பேஜர், வாக்கி டாக்கி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களின் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது ஒட்டுமொத்த உலகையே அதிர வைத்துள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் - ஹெஸ்புல்லா இடையே போர் மூளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஹெஸ்புல்லா அமைப்பு என்றால் என்ன?
இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையில், லெபனானை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஹெஸ்புல்லா அமைப்பு நுழைந்தது ஏன் என்னும் கேள்வி பலருக்கு எழுகிறது. இதனை புரிந்து கொள்ள ஹெஸ்புல்லா பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
`லெபனான்’ என்னும் மத்திய கிழக்கு நாட்டில் 1985-ல் ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சியான ஹெஸ்புல்லா நிறுவப்பட்டது. இது பல மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான போராளிகளை தன் வசம் கொண்டுள்ள ஒரு `போராளி அமைப்பாகவும்’ இயங்கி வருகிறது. இந்த அமைப்புக்கு ஈரான் முழு ஆதரவளித்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் ஹெஸ்புல்லாவுக்கு நிதியளிப்பதே ஈரான் தான்.
அண்டை நாடான பாலஸ்தீனப் பிரச்னைகளுக்கு லெபனான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. காசாவில் இயங்கும் ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறது, `நண்பனுக்கு எதிரி எனக்கும் எதிரி’ என்பது போல், ஹமாஸுக்காக ஹெஸ்புல்லா இஸ்ரேலை கடுமையாக எதிர்த்து வருகிறது.
லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஷியா முஸ்லிம் மக்கள் பெரும் ஆதரவு அளித்து வந்தாலும், சுன்னி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என ஷியா அல்லாதவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
லெபனானை பொறுத்தவரை அதன் தேசிய ராணுவம் மிகவும் வலிமையற்றதாக இருப்பதால், ஹெஸ்புல்லா அமைப்பு ராணுவம் போன்று செயல்பட்டு வருகிறது. சமீபக் காலமாக இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல் லெபனான் ராணுவம் திணறி வந்தாலும், ஹெஸ்புல்லா அரணாக செயல்பட்டு பொதுமக்களை பாதுகாத்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து, அவர்கள் பயன்படுத்தும் பேஜர், வாக்கி டாக்கி போன்ற தொலைதொடர்பு சாதனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டிப்பாக இஸ்ரேல் தான் செய்திருக்கும் என ஹெஸ்புல்லா கூறியது. ஆனால் இஸ்ரேல் தரப்பு மறுப்பு தெரிவித்தது.
பேஜர், வாக்கி டாக்கி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களில் உற்பத்தி செய்யும் போதே வெடிப்பொருட்களை நிரப்பி, ஹேக்கிங் மூலம் வெடிக்க வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இஸ்ரேலை பொறுத்தவரை ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்பினரை தீவிரவாத குழுக்கள் என்றும் அவர்களை அழிக்க வேண்டும் என்றும் சூளுரைத்துள்ளது.
இந்த தாக்குதலில் குழந்தைகள், வயதானவர்கள் உட்பட பொதுமக்களும் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு பிறகு இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா தாக்குதல்களை அதிகரித்து உள்ளது. இஸ்ரேலும் பதிலுக்கு பதில் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேலை பொறுத்தவரை ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்பினரை தீவிரவாத குழுக்கள் என்றும் அவர்களை அழிக்க வேண்டும் என்றும் சூளுரைத்துள்ளது. இஸ்ரேலின் முக்கிய நோக்கம் பாலஸ்தீனத்தில் இருக்கும் காசா மற்றும் மேற்கு கரை பகுதியை முழுவதுமாக கைப்பற்ற வேண்டும்.
ஆனால் ஹமாஸ் அதற்கு தடையாக செயல்பட்டு வருகிறது. ஹெஸ்புலாவும் தடையாக நிற்கிறது. இந்த இரண்டு அமைப்புகளை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில், காசா, மேற்குகரை, லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.
தற்போதைய பிரச்னைக்கான ஆரம்ப புள்ளி
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசாவை தளமாக கொண்டு இயங்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையேயான போர் கடந்தாண்டு அக்டோபர் 7ல் துவங்கியது. இதுவே நடக்கும் பிரச்னைகளுக்கான துவக்க புள்ளி.
வரலாற்று ரீதியாகவும், மத கோட்பாடுகள் ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல்கள் இருந்தபோதிலும், இந்த அளவுக்கு அதிகரித்தது அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான். அதன்பின்னர் இஸ்ரேல்-காசா இடையே வான்வழித் தாக்குதல்கள் கடுமையாக நடந்து வருகிறது.
இஸ்ரேலை எதிர்த்த போது காசா தடம் தெரியாமல் அழிக்கப்பட்டது. தற்போது லெபனானை அடிப்படையாக கொண்ட ஹெஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் எடுக்கிறது. எனவே லெபனான் அடுத்த காசாவாக மாறிவிடுமோ என்ற அச்சம் உலகம் முழுவதும் நிலவி வருகிறது.
கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி, காசாவை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஹமாஸ், தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 நபர்கள் பிணைக்கைதிகளாக காசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 30,000 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் ஒருபுறம் இருக்க ஹெஸ்புல்லா அமைப்பும் தற்போது லிஸ்டில் சேர்ந்து கொண்டது.
ஹெஸ்புல்லா அமைப்பும் கொள்கை, கோட்பாடு ரீதியாக இஸ்ரேலை முற்றிலும் வெறுக்கும் ஒரு அமைப்பு. காசாவை அடிப்படையாக கொண்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலை எதிர்த்த போது காசா தடம் தெரியாமல் அழிக்கப்பட்டது. தற்போது லெபனானை அடிப்படையாக கொண்ட ஹெஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் எடுக்கிறது. எனவே லெபனான் அடுத்த காசாவாக மாறிவிடுமோ என்ற அச்சம் உலகம் முழுவதும் நிலவி வருகிறது.
காசாவில் அமைந்துள்ள கட்டடங்களில் பாதிக்கு மேல் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம்
இஸ்ரேல் -பாலஸ்தீனம் போர் லெபனான் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இது பெரியளவில் போராக மாற வாய்ப்புகள் உள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பெரும்பாலான உலகத் தலைவர்கள் காசா, உக்ரைன், சூடான், மத்திய கிழக்குப்பகுதி மோதல்கள் மூலம் 3ம் உலகப்போர் ஏற்படலாம் என்று அச்சம் தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. எதிர்வரும் சவால்கள் என்ற தலைப்பில் உலக நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பேசி வருகிறார்கள். ஐநா பொதுச் செயலாளர் அன்டனியோ குட்ரெஸ் தனது தொடக்க உரையில், ‘ நம் உலகம் அதன் சீரான பாதையில் இருந்து விலகி தடம் புரண்டு செல்கிறது. மீண்டும் அதனை சரியான பாதையில் செல்ல நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். மத்திய கிழக்கிலிருந்து உக்ரைன் வரை பெரும் மோதல்கள் வெடித்துள்ளன.
புவிசார் அரசியல் பிரிவினைகளால் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது. புதிய ஆயுதங்களின் உருவாக்கும் மனித சமுதாயத்துக்கே அச்சுறுத்தல். இது பேரழிவுக்கு வழிவகுக்கும். கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றார்.
பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோரும் உலக அளவில் அதிகரித்து வரும் மோதல் சூழலை பற்றி குறிப்பிட்டு பேசினார்கள். உலக அளவில் நடக்கும் மோதல்கள் மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.