GOAT vs OG : விஜய் - வெங்கட் பிரபு
GOAT vs OG : விஜய் - வெங்கட் பிரபு

GOAT vs OG : விஜய் - வெங்கட் பிரபு படத்தின் கிளைமாக்ஸ் ரகசியம் என்ன?

விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் இறுதியில் GOAT Vs OG என அடுத்தப்பாகத்துக்கான ஹின்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Published on

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்கிற பெயரும், OG என்கிற பெயரும் குறிப்பிடுவது என்ன, இந்த வார்த்தைகள் எப்படித் தோன்றின, எப்படி உலகம் முழுக்க பிரபலமாகின?!

GOAT (Greatest of All Time)

‘Greatest of All Time’ என்பதன் சுருக்கமே GOAT. அதாவது ஒரு துறையில் மிகச் சிறந்தவர் அல்லது ஜாம்பவான்களைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிற வார்த்தையே GOAT. இது ஆஃப்ரோ அமெரிக்கர்களிடையே உள்ளூரில் பேச்சு வழக்கில் பேசப்பட்ட வார்த்தை. முதன்முதலில் குத்துச்சண்டை வீரரான முகமது அலியை தங்களுக்குள் GOAT என அடையாளப்படுத்தினர். 

உள்ளூரில் இருந்த இந்த வார்த்தையை உலகப் பிரபலமாக்கியவர் ராப் பாடகரான LL Cool J. ஆஃப்ரோ அமெரிக்கரான கூல் ஜே முகமது அலி மற்றும் கூடைப்பந்து வீரர் ஏர்ல் மணிகால்ட்(Earl Manigault) எனும் இருவரையும் பெருமைப்படுத்தும் வகையில் G.O.A.T (Greatest of All Time) எனும் ஆல்பத்தை வெளியிட்டு பொதுமக்களிடையே பிரபலப்படுத்தினார். 2000-ம் ஆண்டு வெளியான இந்த ஆல்பத்துக்குப்பிறகுதான் Greatest of All Time என்கிற வார்த்தை டிக்‌ஷனரியில் இடம்பிடித்தது.

முகமது அலி
முகமது அலி

இதன்பிறகு பொதுவாகவே விளையாட்டுத்துறைகளில் சாதிக்கும் ஆஃப்ரோ அமெரிக்கர்களை குறிப்பதற்கே இந்த Greatest of All Time என்கிற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக டென்னிஸில் செரீனா வில்லியம்ஸ், கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் ஆகியோரை பத்திரிகைகள் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனப் புகழ்ந்து எழுதின. இதன்பிறகுதான் மெஸ்ஸி, ரொனால்டோ, விராட் கோலி வரை Greatest of All Time எல்லோருக்கும் பயன்படுத்தும் வார்த்தையாக மாறியது.

GOAT vs OG : விஜய் - வெங்கட் பிரபு
GOAT Review : பழைய கதையில் புதிய விஜய்... சொன்னதை செய்தாரா வெங்கட் பிரபு?! முழு முதல் விமர்சனம்!

OG என்றால் என்ன?

‘Original Gangster’ அல்லது ‘Original’ என்பதன் சுருக்கமே OG. அமெரிக்காவில் 1970-களில் இருந்த கேங்ஸ்டர் குழுக்களில் முதன்முதலாக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கலிஃபோர்னியாவில் இருந்த ஆஃப்ரோ அமெரிக்க கேங்க்ஸ்டர் குழுவான ‘Crips’ குழுதான் முதன்முதலாக இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது. கேங்கில் உள்ள தலைவர்களைக் குறிப்பதாக ஒரிஜினல் கேங்க்ஸ்டர் என்கிற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

விஜய்
விஜய்

இதன்பிறகு ஹிப் ஹாப் கலாசாரத்தில் 1991-ம் ஆண்டு ராப் பாடகர் Ice-T என்கிற ஆஃப்ரோ அமெரிக்கர் O.G என்கிற பெயரில் Original Gangster என்ற ஆல்பம் மூலம் இந்த வார்த்தையை பிரபலமாக்கினார். அதன் பின்னர் ‘OG’ ஹிப் ஹாப் மற்றும் ஆஃப்ரோ அமெரிக்கர்களிடையே  புகழ்பெற்றது.

அமெரிக்க கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டனை OG என ரசிகர்கள் அழைக்க, மீடியாக்களும் மைக்கேல் ஜோர்டனை OG என அடையாளப்படுத்தின. இப்படித்தான் இந்த வார்த்தையும் விளையாட்டுக்குள் வந்தது. 

இப்போது விஜய்யின் அடுத்தப்படத்தில் GOAT வெர்சஸ் OG சண்டை ஆரம்பிக்கும் என்று சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு. அதாவது GOAT-2 படத்தில் ஒரிஜினல் விஜய்யும், க்ளோன் விஜய்யும் சண்டையிட இருக்கிறார்களாம்!

logo
News Tremor
newstremor.com