Jeeva
ஷாருக்கான் - 150 முதல் 250 கோடி
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ‘ரெட் சில்லீஸ்' எனும் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் வழியாகவே நடிக்கிறார் என்பதால் ஒரு படத்துக்கு 250 கோடி வரை சம்பளமாக எடுத்துகொள்கிறார்.
ரஜினிகாந்த் - 150 முதல் 210 கோடி
இப்போது எல்லா முன்னணி நடிகர்களுமே சொந்த தயாரிப்பு அல்லது அவர்களுக்கு நெருக்கமான நண்பர்களின் பெயரில் படம் எடுத்து நடித்துவரும் நிலையில் ரஜினிகாந்த் வெளி தயாரிப்பு நிறுவனங்களிடம் மட்டுமே நடித்து சம்பளம் வாங்குகிறார். படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமும் சேர்த்து ரஜினிகாந்துக்கு சம்பளமாகப் பேசப்படுகிறது.
விஜய் - 130 முதல் 200 கோடி
நடிகர் விஜய் கடைசியாக நடித்த ‘வாரிசு’, ‘லியோ’ படங்களுக்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெற்றிருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மார்க்கெட்டுக்கும் சேர்த்து சம்பளம் பேசப்படுகிறது.
பிரபாஸ் - 100 முதல் 200 கோடி
‘பாகுபலி' படத்தின் மூலம் புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் பிரபாஸ்தான் தெலுங்கு சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர். தொடர்ந்து பேன் இந்தியா படங்கள் நடிப்பதால் இவரது சம்பளம் உச்சத்தில் இருக்கிறது.
அமீர் கான் - 100 முதல் 175 கோடி
உச்சநட்சத்திரமாக இருந்த அமீர்கானின் பிசினஸ் மதிப்பு குறைந்திருப்பதால் ஐந்தாவது இடத்துக்குப் பின்தங்கியிருக்கிறார் அமீர் கான்.
சல்மான் கான் 100 முதல் 150 கோடி
இந்தி மார்க்கெட்டே சல்மான் கானுக்குப் பிரதானமாக இருப்பதால் அவருடைய பிசினஸ் கொஞ்சம் டல்தான். அதனால்தான் தமிழ் இயக்குநர்களின் படங்களிலும் நடித்துவருகிறார் சல்மான் கான்.
கமல்ஹாசன் - 100 முதல் 150 கோடி
உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் என சொந்த நிறுவனத்தோடு கூட்டணி அமைத்து மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்கிறார். ‘விக்ரம்' மிகப்பெரிய வெற்றிபெற்றதால் கமல்ஹாசனின் சம்பள மதிப்பு 100 டு 150 கோடியைத் தொட்டது.
அல்லு அர்ஜுன் - 100 முதல் 125 கோடி
‘புஷ்பா’ மூலம் அகில இந்திய மார்க்கெட்டைப் பிடித்துவிட்ட பிரபாஸும் பெரும்பாலும் சொந்த தயாரிப்பில்தான் நடிக்கிறார். இவருடைய படங்களும் பல நூறு கோடிகளில் வியாபாரம் ஆவதால் இவருடைய சம்பளமும் 100 கோடிக்கு மேல் இருக்கிறது.
அக்ஷய் குமார் - 60 முதல் 145 கோடி
பிரதமர் மோடியின் ஆசிபெற்ற நடிகரான அக்ஷய் குமாரின் சம்பளம் மற்ற பாலிவுட் நடிகர்களுடன் ஒப்பிடும்போது குறைவு. காரணம் இவருக்கு பேன் இந்தியா மார்க்கெட் இல்லை.
அஜித்குமார் - 105 கோடி
டாப் டென் லிஸ்ட்டில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறார் அஜித்குமார். நடிகர் விஜய்யுடன் ஒப்பிடும்போது தமிழைத்தாண்டி மற்ற மொழிகளில் பெரிதாக பிசினஸ் இல்லை என்பதால் கடைசி இடத்தில் இருக்கிறார் அஜித்குமார்.