வள்ளியின் வேலன்
வள்ளியின் வேலன்

‘வள்ளியின் வேலன்’ இன்று : விபத்தில் சிக்கிய ரத்னவேல்… வேலனால் தப்பிய வள்ளி, வேதநாயகிக்கு ஷாக்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் ‘வள்ளியின் வேலன்’. அதன் இன்றைய(13-09-2024) எபிசோட் ஹைலைட்ஸ்!
Published on

கோர்த்து விட்ட வேதநாயகி!

வள்ளி ஆரத்தி கொண்டு வந்து அப்பா ரத்னவேலுக்கு காட்ட முகத்தை பார்க்காமல் ரத்னவேல் ஆரத்தி எடுத்தவர் பிறகு வள்ளியை பார்த்ததும் அதிர்ச்சியும் கோபமும் அடைகிறார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வேதநாயகி ‘’என் தம்பிக்குத்தான் நீ முன்னாடி வந்தா பிடிக்காதுன்னு தெரியும்ல… அப்புறம் எதுக்கு இப்படி பண்ற’’ என்று சொல்லி வள்ளியை காயப்படுத்துகிறாள். ‘’என் தம்பிக்கு ஏதாவது ஆகணுமா’’ என்று வேதநாயகி வள்ளியிடம் கேட்க, ரத்னவேல் ‘’அவளுக்கு அதானே ஆசை’’ என்று சொல்ல வள்ளி மேலும் வருத்தம் அடைகிறாள். பிறகு வேதநாயகி ‘’தட்டை அப்படி வை’’ என்று சொல்ல, வள்ளி தடுமாறி நிற்க, ரத்னவேல் ‘’அதான் சொல்றாங்கல்ல’’ என்று சத்தம் போட தட்டை தவற விடுகிறாள் வள்ளி. ரத்னவேல் கிளம்பியதும் ‘’என் தம்பி உன் முகத்துல முழிச்சிட்டு போயிருக்கான்… அவனுக்கு என்ன நடக்கப் போகுதோ’’ என்று வள்ளியை காயப்படுத்துகிறாள். 

சமாதானப்படுத்திய அம்மு!

வள்ளி சோகமாக உட்கார்ந்து இருக்க அவளது சித்தப்பா மகள் அம்மு சாப்பாடு கொண்டு வந்து ஆறுதல் சொல்லி சாப்பிட வைக்கிறாள். வேலனின் வீட்டில் அவனது அம்மா சமையலுக்கு அரிசி புடைத்துக் கொண்டிருக்க மூத்த மகள் வேணி ‘’தினமும் வெள்ள சோறு தானே… பிரியாணி ஏதாவது செய்மா’’ என்று சொல்ல ‘’உன் அப்பன் பணத்தை நோட்டு நோட்டா கொண்டு வந்து தராரு… தினமும் கறி சோறு திண்றத்துக்கு’’ என கோபப்பட்டு திட்டுகிறாள். 

வள்ளியின் வேலன்
வள்ளியின் வேலன்

இந்த நேரத்தில் ரத்னவேல் சென்ற கார் மதுரை பைபாஸில் விபத்துக்குள்ளானதாக செய்தி வெளியாக அதைப் பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. வேலனின் அம்மா அழுது மயக்கம் போட்டு விழுகிறாள். 

வள்ளி மீது வந்த பழி!

இங்கே அம்மு டிவியில் செய்தியை பார்த்துவிட்டு எல்லோரையும் கூப்பிட்டு அழ செய்தியை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். வேதநாயகி ‘’இப்போ உனக்கு சந்தோஷமா’’ என்று வள்ளியை பார்த்து கோபப்படுகிறாள். ‘’என் தம்பி வந்தா உன்னை கழுத்தை பிடிச்சு வெளியே செல்லாமல் விடமாட்டான்’’ என்று கத்துகிறாள். 

