மோடி மேஜிக் ஓவர்…. 2026 தமிழ்நாட்டு தேர்தல் எப்படி இருக்கும்?!
2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன. 2000-த்துக்குப்பிறகு நடக்கப்போகும் ஆறாவது தேர்தல் இது. 2000-களுக்கு முன்பு இருந்த தேர்தல் முறையைவிட கடந்த ஐந்து தேர்தல்களும் ஒவ்வொன்றும் தனித்துவமானவை.
1996 தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார் கருணாநிதி. சென்னை முழுக்க மேம்பாலங்கள், ஐடி வளாகங்கள், வளர்ச்சி, மலர்சி, மிரட்சி என்று பிரசாரம் செய்த திமுக-வுக்கு மிகப்பெஇர்ய அடி விழுந்தது. யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா வெற்றிபெற்றார். இத்தனைக்கும் அவர் போட்டியிடும் தகுதியை இழந்து எந்த தேர்தலிலும் போட்டியிடாமலேயே வென்றார். அதிமுக 132 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது. திமுக வெறும் 31 இடங்களில் மட்டுமே வென்றாலும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இருந்த வாக்கு வித்தியாசம் 0.5சதவிகிதம் மட்டுமே. அதிமுக 31.4 சதவிகித வாக்குகளைப் பெற, திமுக 30.9 சதவிகித வாக்குகளைப்பெற்றது.
2000 அதாவது மில்லினியத்துக்குப்பிறகான தேர்தல் தனித்துவமானவை. ஒவ்வொரு தேர்தலிலும் புதிய கட்சிகள் களமிறங்குவதும், புதிய கூட்டணிகள் உருவாவதும் என தமிழகத்தேர்தல்கள் அதிக மசாலாவைக்கொண்டே இருக்கின்றன.
திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாட்டாளி மக்கள் கட்சி 20 எம்எல்ஏ-க்களுடன் 5.7 சதவிகித வாக்குகள் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உயர்ந்தது. காங்கிரஸ் 5.8 சதவிகித வாக்குகள் பெற்று இருந்தாலும் 7 எம்எல்ஏக்களுடன் நான்காவது இடம்பெற, மதிமுக 4.6 சதவிகித வாக்குகள் 4 எம்எல்ஏக்களுடன் ஐந்தாவது இடம்பெற்றது. இவர்கள் அனைவருமே அதிமுகவுடன் இணைந்து இத்தேர்தலில் போட்டியிட்டனர். முதலும் இதுவரை கடைசியுமா இத்தேர்தலில் திமுக பாஜகவுடன் கூட்டணிப்போட்டு போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க கூட்டணி பலத்தால் இத்தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் முதல்முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி என பல கட்சிகள் முதல்முறையாக போட்டியிட்டன.
2026 தேர்தலில் தேர்தலில் அதிமுக 2016 தேர்தலில் பெற்றதைப்போலவே 40 சதவிகித வாக்குகளைப்பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு ஓட ஆரம்பித்திருக்கிறது திமுக.
2006 தேர்தலில் திமுக மிகப்பெரிய கூட்டணி போட்டு அதிமுக-வை ஆட்சியில் இருந்து கீழே இறக்கியது. இந்ததேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறவில்லையென்றாலும் காங்கிரஸோடு கூட்டணி அமைத்திருந்தால் தனிக்கட்சி ஆட்சியாகவே இதை நடத்தியது. இந்ததேர்தலில் திமுகவின் வாங்கு வங்கி கிட்டத்தட்ட 4 சதவிகிதம் குறைந்து 26.5 சதவிகிதமானது. மாறாக தோல்வியடைந்திருந்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கி 1 சதவிகிதம் அதாவது 32.6 சதவிகிதமாக உயர்ந்து இருந்தது. 96 எம்எல்ஏ-க்கள் காங்கிரஸின் 34 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது திமுக. இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணிபோட்ட பாட்டாளி மக்கள் கட்சி கிட்டத்தட்ட அதே வாக்கு சதவிகிதமாக 5.6 சதவிகிதத்தையும், 18 எம்எல்ஏக்களையும் பெற்றது.
இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் முதல்முறையாக கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார் விஜயகாந்த். 8.3 சதவிகித வாக்குகள் பெற்று வாக்கு சதவிகிதத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியான மூன்றாவது பெரிய கட்சியாக உயர்ந்தது தேமுதிக. ஆனால், வெற்றியாக வெறும் விஜயகாந்த் மட்டுமே விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றிபெற்றார்.
