ரஜினிகாந்த் - வேட்டையன்
ரஜினிகாந்த் - வேட்டையன்

ரஜினியின் பன்ச்தான் இல்லை... நல்ல வசனங்களுக்கும் பஞ்சமா?! ‘வேட்டையன்' பிரிவியூ விமர்சனம்!

ரஜின்காந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் படம் 'வேட்டையன்'. லைகா தயாரிப்பில் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸாகியிருக்கும் இந்தப்படத்தின் ப்ரிவியூ என சொல்லப்படும் முன்னோட்டம் நேற்று வெளியானது.
Published on

Prevue என்றால் ‘முன்னோட்டம்’ அல்லது ‘சாம்பிள்’ என அர்த்தம். ஒரு கிலோ இனிப்பு வாங்கும்போது சாம்பிளாக ஒரு சிறிய துண்டு சுவைக்க வைப்பார்கள் இல்லையா? அது போன்று 'வேட்டையன்' படக்குழு படம் வெளியாகும் வரை ரஜினி ரசிகர்களுக்கு சுவைக்க கொடுத்திருக்கும் சின்ன துண்டுதான் Prevue என்கிற பெயரில் நேற்று வெளியிடப்பட்டது.

‘ஜெயிலர்’ பட ஹிட்டுக்குப் பிறகு ரஜினி நடித்திருக்கும் படம் என்பதாலும், ‘ஜெய் பீம்’ ஹிட்டுக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் மாஸ் படம் என்பதாலும் இப்படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை இந்த Prevue நிறைவேற்றியதா?

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்


நேஷனல் போலீஸ் அகாடமி மீட்டிங்கில் நான்கு போலீஸ் அதிகாரிகள் காட்டப்பட அதில் ரஜினியின் படமும் இருக்க, ‘’Do you know who these officers?’’ என பிரகாஷ் ராஜ் குரலில் அமிதாப் பச்சன் கேள்வியோடு முன்னோட்டம் தொடங்குகிறது. ஐபிஎஸ் ட்ரெய்னிக்களில் ஒருவர் ‘’Renowned encounter specialists’’ என்கிறார். 

‘’இந்த நாட்ல லட்சக்கணக்கான போலீஸ் ஆபிசர்ஸ் இருக்கும்போது இவங்கள மட்டும் அடையாளம் தெரியுதே… ஹவ் இஸ் இட் பாசிபிள்’’ என மீண்டும் பிரகாஷ் ராஜ் கேட்க, கூட்டத்தில் இருக்கும் ஆபிசர்களில், ஒருவரான ரித்திகா சிங், ‘’மோஸ்ட் டேஞ்சரஸ் கிரிமினல்ஸ்ஸ இவங்க தைரியமா என்கவுன்ட்டர் பண்ணதால இவங்க ஹீரோஸா இருக்காங்க'’ என்பதோடு போலீஸ் அகாடமி காட்சி நிறைவடைகிறது.

ரஜினிகாந்த் - வேட்டையன்
ஷங்கரின் அவுட்டேட்டட் பிரசாரம், கமல்ஹாசனின் ரிப்பீட் வசனங்கள்... ‘இந்தியன்-2' ட்ரெய்லர் விமர்சனம்!

கடல் காட்டப்பட, ‘’புதுசா ஒன்னும் எடுக்கமுடியல... ஒரு பொருள கைமாத்தலாம்னு பாத்தா ஒரு பயலும் வரமாட்றானுவ… நமக்குத்தான் எஸ்பி-ன்ற பேர்ல ஒரு எமன் வந்திருக்கான்ல’’ என வில்லன்கள் குரல் பின்னணியில் கேட்க, 

‘’நல்ல ஊர்லதான் நாலு பப்ளிக்க கொலை பண்ணா எஸ்பிய டிரான்ஸ்ஃபர் அடிப்பானுவல்ல’’ எனச்சொல்ல ரஜினி ஸ்கிரீனில் என்ட்டர் ஆகிறார். ஹன்ட்டர் வன்ட்டார் என பிஜிஎம் ஒலிக்கிறது. ரானா டகுபதி, துஷாரா, மஞ்சு வாரியர், அபிராமி ஃபகத் ஃபாசில், ரோகிணி ஆகியோர் ஒவ்வொரு ஷாட்களில் காட்டப்படுகிறார்கள். 

மீண்டும் போலீஸ் அகாடமியில் ‘’ஸோ என்கவுண்ட்டர்ன்ற பேர்ல கொலை பண்றதுதான் ஹீரோயிசம்… இஸ் இட்’’ என அமிதாப் கேட்க, அதற்கு இன்னொரு இடத்தில் ரஜினி பதில் சொல்கிறார். ‘’என்கவுன்ட்டர்ன்றது குற்றம் செய்றவங்களுக்கு கொடுக்குற தண்டனை மட்டும் இல்ல… இனிமே இந்த மாதிரி குற்றங்கள் நடக்கக்கூடாதுன்றதுக்கு எடுக்குற முன்னெச்சரிக்கை நடவடிக்கை’’ என்கிறார். 

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

இதுதான் Prevue. ரஜினி படத்துக்கான எந்த பில்ட்அப்போ, ரஜினியின் பன்ச் வசனங்களோ இதில் இல்லை. அதேப்போல் முதல்முறையாக தமிழில் நேரடியாக நடித்திருக்கும் அமிதாப் பச்சனுக்கும் எந்த பில்ட் அப்பும் இல்லை. ஆனால் இவையெல்லாம் பெரிய குறையில்லை. தமிழ் சினிமா இந்த க்ளிஷேக்களை எல்லாம் கடந்துவிட்டது. ஆனால், வசனங்களிலோ, காட்சியமைப்பிலோ, விஷுவல்ஸிலோ எந்தப் புதுமையும், மிரட்சியும் இல்லாமல் இருப்பதுதான் ஏமாற்றமாக இருக்கிறது.

கன்னியாகுமரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார் ஞானவேல். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். ஒரு பானை சோற்றில் ஞானவேல் எடுத்துக்கொடுத்திருக்கும் ஒரு சோறு சரியாக வேகாததுபோல் இருந்தாலும் படம் திரைக்கு வரும் வரை காத்திருப்போம்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com