'வள்ளியின் வேலன்' இன்று : திகிலூட்டும் புது வில்லன்... வேலன் செய்த பரிகாரம்!
வருத்தத்தில் வள்ளி!
வள்ளி 'அப்பா ரத்னவேலை பக்கத்திலிருந்து பாத்துக்க முடியவில்லையே' என்ற கவலையில் இருக்க ரூமுக்குள் வந்த அம்மு ''நைட்டு பெரியப்பா ரொம்ப திட்டிட்டாரா... நான் சொல்லித்தானே அவர் ரூமுக்குள்ள போன'' என்று மன்னிப்பு கேட்கிறாள்.
வீட்டுக்கு வந்த டாக்டர்!
அடுத்ததாக டாக்டர் வீட்டுக்கு வர ரத்னவேல் ''நான் வர சொல்லலையே'' என்று கேட்க வேதநாயகி ''நான் தான் வர சொன்னேன்'' என்கிறாள். டாக்டர் ரத்னவேலை பரிசோதனை செய்து ''ஃபிராக்சர் எதுவும் இல்ல... மேஜர் ஹெல்த் செக்அப் பண்ணிடுறது நல்லது'' என்று சொல்ல வேதநாயகி அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்கிறாள்.
நேத்தி கடன் செய்த வள்ளி, வேலன்!
அடுத்ததாக வள்ளியின் சித்தப்பா மற்றும் சித்தி என இருவரும் ரத்னவேலுக்கு விபத்து நடந்ததால் கோயிலுக்குச் சென்று அவரது பெயரில் அர்ச்சனை செய்ய முடிவெடுக்கின்றனர். வேலன் ''அய்யாவுக்கு உடம்பு சரியில்லைனா டாக்டர்கிட்டத்தானே போகணும்... எதுக்கு கோயிலுக்குப் போகணும்'' என்கிறான்.
வள்ளி கேட்ட கேள்வி!
வேலன் கோயிலில் யாருக்கும் தெரியாமல் ரத்னவேலுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என வேண்டி காவடி எடுக்க, யாரென்று தெரியாமல் அங்கே வந்து பார்க்கிறாள் வள்ளி. ''ஏதோ கோயிலுக்கு எதுக்கு போகணும்னு சொன்ன... இப்ப என்ன ஆச்சு'' என்று கேட்க ''அது வேற இது வேற'' என்று சொல்கிறான். ''ஐயாவுக்காக ஆணிக்கால் செருப்பில் மதுரையை கூட சுத்தி வருவேன்'' என்று சொல்லி வள்ளியை உருக வைக்கிறான் வேலன்.
வள்ளியை அதிர்ச்சி ஆக்கிய என்ட்ரி!
அடுத்ததாக வீட்டில் வேலை செய்யும் தாமரை வீட்டு வாசலில் விளக்கு வைத்துக் கொண்டிருக்க அப்போது காரில் வந்த ஒரு நபர் தாமரையை தகாத வார்த்தையில் பேசி ஆரத்தி கரைத்து எடுத்து வர சொல்கிறான். தாமரை ஆரத்தி எடுக்க, அவன் வீட்டுக்குள் நுழைய, நேராக வள்ளி ரூமுக்குள் சென்று அவளை பின்னாடி இருந்து தொட வள்ளி இவனை பார்த்து ஷாக் ஆகிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன? நியூ என்ட்ரி கொடுத்த நபர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.