொடுப்பேன்'' என்று சொல்லி எல்லோருக்கும் ஜூஸ் கொடுத்து கொண்டே ''என் அப்பா எடுத்துக் கொடுத்த டிரெஸ்'' என சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டு வருகிறாள்.
நீடிக்காத வள்ளியின் சந்தோஷம்!
அப்போது ஒரு தம்பதியினர் '' நல்ல வரன் கிடைக்கவில்லை... இந்த கல்யாணத்துலயாவது நல்ல வரன் கிடைக்கணும்'' என பேசிக்கொண்டு இருக்க வள்ளி தன்னை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்து வேலனிடம் வந்து ''அழகா இருந்தாலே இதுதான் பிரச்சனை'' என சொல்ல அங்கு வந்த அந்த தம்பதியினர் வள்ளியைத் தாண்டி வந்து வேலனை மாப்பிள்ளை கேட்க வள்ளி ''அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு... மூணு பிள்ளைங்க இருக்கு'' என பொய் சொல்லி அவர்களை ஓட விடுகிறாள்.
வேலன் வள்ளியை கலாய்க்க வள்ளி அவன் மீது தண்ணீரை எடுத்து ஊற்றப்போக அது ரத்னவேல் மற்றும் கல்யாண மாப்பிள்ளை மீது பட்டு விடுகிறது. இதனால் கோபமாகும் ரத்தினவேல் கல்யாணம் முடியும் வரை வள்ளி ரூமை விட்டு வெளியே வரக்கூடாது என கண்டிஷன் போடுகிறார்.
இதனை வேலன் எப்படி சரி செய்யப் போகிறான்? வள்ளி என்ன செய்யப் போகிறாள்?