'வள்ளியின் வேலன்' இன்று : சர்ப்ரைஸுக்கு காத்திருக்கும் ரேணு... வேலனுக்கு காத்திருக்கும் சிக்கல்!
வேணியால் வந்த அவமானம்!
வேலன் வீட்டில் வேணியின் புருஷன் ''நான் தெனமும் கறி சோறுதான் சாப்பிடுவேன்'' என்று பேசிக்கொண்டிருக்க ரேணுகா வீட்டுக்குள் வர வேலனின் மாமா ''என்ன ரேணு மீன் வாசனை வருது'' என்று கேட்க அவளை ''ஆமாணே ஊற போட்டு இருக்கேன்... எடுத்துட்டு வரேன்'' என்று சொல்கிறான்.
ரஞ்சித் போடும் தப்புக் கணக்கு!
கார்டனில் உட்கார்ந்து டீ சாப்பிடும் ரத்தினவேல் வேலனை கூப்பிட்டு ஒரு ஃபைலை கொடுத்து " இது முக்கியமான ஃபைல் பத்திரமாக வை'' என்று சொல்லி கொடுக்கிறார். வேலன் ஃபைலை கொண்டுவந்து பீரோவில் வைக்க அந்த இடத்தில் வந்து ரஞ்சித் நிற்கிறான்.
குடும்பத்திடம் கோபப்பட்ட வேலன்!
அடுத்து வீட்டுக்கு வந்த வேலன் எல்லாருக்கும் அவர்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொடுக்கிறான். வேணிக்கு வட்டி கட்ட பணம் கொடுக்க அவள் பணத்தை வாங்காமல் நிற்க வேலனின் அப்பா, கடைக்காரர்கள் வந்து சத்தம் போட ரேணுகா வளையலை கழட்டி கொடுத்த விஷயத்தை சொல்ல வேலன் "எதுக்குபா இப்படி என் மானத்தை வாங்கறீங்க? நம்ம பிரச்சனையை நாமளே பார்த்துக்கலாம்" என்று சத்தம் போடுகிறான்.
கூல் செய்த வள்ளி!
அப்பாவின் போட்டோவுடன் ரூமுக்கு வந்த வள்ளியிடம் அம்மு ''நீயே போய் போட்டோ ஃபிரேம் போட்டியா'' என்று கேட்க வேலன் போட்டுக் கொடுத்ததாக சொல்கிறாள். ''வேலனுக்கு தேங்க்ஸ் சொன்னியா'' என்று கேட்க வள்ளி ''சொல்லிடுவோமா'' என்று போனை எடுக்கிறாள்.
கால் கிடக்க காத்திருக்கும் ரேணுகா!
மறுநாள் காலையில் ரேணுகா தனக்கு பிறந்தநாள் என்பதால் முதலில் வேலன்தான் தனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என ஆசையுடன் இருக்கிறாள். ரேணுகாவின் அப்பா அம்மா அண்ணன் என மூவரும் வாழ்த்து சொல்ல கூப்பிட யாரும் வாழ்த்து சொல்லக்கூடாது என ஸ்வீட்டை எடுத்துக் கொண்டு கீழே வருகிறாள்.
வேலன் வீட்டிலும் வேணியை வாழ்த்து சொல்ல விடாமல் நேராக ரூமுக்கு வந்து வேலனை தேட பெட்டில் அவனது அப்பா படுத்திருக்க ஏமாற்றம் அடைகிறாள் ரேணுகா.
பிறகு வேலனின் அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டு வேலன் எப்போ வருவான் என்று விசாரிக்கிறாள். காலையிலிருந்து சாயங்காலம் வரை வேலனுக்காக கால் கிடக்க காத்துக் கொண்டிருக்கிறாள் ரேணு. வேலனுக்கு என்ன ஆச்சர்யம் காத்துக்கொண்டிருக்கிறதோ?!