சீமான்
சீமான்

கொளுத்திப்போட்ட சீமான்... ''துரைமுருகனை இடைக்கால முதல்வராக அறிவிக்க வேண்டும்'' எனப் பேட்டி!

திருச்சியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்துப்பேசினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த சீமான் திருச்சி எஸ்.பி.வருண்குமாரை கடுமையாக விமர்சித்துப்பேசியதோடு, துரைமுருகனை இடைக்கால முதல்வராக அறிவிக்கவேண்டும் என்றார்.
Published on

பத்திரிகையாளர்கள் திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கும், சீமானுக்கும் இடையே தொடரும் சச்சரவு பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான் ஒரு கட்டத்தில் உணர்ச்சிப்பொங்கப் பேசினார்.

''நான் என்ன வேலை செய்றேன். அவர் என்ன வேலை செய்கிறார். வருண்குமார் திருச்சி எஸ்பி, அவருடைய மனைவி புதுக்கோட்டை எஸ்.பி. என்ன இன்ஃபுலன்ஸ்ல நீங்க பக்கத்து பக்கத்து டிஸ்ட்ரிக்ட்ல வேலைக்கு வந்தீங்க.  என்னை பிச்சைக்காரன்னு சொல்ற, திரள் நிதி கேக்குறேன்னு சொல்ற... உன் வீட்டுக்கு வந்தா நான் பிச்சை எடுத்தேன். ஒவ்வொரு தொகுதிக்கும் 50, 60 கோடி செலவழிக்க எப்படி திமுகவுக்கு பணம் வந்துச்சு. அதைக் கேள்வி கேட்கமுடியுமா? ஐபிஎஸ் படிச்சா ஐபிஎஸ் வேலையைப் பாரு. இல்லைனா திமுக ஐடி விங்க்ல ஜாயின் பண்ணு. எங்களை எல்லாம் சமூக ஊடகங்கள்லகொஞ்சுறாங்களா… உங்க மனைவியைப் பற்றி மட்டும் தப்பா பேசிட்டாங்கன்னு பொங்குறீங்க. என் குடும்பத்தைப் பத்தியும்தான் எழுதுறாங்க. எங்க குற்றம் நடந்தாலும் விசாரிக்க நீங்கள் யாரு?

சீமான்
சீமான்

போன வருஷம் கன்னியாகுமரில பேசுன சாட்டை துரைமுருகன் பேச்சுக்கு திருவள்ளூரில் வழக்குப்போட்டு குண்டாஸ் போட்டாங்க. இப்ப தென்காசில கைது பண்ணி திருச்சில விசாரிக்க நீங்க யாரு. அங்க யாரும் போலீஸ் இல்லையா. செல்போனில் இருக்கூடிய உரையாடலை எடுத்து வெளியிட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. என்னை ஐந்தாறு முறை போலீஸ் கைது செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் கைது செய்த உடன் என்னுடைய செல்போன், மோதிரம் எல்லாவற்றையும் கழற்றி என்னுடன் வந்தவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். அதுதான் வழக்கம். ஆனால், துரைமுருகனின் செல்போனை எடுத்து அதில் பேசிய உரையாடல்களை எல்லாம் எப்படி போலீஸ் கேட்டது. அது போலீஸ்காரன் செய்கிற வேலையா? கட்சிக்காரன்தான் அதை செய்வான்.

சீமான்
கருணாநிதி, காவல்துறை குறித்து சீமான் சர்ச்சை பேச்சு… கைது நடவடிக்கையா, மன்னிப்பா?!

போலீஸ் கேட்டாலும் அந்த உரையாடல் எல்லாம் எப்படி திமுக ஐடி விங்கிற்குப் போனது. அப்படியானால் யாருக்கு வேலை செய்கிறீர்கள் நீங்கள். காளியம்மாவைப் பற்றிய பேச்சையெல்லாம் வெட்டி ஒட்டி பரப்புனது என்ன வகையான நேர்மை, ஒழுக்கம். மற்ற தலைவர்களுடைய போன் உரையாடல்களை எல்லாம் எடுத்து வெளியிடுவீர்களா? உங்க குடும்பத்து பெண்களுக்கு மட்டும் மானம், அபிமானம், தன்மானம் எல்லாம் இருக்கிறது எங்களுக்கு இல்லையா?’’ எனக் கேள்வி எழுப்பிய சீமான், தமிழ்நாடு தேர்வாணையத்தலைவராக(TNPSCE) நியமிக்கப்பட்டிருக்கும் பிரபாகரன், நாடாளுமன்றத் தேர்தலில் கோவை பாஜக வேட்பாளரான அண்ணாமலைக்கு வேலைபார்த்தவர். அதற்கானப் பரிசுதான் இந்தப் பதவி என குற்றம் சாட்டினார். 

முதலமைச்சர் நாளை வெளிநாடு செல்வது தொடர்பாகவும், ரஜினியை எதிர்த்து அவரை ‘’பல் இல்லாதவர்’’ என துரைமுருகன் விமர்சித்தது தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட ‘’நண்பர்கள் அவர்கள் ஒருவரை ஒருவர் பேசிக்கொண்டனர். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை’’ என்ற சீமான் ‘’அண்ணா காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர் துரைமுருகன். அவரைப் படிக்கவைத்தது எம்ஜிஆர்தான். ஆனால், எம்ஜிஆர் கட்சியில் அவர் இல்லை. கருணாநிதிக்கு அவ்வளவு உண்மையாக இருந்தவர். விசுவாசமாக இருந்தவர். இப்போது முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போது இடைக்கால முதல்வராக அந்த மூத்த அமைச்சருக்குப் பதவி கொடுப்பதுதான் மரியாதை. ஆனால், அந்த பதவிகூட உங்க மகனுக்குத்தான் கொடுப்பீங்கன்னா அது எப்படி நியாயம்'’ எனப் பேசினார் சீமான்.  

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com