நூல் விடுற டாஸ்க் :
இந்த வாரத்துக்கான நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கிற்கான இரண்டு போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில், இன்றைய ஃபைனல் போட்டியில் வெல்லும் அணிக்கே வெற்றி வாய்ப்பு. ஆக, வெற்றி வாய்ப்பை தக்க வைக்க இரண்டு டீமுமே களத்தில் இறங்கியது. இன்றைய டாஸ்க் நூல் விடுற டாஸ்க். இரண்டு பக்கம் கயிறு கட்டப்பட்டிருக்கும். அதற்கு நடுவே பந்தை வைத்து கீழே இருக்கும் டார்கெட்டுக்குள் போட வேண்டும். இந்த போட்டியில் முதலில் ஆண்கள் டீம் விளையாடியது.
இதுவே, ஆண்கள் டீமுக்கு பின்னடைவு என்றே கூறலாம். ஏனெனில், இவர்கள் விளையாட்டை பார்த்தே, தங்களுக்கான கேம் ப்ளானை வகுத்தது பெண்கள் டீம். எப்படி விளையாடக் கூடாதென்பதை ஆண்கள் டீமிடமிருந்து கற்றுக் கொண்டு, ஆட்டத்தை ஆடியது பெண்கள் டீம். இறுதியில், பெண்கள் டீமே வென்று நாமினேஷன் ப்ரீ பாஸை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.
குரூப்பிஸமா ? குரூப் டிஸ்கஷனா ?
செளந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, தர்ஷா ஆகியோர் நாமினேஷனில் இருப்பதால் யாருக்கு நாமினேஷனிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதற்கு கடும் போட்டி நிலவியது. ஏற்கெனவே ஒருமுறை ஜாக்குலினுக்கு கிடைத்துவிட்டதால் இந்த முறை ஜாக்குலினுக்கு நோ சொல்லிவிட்டார்கள் பெண்கள். இந்த வாரம் நன்றாக யார் விளையாடியது என்று மதிப்பிட்டு, இறுதியாக பவித்ராவுக்கு பாஸ் கொடுக்க முடிவு செய்தது பெண்கள் டீம்.
ஃபேவரிட்டிசம் இல்லாமல் தேர்வு செய்யணும். டீமுக்கு யார் இருந்தா நல்லது, இந்த வாரம் டீமுக்காக நன்றாக விளையாடியது யார் என்பதை மனதில் கொண்டே இனிமேல், எந்த முடிவும் எடுக்கப்படும் என்று பெண்கள் டீம் அறிவித்தது வரவேற்க கூடியது.
நாங்க நல்லா விளையாடலையா? என்று கடுப்பானார்கள் செளந்தர்யாவும் தர்ஷாவும். குரூப்பிஸமா இல்லாம குரூப் டிஷ்கஷனா இருந்தா நல்லது தான் என்று கருத்துகள் வந்தன. பொதுவாக, ஒரு டீமுக்குள் இருந்தால் டீமின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அதற்கான நிதானமும், கேம் பிளானும் தர்ஷா & செளந்தர்யா இருவரிடமும் இல்லை. எல்லாவற்றிக்கும் சண்டைக்கு போகாமல், டெக்னிக்காக எப்படி தன் பக்கம் அவர்களை இழுப்பது என்பதையே இருவரும் மிஸ் செய்கிறார்கள்.
சவுண்ட் செய்யும் அட்ராசிட்டீஸ்
ஒவ்வொரு முறை பெண்கள் டீம் மீட்டிங் முடிந்த பிறகும், டீம் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவது, அவர்களை கலாய்த்து புலம்புவதை சவுண்ட் எப்பொதுமே சைலன்ட்டாக செய்கிறார். ‘டீமுக்காக டீமுக்காகன்னு சொல்லுறாங்களே... கத்தியை வெச்சி அறுத்துக்கவா?
‘வெளிய இருக்கவங்க கிட்ட ஓட்டு வாங்குறது பிரச்னை இல்லைடா... உள்ள இருக்குறவங்க கிட்ட ஓட்டு வாங்குறது பெரிய டாஸ்க்குடா...’ என்று ஜெஃப்ரியிடம் புலம்பினார். அதை அப்படியே ஆண்கள் காதிலும் போட்டு வைத்தார் ஜெஃப்ரி..
