'வள்ளியின் வேலன்' இன்று : காதலை சொன்ன ரேணுகா... வேலனின் பதில் என்ன?
காத்து கிடக்கும் ரேணுகா!
வேலனுக்காக காத்து கிடக்கும் ரேணுகா ஆனந்தியிடம் ''உன் அண்ணே எப்போ வருவாரு'' என கேட்டு கொண்டே இருக்கிறாள். இதனால் ஆனந்தி வேலனுக்கு போன் போட்டு ''எங்க இருக்க'' என விசாரித்து ''ரேணுகா உன்னோட வாழ்த்துக்காக வெயிட் பண்றா'' எனச் சொல்கிறாள்.
வேலன் ''நான் எதுக்கு ரேணுகாவுக்கு வாழ்த்து சொல்லணும்'' என்று ஷாக் கொடுத்துவிட்டு பின்னர் போனை கொடுக்கச் சொல்லி வாழ்த்து சொல்ல வர ரேணுகா நேரில் வந்து சொல்லுமாறு போனை வைத்து விடுகிறாள்.
ரஞ்சித்தின் சதி!
ரத்னவேல் வீட்டில் வக்கீல் வந்திருக்க அவர் கொடுத்த ஃபைலை எடுத்து வரச் சொன்ன வேலன் பீரோவில் சென்று தேட கீழே ரஞ்சித் தனது அம்மா வேதநாயகியிடம் ''அந்த ஃபைல் கிடைக்காது... வேலன் இன்னையோடு வீட்டுக்கு கிளம்பிப் போக வேண்டியதுதான்'' என்று சொல்கிறான்.
கனவு கண்ட ரேணுகா :
வீட்டில் ரேணுகாவின் பிறந்த நாளை கொண்டாட அவள் வேலனுக்கு பிடித்தது என்னவென்று கேட்டு கேட்டு தயாராகிறாள். பிறகு வீட்டுக்கு வந்த வேலன் ரேணுகாவுக்கு கிஃப்ட் கொடுக்க அவள் ''நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா'' என்று கேட்க வேலன் அப்பா அம்மாவை பார்க்க அவர்கள் சம்மதம் என தலையாட்ட வேலனும் ரேணுகாவுக்கு கிரீன் சிக்னல் கொடுப்பது போல ரேணுகா கனவு காண்கிறாள்.
காதலை சொன்ன ரேணுகா!
இந்த கனவுக்குப் பிறகு வேலன் வீட்டுக்கு வர ரேணுகா கேக் வெட்டி அவனுக்கு ஊட்டி விட்டு உங்களிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்துச் சென்று ஒரு மோதிரத்தை எடுத்து நீட்டுகிறாள். இதைப் பார்த்து வேலன் அதிர்ச்சி அடைகிறான்.