‘காக்கா தோப்பு' பாலாஜி!
‘காக்கா தோப்பு' பாலாஜி!

ரவுடி காக்காதோப்பு பாலாஜி போலீஸ் என்கவுன்ட்டரில் பலி… ஆம்ஸ்ட்ராங் கொலையாளி சம்போ செந்திலின் எதிரி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை இந்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வடசென்னையின் பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி இன்று அதிகாலை போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்.
Published on

பிஎம்பிடபிள்யு காரில் பயணிக்கும் சொகுசு ரவுடியான ‘சிடி' மணி என்பவரின் கூட்டாளிதான் இந்த காக்கா தோப்பு பாலாஜி. 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏ ப்ளஸ் ரவுடியான காக்கா தோப்பு பாலாஜியை இன்று அதிகாலை வியாசார்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் வைத்து போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

சிறையில் இருந்து வெளியேவந்த பாலாஜி, போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப்போட வராமல் தலைமறைவாக இருந்ததாகவும், அதனால் கைது செய்யப்போனபோது அவர் போலீஸாரைத் தாக்கியதாகவும், போலீஸார் தற்காப்புக்கு சுட்டதில் பாலாஜி பலியானதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?!

வடசென்னையில் பிராட்வே பகுதிக்கு அருகில் இருக்கும் சிறிய பகுதி ‘காக்கா தோப்பு'. இப்பகுதியில் சிறுவயதில் இருந்தே ரவுடியாக உருமாற வேண்டும் என ஆசைப்பட்டு பல கொலை சம்பவங்கள் செய்து ரவுடியானவர் ‘காக்கா தோப்பு' பாலாஜி. 2013-ம் ஆண்டு குண்டர் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ‘பில்லா சுரேஷ்', விஜி என இரண்டு எதிர் டீமில் இருந்த ரவுடிகளை வீடு புகுந்து வெட்டிக்கொன்றதன் மூலம் பிரபலமானவர் ‘காக்கா தோப்பு’ பாலாஜி. 

‘காக்கா தோப்பு' பாலாஜி!
'பாடி' சரவணன் முதல் 'சம்போ' செந்தில் வரை... சென்னையின் டாப் 10 ரவுடிகளும், திகில் பின்னணியும்!

சம்போ செந்திலின் எதிரி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலின் எதிரி காக்கா தோப்பு பாலாஜி. சிடி மணியுடன் சேர்ந்து பாலாஜியையும் கொல்ல, சென்னை அண்ணாசாலையில் வைத்து ஸ்கெட்ச் போட்டார் சம்போ செந்தில். தேனாம்பேட்டை காவல்நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு சிடி மணியும், பாலாஜியும் அதில் உயிர்பிழைத்தனர். 

இந்நிலையில்தான் சம்போ செந்திலைப் போலீஸார் தேடிவரும் நிலையில் காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் போலீஸாரின் என்கவுன்ட்டர் முயற்சிகளில் மூன்று முறை உயிர்தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாலாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது!

logo
News Tremor
newstremor.com