வள்ளியின் வேலன்
வள்ளியின் வேலன்

'வள்ளியின் வேலன்' இன்று : கலங்கி நின்ற வள்ளி... உண்மை சொன்ன வேலன்... ரத்னவேல் பாண்டியனின் முடிவு?

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'வள்ளியின் வேலன்' தொடரின் இன்றைய (10-09-2024) எபிசோட் ஹைலைட்ஸ்!
Published on
Summary

வள்ளியின் அன்பை ரத்னவேல் புரிந்துகொள்வாரா, ஓடிப்போன மனைவியைத் தேடிப்போவாரா, மகளை மனம் மாறி ஏற்றுக்கொள்வாரா, வள்ளியும் - வேலனும் ஒன்றிணைவார்களா என்பதுதான் 'வள்ளியின் வேலன்' சீரியலின் முழுக்கதை. இந்த சீரியலை யாத்ரா மீடியா எனும் நிறுவனம் ஜீ தமிழுக்காக தயாரித்து வழங்குகிறது!

ரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட வள்ளி!

ரத்னவேல் பாண்டியன் வள்ளியை எல்லோரின் முன்பாகவும் அடிக்க, கலங்கிப்போன வள்ளி ரூமில் கண் கலங்கிய படி இருக்கிறாள். வள்ளியின் சித்தப்பா மற்றும் சித்தி என இருவரும் வந்து அவளை சமாதானம் செய்கின்றனர். வள்ளி ''அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்... அவர் என்னை அடிச்சது கூட எனக்கு கஷ்டமா தெரியல... ஆனா நடந்தது என்னன்னு ஒரு வார்த்தை கூட கேட்கல'' என்று வருந்துகிறாள்‌.

அதன் பிறகு நான் ரஞ்சனி கிட்ட பேசட்டுமா என்று கேட்டு சோஃபாவில் உட்கார்ந்து இருக்கும் ரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்க ரஞ்சனி ''உனக்கு என்னை பிடிக்கவே பிடிக்காது... அதனாலதான் நேரம் பார்த்து பழி வாங்கிட்ட'' என்று சத்தம் போடுகிறாள்.

வள்ளியின் வேலன்
வள்ளியின் வேலன்

வள்ளியைப் பழிவாங்கும் வேதநாயகி!

வள்ளி ''நான் என்ன பொண்ணு பாக்க வராதா நினைச்சுதான் இப்படி பண்ணேன்'' என்று விளக்கம் கொடுக்க வேதநாயகி அங்கு வந்து வள்ளியை திட்டுகிறாள். இந்த நேரத்தில் ரத்னவேல் பாண்டியன் வர உடனே வள்ளி தன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னதாக சொல்லி நாடகம் போடுகிறாள்.

''இனிமே நாங்க இந்த வீட்டில இருக்க மாட்டோம்... நாங்க இப்பவே கிளம்பறோம்'' என்று சொல்லி ரஞ்சனியை கூப்பிட ரத்னவேல் பாண்டியன் வீட்ட விட்டு போக வேண்டியது நீங்க கிடையாது என வள்ளியை வெளியே போகச் சொல்லி இழுத்து வந்து வெளியே துரத்த வேதநாயகி சந்தோஷம் அடைய மற்ற குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

கொட்டும் மழையில் கண்ணீருடன் வள்ளி!

வள்ளி கொட்டும் மழையில் கண்ணீருடன் நின்று கொண்டிருக்க அவளது சித்தப்பா சித்தி ரத்னவேல் பாண்டியனிடம் வள்ளி தெரியாம பண்ணிட்டா உள்ள கூப்பிடுங்க என்று சொல்லி பேச, ரத்னவேல் பாண்டியன் ''அவ தெரியாம பண்ணாளா'' என்று கோபப்படுகிறார். வேதநாயகி ''வள்ளியும் என் பொண்ணு மாதிரி தான்பா... அவ ஏதோ தெரியாம இப்படி பேசிட்டா மன்னிச்சிடு'' என்று சொல்ல ரத்தினவேல் ''நீ வேணும்னா அவளை மன்னிக்கலாம். ஆனா, என்னால மன்னிக்க முடியாதுக்கா... அவ செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்கட்டும்'' எனக் கண்டிப்புடன் சொல்கிறார்.

வள்ளியின் வேலன்
வள்ளியின் வேலன்

அதிரடி என்ட்ரி கொடுத்த வேலன்!

வள்ளியின் சித்தி மகள் அம்மு வேலனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல வேலன் குடையை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து கிளம்பி பைக்கில் வேகமாக வருகிறான். மழையில் நின்றுகொண்டிருக்கும் வள்ளியின் மீது திடீரென மழைத்துளி தெறிக்காமல் இருக்க, வள்ளி மேலே பார்க்க குடை பிடித்து காவலனாக நிற்கிறான் வேலன். இதைப் பார்த்து வள்ளியின் குடும்பத்தினர் எல்லோரும் வெளியே வருகின்றனர்.

ரத்னவேல் பாண்டியன் ''டேய் வேலா நீ எதுக்குடா மழையில் நிற்கிற? அவ தப்பு பண்ணா அவ நிக்கட்டும் நீ உள்ள வா'' என்று சொல்ல ''மேடம் தப்பு பண்ணலங்கய்யா.... நான்தான் தப்பு பண்ணிட்டேன்'' என்று வேலன் உண்மையைச் சொல்கிறான். ''மேடமை உள்ள கூப்பிடுங்க'' என்று வேலன் கோரிக்கை வைக்க ''என் வேலன் பொய் சொல்ல மாட்டான்'' என்று வள்ளியை உள்ளே கூப்பிடுகிறார் ரத்னவேல் பாண்டியன். அதே நேரத்தில் ''நான் வேலனைத்தான் மன்னிச்சேன்'' எனவும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

வள்ளியின் வேலன்
வள்ளியின் வேலன்

வேலனுக்கு ரூட்டு விடும் ரேணுகா!

இன்னொரு பக்கம் ரேணுகா மழையை ரசித்தபடி ஆட்டம் போட்டுக் கொண்டு ''எனக்கு மழையைப் பார்த்தாலே அவன் ஞாபகம் தான் வருது'' எனச் சொல்ல ஃப்ளாஷ் கட் ஓப்பனாக வீடு தேடி வந்த வேலனை பார்த்து ரேணுகா வச்ச கண் வாங்காமல் பார்த்து பிறகு அவனது குடைக்குள் ஓடி வந்து நிற்க வேலன் சங்கடப்பட்டு நிற்கிறான்.

''வீடு வாடகைக்கு இருக்குன்னு சொன்னாங்க.... அதான் பாத்துட்டு போக வந்தேன்'' எனச் சொல்லும் வேலன் ''ஆனா, இந்த வீட்டு ஓனர் அம்மா பொண்ணு ஒரு லூசு. ஓனர் அம்மா செம டார்ச்சன்னு சொன்னாங்க'' என்று சொல்ல ரேணுகா ''அந்த லூசு நான் தான்'' என வேலனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள்.

ஃப்ளாஷ்பேக்குடன் முடிந்திருக்கிறது இன்றைய எபிசோட்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com