பெண்கள் டீமுக்குள் ஜோடி ஜோடியாக இருக்கிறார்கள். அன்ஷிதாவும் சுனிதாவும், செளந்தர்யாவும் தர்ஷாவும், பவித்ராவும் தர்ஷிகாவும் என குரூப் குரூப் ஆக திரிக்கிறார்கள். இதுவே டீமுக்குள் பிரச்னை வெடிக்க காரணமாகிறது.
பெஸ்ட் ஆஃப் வீக்
இந்த வாரத்துக்கான பெஸ்ட் ஆஃப் தி வீக் என்று ஆண்கள் டீமிலிருந்து முத்துக்குமரனும், பெண்கள் டீமிலிருந்து ஆனந்தியும் தேர்வானார்கள். இவர்களே அடுத்த வாரத்துக்கான கேப்டன் டாஸ்க்கிற்கு போட்டிப் போடுவார்கள். இருவருமே பலமிக்க போட்டியாளர்கள். அடுத்த வாரம் பேச்சுப் போட்டி வைத்தால்.. சபாஷ் சரியான போட்டியாக இருக்கும். பொறுத்திருந்து பார்க்கலாம்.
வெல்கம் 'அமரன்' சிவா
பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும் பட புரோமோஷனுக்காக நடிகர்கள் வீட்டுக்குள் வருவார்கள். இந்த சீசனின் முதல் விருந்தினர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்குள் போனவர் என்பதால் எப்போதுமே விஜய் டிவியுடன் அசோசியேட் ஆவார் சிவா. அப்படி, தீபாவளி ரிலீஸாக இருக்கும் அமரன் படத்துக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார்.
முதலில் யார் வீட்டுக்குள் கால் வைக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு டீமுமே பாட்டு பாடி இம்ப்ரெஸ் செய்தனர். ஆண்கள் பாடும் போது, பெண்களும் இணைந்து வைப் செய்ததால் பெண்கள் வீட்டுக்குள் முதலில் சுற்றிப் பார்க்க நினைத்தார் சிவா. குட் சாய்ஸ் !
பாய்ஸ் ரூம் எப்படி இருக்குமோ அப்படி வச்சிருக்கீங்க என்று தன்னுடைய பேச்சிலர் ரூம் கதையை சிவா சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது.
'' 'அமரன்' படம் பற்றிய முதல் அறிவிப்பை பிக்பாஸ் ஷோவில் தான் சொன்னார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிறைய ஷோக்களை இந்தப் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி தான் இயக்கினார். அதனால, பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து அமரன் படம் பற்றி பேசுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்'' என்று கூறினார் சிவா.
பிக்பாஸ் சார்பில் மேஜர் முகுந்த் உடன் சிவகார்த்திகேயன் இருக்கும் ஓவியம் பரிசளிக்கப்பட்டது. அதோடு, டிரெய்லர் பார்த்து கேக் வெட்டி கொண்டாடினர் ஹவுஸ் மேட்ஸ்!
நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த அமரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் தான் அமரன். நிஜமாக வாழ்ந்த மனிதரின் சாகத்தை திரையில் காட்ட இருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
தேசப்பற்று கொண்ட படமென்பதால் அனைவரும் தேசிய கொடியை உடையில் அணிந்திருந்தனர். ஆனால், அது மட்டும் Blur செய்யப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து கிளம்பும் போது தீபாவளிக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என சிவகார்த்திகேயன் கூறிவிட்டுச் சென்றார்.
இன்றைய நாளின் கடைசி டாஸ்க்காக பேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்தது. அதில் ஒவ்வொருவரும் அசத்தலான உடையுடன் கலக்கினார்கள். அதில் பவித்ராவும், விஷாலும் சிறந்த ஸ்டைல் ஐகான் ஆக செலெக்ட் ஆனார்கள். இந்த வாரம் முழுவதும் அங்கீகாரம் கிடைக்காமல் ஏங்கிய பவித்ராவுக்கு நாமினேஷன் விடுதலையும், ஸ்டைல் ஐகான் பட்டமும் கிடைத்ததால் செம ஹேப்பியானார் பவித்ரா.
இந்த வாரத்தில் எமினேட் ஆகப் போவது யார், விஜய்சேதுபதி யாரையெல்லாம் பஞ்சாயத்துக்கு அழைக்கப் போகிறார் என்பதை சனி & ஞாயிறு எபிசோடுகளில் பார்க்கலாம்.