'வள்ளியின் வேலன்' இன்று : வேலனின் அதிரடி என்ட்ரி, மன்னிப்பு கேட்க சொன்ன ரத்னவேல்!
பிரேம் வேலன் இடையே மோதல்!
வேலன் போனை எடுப்பதற்காக மீண்டும் பிரேம் வீட்டிற்குள் நுழைய வெளியே சென்ற பிரேம் மீண்டும் வந்து விட அவனுக்கும் வேலனுக்கும் மோதல் உருவாகிறது. இந்த மோதலில் எதிர்பாராத விதமாக பிரேம் வேலனை கட்டையால் தாக்க வேலன் சரிந்து கீழே விழுகிறான்.
டென்ஷனில் வள்ளி!
இன்னொரு பக்கம் மண்டபத்தில் வள்ளி வேலனை காணாததால் டென்ஷனாக இருக்கிறாள். ரஞ்சனி என்னாச்சு என்று கேட்க வள்ளி எல்லா ஆதாரத்தையும் எடுத்தாச்சு போன் மட்டும் எடுக்கணும்... அதுக்கு தான் வேலன் போயிருக்கான் நீ கவலைப்படாத என்று சொல்கிறாள்.
மணமேடையில் மணமக்கள்!
அடுத்த நாள் காலையில் மணமக்களை மணமேடையில் ஏற்ற கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க மாப்பிள்ளை வீட்டார் வரவேண்டிய வரதட்சணை எதுவும் வரவில்லை என பிரச்சனை செய்கின்றனர். ரத்னவேல் எல்லாமே ரெடியா இருக்கு வேலன் வந்துடுவான் என்று சொல்லிக் கொண்டிருக்க மாப்பிள்ளை வீட்டார் அதை ஏற்க மறுக்கின்றனர். மாப்பிள்ளையின் தாய் மாமா தாலி கட்ட வேண்டாம் என சொல்லி கல்யாணத்தை நிறுத்துகிறார்.
வேலனின் அப்பாவை அறைந்த ரஞ்சித்!
வேலன் பணத்தை எடுத்துக்கிட்டு ஓடிவிட்டதாக எல்லோரும் பேசத் தொடங்க ரஞ்சித் வேலனின் அப்பாவிடம் வேலன் குறித்து விசாரித்து அவரை அறைய ரத்னவேல் கோபமாகி ரஞ்சித்தை அறைகிறார். ''வேலன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு, அவன் குடும்பத்த அவமானப்படுத்துவது என்னையே அவமானப் படுத்துற மாதிரி'' என கோபப்படுகிறார்.
வேலன் என்ட்ரி!
இந்த சமயத்தில் வேலன் மண்டபத்துக்குள் என்ட்ரி கொடுத்து ஒரு சின்ன ஆக்சிடென்ட், மயங்கிட்டேன் அதனால தான் வர லேட் ஆகிடுச்சு என்று சொல்லி பணத்தையும் டாக்குமென்ட்டையும் கொடுக்கிறான்.
மன்னிப்பு கேட்க சொன்ன ரத்னவேல்!
ரத்னவேல் ரஞ்சித்தை வேலனிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேலன் எதுக்குங்க ஐயா என்று கேட்க ரேணுகா நடந்ததை சொல்ல அப்பாவை அறைந்த விஷயம் அறிந்து வேலன் ரஞ்சித்தின் சட்டையை பிடிக்கிறான்.