அதன் பிறகு ரத்னவேல், வேலன் ஆகியோர் வீட்டிற்கு வருகின்றனர். வேதநாயகி ரத்னவேலிடம் உனக்கு ஒன்னும் இல்லையே என்று டிராமா போட்டுவிட்டு வள்ளியை திட்ட அவர் ‘’ரோட்ல எவனோ தப்பு பண்ணதுக்கு அவ என்னக்கா பண்ணுவா’’ என்று பேச வள்ளி அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைகிறாள். ‘எப்பயும் திட்ற அப்பா ஏன் இந்த முறை திட்டல’ என குழப்பம் அடைகிறாள். பிறகு வள்ளி வேலனிடம் ‘’உனக்கு எதுவும் ஆகலையே’’ என்று கேட்க அவன் எதுவும் ஆகல என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பி வருகிறான். 

பதறிப்போன வேலன் குடும்பம்!

பிறகு வேலன் வீட்டுக்கு வர அவனைப் பார்த்ததும் மொத்த குடும்பமும் கண்கலங்க வேலன் ‘’எனக்கு ஒன்னும் ஆகல சின்ன காயம் தான்’’ என்று சொல்கிறான். பிறகு அவனது அம்மா வேலனுக்கு திருஷ்டி சுத்தி போடுகிறாள். ரேணுகா ‘’உங்களுக்கு ஒன்றும் ஆகலையே’’ என்று பதற ‘’சத்தியமா எனக்கு எதுவும் ஆகல’’ என்று சொல்கிறான். பிறகு வீட்டுக்கு போன ரேணுகா வேலனுக்காக காசு முடிந்து வைக்கிறாள். 

வேலனுக்கு அவனது அம்மா மஞ்ச பத்து போட்டு விடுகிறாள். ரேணுகா மருந்து கொண்டு வர வேலன் ‘’எதுவும் வேண்டாம் தூங்கி எழுந்தா சரியா போயிடும்’’ என எல்லோரையும் வெளியே அனுப்பி வைக்கிறான். 

வள்ளியின் வேலன்
வள்ளியின் வேலன்

ரேணுகாவை பார்த்து வேணி சொன்ன வார்த்தை!

ரேணுகா காசு முடிந்து வைத்திருப்பதை பார்த்த வேணி ‘’தம்பிக்கு ஏத்த பொண்ணு இவ தான்’’ என்று பெருமையாக சொல்வதோடு ‘’இவ மட்டும் நம்ம வீட்டு மருமகளா வந்தா பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும்’’ என்று சொல்கிறாள். இதை கேட்டதும் வேலனின் அப்பா ‘’என் பையனுக்கு பெரிய வீட்டு மகாராணிதான் வருவா’’ என்று சொல்கிறார்.  ‌ 

உண்மையை அறிந்த வள்ளி!

அடுத்த நாள் காலையில் வள்ளி தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருக்க டிரைவர் தன்னுடைய குடும்பத்தோடு வந்து ‘’ஆக்சிடென்ட்ல இருந்து தப்பிக்க நீங்க தான்மா காரணம்’’ என வள்ளிக்கு நன்றி சொல்ல வள்ளி குழம்புகிறாள். பிறகு ப்ளாஷ் கட்டில் வேலு தனது அம்மாவிடம் போனில் ‘’நாங்க உயிரோட இருக்க காரணமே வள்ளி மேடம் தான். அவங்க மட்டும் ஆரத்தி கொண்டு வந்து காட்டி லேட் பண்ணாம இருந்திருந்தா நம்ம கார்தான் முதல்ல பெருசா மாட்டி இருக்கும்’’ என்று சொல்ல ரத்னவேல் அதைக் கேட்டது தெரிய வருகிறது. பிறகு வள்ளி அப்பா சொன்னதை நினைத்து பார்த்து சந்தோஷப்படுகிறாள்.

வள்ளியின் மனதைப் புரிந்துகொள்வாரா அப்பா ரத்னவேல்?!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com