ஒரு நாளென்பது இசையின்றி யாருக்கும் நகராது. தினமும் ஒரு முறையாவது ஒரு பாடலை, இசையை கேட்காமல் இருக்கமாட்டோம். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு தினமும் காலையில் போடும் அந்த ஒரு பாட்டு மட்டுமே அன்றைய நாளுக்கான எனர்ஜி டானிக். அந்த பாடல்கள் தேர்வில் யுனிக் பீஸ் நம்ம பிக் பாஸ்.
இந்தப் பாட்டு இன்னைக்கு போதும்யா... எனும் அளவுக்கு அன்றைய நாளுக்கான மூட் செட் ஆக பாடல்களும் அமையும். அப்படி, ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலின் எனர்ஜியுடன் இன்றைய தினம் தொடங்கியது. இது BB Tamil 08 Day 18.
பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கில் ஜாக்குலினை பாடி ஷேமிங் செய்தார் செளந்தர்யா. முதலில் ஜாலியாக எடுத்துக் கொண்டவர் திடீரென அப்படி சொல்லாதீங்க என்று கடுப்பாகிவிட்டார்.
ஹோட்டல் விருந்தினர் எனும் கேரக்டரில் இருந்ததால் மட்டுமே கலாய்த்துப் பேசினார் செளந்தர்யா. அந்த சம்பத்துக்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இன்று அதிகாலையிலேயே இருவரும் அமர்ந்து பேசி சமாதானமானார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் உடலால் அவமானத்தை எதிர்கொண்டதால் கோபப்பட்டதாக ஜாக்குலின் சொன்னதும் செளந்தர்யாவும் மன்னிப்புக் கேட்டார்.
''இறுதியாக, இரண்டு டீமும் ஹோட்டல் நடத்தியதுக்கு ரிசல்ட் சொல்ல வேண்டுமென்பதால் ரகசிய ஓட்டெடுப்பை நடத்தினார் பிக்பாஸ். அதன்படி, மேனேஜர், ரூம் சர்வீஸ், ரிசப்ஷனிஸ்ட், செஃப் ஆகியோருக்கு இரண்டு பெஸ்ட், இரண்டு Worst யாரென்பதை ஒவ்வொருவரும் எழுதி பெட்டியில் போட வேண்டும்.
குடவோலை முறையில் எடுத்த வாக்கெடுப்பின் படி, 8 பெஸ்ட் பெர்ஃபாமர்களை அறிவித்தார் பிக்பாஸ். முத்து, ரஞ்சித் , சுனிதா, பவித்ரா, அருண், தர்ஷா , ஜெஃப்ரி, தர்ஷிகா ஆகியோர் பெஸ்ட் எனவும் மீதமுள்ளவர்கள் Worst பெர்ஃபார்மர் எனவும் அறிவிக்கப்பட்டது. Worst-ல் டாப் மூன்று இடங்களில் செளந்தர்யா, தீபக், சத்யா இடம்பெற்றிருந்தனர்.
இந்த பெஸ்ட், Worst வைத்தே அடுத்த விளையாட்டு துவங்கியது. பெஸ்ட் ஆக வந்தவர்கள் கஸ்டமர்களாகவும், Worst ஆக வந்தவர்கள் ஹோட்டல் நடத்துபவர்களாகவும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இந்த ட்விஸ்டை நீங்க எதிர்பார்க்கலைல... சொல்லப்போனா… முதல்முறையா பெண்களும் ஆண்களும் இணைந்து போட்டிப் போடப் போகிறார்கள்.
லவ் ரோலில் தர்ஷா, ஹோட்டல் ஓனர் பையனாக முத்துக்குமரன், கணவர் மனைவியாக அருண், சுனிதா , கஜினி ரோலில் பவித்ரா, மூன்வாக் மூர்த்தியாக ரஞ்ஜித்தும் அவரின் பவுன்ஸராக ஜெஃப்ரியும் விருந்தினர்களாக வந்தனர்.
