'வள்ளியின் வேலன்' இன்று : வேலனுக்கு வந்த ஆபத்து... ஆட்களைக் கூட்டி அவமானப்பட்ட வேதநாயகி!
உண்மையை உடைத்த வள்ளி!
தற்கொலைக்கு முயன்ற ரஞ்சனியை காப்பாற்றிய வள்ளி வேலனுக்கு போன் போட்டு தனது ரூமுக்கு வர சொல்ல, வேலன் கல்யாண வேலை இருப்பதாக சொல்ல ''நீ இப்ப வரலைன்னா இந்த கல்யாணமே நின்னு போயிடும்'' என்று சொன்னதும் வேலன் கிளம்பி வருகிறான்.
வள்ளி அவனிடம் ரஞ்சனி குறித்த பிரச்சனையை அனைத்தையும் சொல்ல அதைக் கேட்டு வேலனும் அதிர்ச்சி அடைகிறான். ரஞ்சனியை மிரட்டும் பிரேம் வீட்டிற்குச் சென்று ஆதாரங்களை அழிக்க வள்ளியும் வேலனும் திட்டமிடுகின்றனர்.
ஆதாரத்தை அழிக்க கிளம்பிய வள்ளி, வேலன்!
ஆதாரத்தை அழிப்பதற்காக வள்ளி மற்றும் வேலன் என இருவரும் கிளம்பி பிரேம் வீட்டிற்கு வருகின்றனர். அவன் இல்லாத நேரமாக பார்த்து வீட்டிற்குள் நுழைய வள்ளி மெயின் கேட் ஏறி குதிக்க போக வேலன் ''திறந்த கதவுக்கு எதுக்கு மேலே ஏறணும்'' என கலாய்த்து விட்டு உள்ளே செல்கிறான்.
அதைத்தொடர்ந்து வள்ளி பூட்டை உடைக்க ஹேர் பின், கல் எடுத்துக் கொடுக்க வேலன் சாவியை கண்டுபிடித்து வீட்டிற்குள் நுழைகிறான். இருவரும் சேர்ந்து ஆதாரங்களை அழிக்க தொடங்குகின்றனர்.
கூட்டத்தை கூட்டிய வேதநாயகி!
வள்ளி மற்றும் வேலன் என இருவரும் இல்லாததை அறிந்த வேதநாயகி இதை வைத்து பிரச்சனையை உண்டாக்க அனைவரையும் கூட்டுகிறாள். வள்ளி மற்றும் வேலனுக்கு போன் போட இரண்டு பேருடைய மொபைலும் நாட் ரீச்சபிள் என வருகிறது.
பிரேமுடன் மோதும் வேலன்!
பிறகு ஆதாரங்களை அழித்து வள்ளியும் வேலனும் அங்கிருந்து கிளம்ப வள்ளி ''அவன் போன்ல ஆதாரங்களை வெச்சிருந்தா என்ன பண்றது'' எனல் கேட்க வேலன் வள்ளியை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் பிரேம் வீட்டிற்குள் நுழைகிறான். வெளியே போன பிரேமும் திடீரென வீட்டிற்கு வந்து விட இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது
அசிங்கப்பட்ட வேதநாயகி!
யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்த வள்ளி நைசாக மேலே இருந்து கீழே இறங்கி வர வேதநாயகி ''எங்கே போயிட்டு வர'' என்று கேட்க ''ரூம்ல தான் இருந்தேன்... நீங்கதான் கல்யாணம் முடியும் வரைக்கும் ரூமை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு சொல்லிட்டீங்களே அத்தை'' என்று சொல்ல வேதநாயகி பல்பு வாங்கி அவமானப்பட்டு நிற்கிறாள்.
வேலனுக்கு விழுந்த அடி!
இறுதியாக வேலன் மற்றும் பிரேம் இடையே மோதல் உருவாக ஒரு கட்டத்தில் பிரேம் பீர் பாட்டிலால் வேலனின் தலையில் தாக்குகிறான். அடுத்து நடக்கப்போவது என்ன? வேலனுக்கு என்ன ஆனது?!