'வள்ளியின் வேலன்' இன்று : அவமானப்படுத்திய வேதநாயகி... வேலன் கொடுத்த ட்விஸ்ட்!
குடும்பத்துடன் வந்த வேலன்!
ரஞ்சனியின் கல்யாணத்துக்கு வேலன் தன்னுடைய குடும்பத்தினருடன் வர இதைப் பார்த்த வேதநாயகி செக்யூரிட்டியிடம் ''அவங்க யாரையும் உள்ள விடக்கூடாது'' என்கிறாள். இதனால் வேலனின் குடும்பத்தினரை உள்ளே அனுமதிக்காமல் இருக்க இதைப் பார்த்த வள்ளி ஓடி வருகிறாள்.
வள்ளியால் ஷாக்கான வேதநாயகி!
செக்யூரிட்டியிடம் ''வேலன் யார் தெரியுமா... என் அப்பாவுக்கு எல்லாமே வேலன்தான்'' என்று சொல்லி உள்ளே அழைத்து வருகிறாள். வேலனின் அம்மா வள்ளிக்கு பூ வைத்து விட இதை பார்த்த வேதநாயகி இவங்க எப்படி உள்ள வந்தாங்க என கடுப்பாகிறாள். பிறகு ரத்னவேல் வேலன் குடும்பத்தாரை வரவேற்று நலம் விசாரிக்கிறார்.
அவமானப்படுத்திய வேதநாயகி!
வேலன் தன்னுடைய குடும்பத்தாரை ஒரு ரூமில் தங்க வைக்க வேதநாயகி திட்டமிட்டு வேலனின் தங்கச்சி ஆனந்தியை திட்டி அவமானப்படுத்த அவன் இங்கிருந்து போய்விடலாம் என்று சொல்ல ரேணுகாவும் கிளம்பலாம் எனச் சொல்கிறாள்.
வம்பிழுத்து வாங்கி கட்டிய ரஞ்சித்!
ரஞ்சித் சரக்கு அடித்துக் கொண்டே வேலனிடம் சரக்கு கொண்டு வரச் சொல்கிறான். ''பத்திரமா கொண்டு வா... அது காஸ்ட்லி சரக்கு'' எனச் சொல்லி அனுப்ப வேலன் சரக்கை கொண்டு வந்து பாட்டிலை கீழே போட்டு உடைத்து ரஞ்சித்தின் கையைப் பிடித்து முறித்து அலற விடுகிறான்.
ரஞ்சனிக்கு வந்த அதிர்ச்சி!
மர்ம நபர் ஒருவர் மண்டபத்துக்குள் நுழைந்து சில போட்டோக்களை குழந்தை ஒன்றிடம் கொடுத்துவிட்டு கிளம்ப அந்த போட்டோக்கள் வள்ளியிடம் கிடைக்க அதில் ரஞ்சனி வேறொருவருடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.
சாகத் துணிந்த ரஞ்சனி!
வள்ளி ரஞ்சனி ரூமுக்குள் நுழைய அவள் தற்கொலை முயற்சி செய்ய அதனை தடுத்து நிறுத்துகிறாள். பிறகு ரஞ்சனி யார் அந்த மர்ம நபர் என்ற உண்மையை உடைக்க வள்ளி அதிர்ச்சி அடைகிறாள். ரஜினியின் மானத்தை வள்ளி காப்பாற்ற போவது எப்படி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.