ஹோட்டல் நிர்வாகத்தில் மேனேஜராக செளந்தர்யா, ரிஷப்ஷனிஸ்டாக தீபக், செஃப் ஆக அன்ஷிதா, ஜாக்குலின், விஷால் மற்றும் ரூம் சர்வீஸ் ஆக சத்யா , சாச்சனா ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
ரஞ்சித் ஒரு பக்கம் டான்ஸராக அட்ரா சிட்டி செய்தார். லவ் ரோலில் வந்த தர்ஷாவின் கேரக்டரும் சூப்பர். கெஸ்டாக வரும் ஒவ்வொருவரும் ஒரு கேரக்டரை எடுக்க வேண்டும். ஹோட்டலுக்கே ஓனர் கேரக்டரை எடுத்தால் எப்படி இருக்கும் என ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார் முத்துக்குமரன்.
ஹோட்டல் ஓனரின் பையனாக சீக்ரெட்டாக ஹோட்டல் எப்படி நடக்கிறது என பார்க்க வருகிறார் முத்து. பணத்திமிரு பிடித்த ஆள். உர்ர்ர்ன்னு முகம்னு ரோலில் அசத்தினார். ஹோட்டல் மீது அதிக புகார் வைத்ததும் முத்து தான், அதற்கான விளக்கமும் கொடுத்தார்.
ரூம் சர்வீஸ் ஆக வந்த ஆனந்தி கண்ணாடியில் இடித்து விழுந்துவிடுவார். ஹோட்டல் ஓனர் பையனான முத்து கடுமையான முகத்துடன் அவரிடம் பேசுவார். அதை பெர்சனலாக எடுத்துக் கொண்டு அழுதுவிடுகிறார் ஆனந்தி. லிவ்விங் ஏரியாவில் பேசும் போது கூட ஆனந்தி எமோஷனலாகிவிடுகிறார். கொஞ்சம் கூட இறக்கம் இல்லாம முத்து நடந்துக்கிறார் என புகார் வைக்கிறார்.
கேமை கேமாக பார்க்காம கேரக்டரை அட்டாக் பண்னாதீங்க என்று முத்துக்குமரன் கொடுத்த விளக்கம் சரியாக இருந்தது. முத்துக்குமரன் தரப்பை புரிந்துகொண்டு ஆனந்தியை சமாதானம் செய்தார் சுனிதா.
பெர்சனலாக எமோஷனலானாலும், முதலாளி திட்டுனதுல ஒரு ஊழியர் அழக்கூடாதா என்று ட்ராக்கை மாற்றினார் ஆனந்தி.
இறுதியாக, ஹோட்டல் நன்றாக இருந்தது. ஆனால், மேனேஜர் தான் சரியில்லை எனும் புகார் வலுத்ததால், மேனேஜராக வந்த செளந்தர்யாவை பணி நீக்கம் செய்து பிபி ஹோட்டல் டாஸ்க்கை முடித்து வைத்தார் பிக்பாஸ்.
இன்றைய நாளுக்கான டெய்லி டாஸ்க் நடக்கவில்லை. அதோடு, நாமினேஷன் ஃப்ரீ பாஸ் யாருக்கு போகப்போகிறது, டீமாக விளையாடினாலும், நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ஒருவருக்கு தான் கிடைக்கும். அதற்கு அடிதடி குளறுபடி நடக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இன்றைய ப்ரோமோவில் பெண்கள் டீம் வெற்றிப்பெறுகிறது. எனவே இந்த வாரம் பெண்கள் அணியில் யாராவது ஒரு போட்டியாளரை சேவ் செய்ய முடியும். எனவே நாமினேஷனில் இருக்கும் ஜாக்குலின், தர்ஷா, சவுந்தர்யா, பவித்ரா, அன்ஷிதா ஆகியோர் என்னை சேவ் சேய்யுங்கள் என தனித்தனியாக கேட்கின்றனர். பெண்கள் அணி பேசி முடிவெடுத்து யாரை சேவ் செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.