2011 தேர்தலில் மீண்டும் ஆட்சியை இழந்ததோடு மட்டுமல்லாமல் எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்தது திமுக. தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக 38.4 சதவிகித வாக்குகளுடன், 150 எம்எல்ஏக்களுடன் ஆட்சி அமைத்தார் ஜெயலலிதா. திமுகவின் வாக்கு வங்கி அப்படியே சரிந்து அதிமுக பக்கம் போனது கண்கூடாகத்தெரிந்தது. திமுகவின் வாக்கு வங்கி 26 சதவிகிதத்தில் இருந்து 22.4 சதவிகிதமாக குறைந்ததோடு வெறும் 23 எம்எல்ஏக்களே திமுகவுக்கு கிடைத்தனர்.
2026 தேர்தலுக்கு முன்பாக நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
எதிர்கட்சி அந்தஸ்தைப்பெற்ற விஜயகாந்தின் தேமுதிக கட்சி முதல் தேர்தலைவிடவும் கொஞ்சம் குறைவாக 7.9 சதவிகித வாக்குகள் பெற்றாலும் கூட்டணி பலத்தால் 29 எம்எல்ஏக்கள் பெற்று எதிர்கட்சியானது. இந்த தேர்தலில் 3 எம்எல்ஏ-க்களையே பெற்றிருந்தாலும் 5.6 சதவிகித வாக்கு வங்கியுடன் செல்வாக்கான கட்சியாகவே இருந்தது பாமக.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் இருக்கும் என்பதை உடைத்து எம்ஜிஆருக்குப்பிறகு தொடர்ந்து அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட சாதனையைப் படைத்தார் ஜெயலலிதா. இந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி இன்னும் உயர்ந்து 40.9 சதவிகிதமானது. இந்தத்தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அந்த கூட்டணியே வீழ்ச்சியை சந்தித்தது. மக்கள் நலக்கூட்டணி என்கிற பெயரில் தேமுதிக, விசிக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து போட்டிபோட்டன. தேமுதிக வெறும் 2.4 சதவிகித வாக்குகளே இந்த தேர்தலில் பெற்றது. தனித்துப்போட்டியிட்ட பாமக 5.3 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தாலும் ஒரு எம்எல்ஏ கூட வெற்றிபெறவில்லை.
கூட்டணிகள் பிரிந்ததால் திமுக தோல்வியடைந்திருந்தலும் அதன் வாக்கு வங்கி உயர்ந்தது. 31.6 சதவிகித வாக்குகள் பெற்று 89 எம்எல்ஏக்களை வென்றிருந்தது திமுக. 2000 தேர்தலுக்குப்பிறகு 5 அல்லது 5.5 சதவிகிதத்துக்குள்ளேயே இருந்த காங்கிரஸின் வாக்கு வங்கி இந்த தேர்தலில் 6 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்தது.
2021 தேர்தலில் ஜெயலலிதா உயிரோடு இல்லை. எடப்பாடி, பன்னீர்செல்வம் என ஒற்றுமையின்மையோடு இந்ததேர்தலை சந்தித்தது அதிமுக. தலைமை பலம் இல்லாத காரணத்தால் 40 சதவிகிதத்தில் இருந்த அதிமுகவின் வாக்கு வங்கி 33.3 சதவிகிதமா விழுந்தது. மாறாக 3.16 சதவிகித வாக்கு வங்கியோடு இருந்த திமுக 37.7 சதவிகித வாக்குகளுடன் 133 எம்எல்ஏக்களைப் பெற்றது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8 சதவிகித வாக்குகளைப்பெற்று தனிக்கட்சி அங்கீகாரம் பெற்றிருக்கிறது. இதனால் 2026 சட்டமன்றத் தேர்தல் மிகக் கடுமையான போட்டி நிறைந்ததாக இருக்கும். நடிகர் விஜய்யும், சீமானும் கூட்டணி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சீமானின் 8 சதவிகித வாக்குகளோடு, விஜய்யும் 8 சதவிகித வாக்குகளைப் பெற்றார் என்றால் காட்சிகள் மாறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கூட்டணி அமைவதைப் பொறுத்து தேர்தலின் சூழலும் மாறும். பொறுத்திருப்போம்!